என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வீரர்"

    • அவர் கோச் உதவியாளர் சுபைர் என்பவரிடம் ஒரு போர்வை மற்றும் படுக்கை விரிப்பைக் கேட்டார்.
    • இரத்தப்போக்கு காரணமாக ஜிகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ரெயில் ஏசி கோச்சில் போர்வை கேட்டதற்கு ராணுவ வீரரை கோச் உதவியாளர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ராணுவ வீரர் ஜிகர் சவுத்ரி விடுப்பில் வீடு செல்வதற்காக இந்த மாதம் 2 ஆம் தேதி, ஜம்மு தாவி-சபர்மதி எக்ஸ்பிரஸின் 2nd ஏசி கோச்சில் சொந்தமாநிலமான குஜராத்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.

    பயணத்தின் நடுவில், அவர் கோச் உதவியாளர் சுபைர் என்பவரிடம் ஒரு போர்வை மற்றும் படுக்கை விரிப்பைக் கேட்டார். படுக்கை விரிப்பு கொடுத்த சுபைர், போர்வை கொடுக்க மறுத்துவிட்டார்.

    இந்த விஷயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுபைர், தன்னிடம் இருந்த கத்தியால் ஜிகர் சவுத்ரியைத் சரமாரியாக குத்தினார். கடுமையான இரத்தப்போக்கு காரணமாக ஜிகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    டிக்கெட் பரிசோதகரின் புகாரின் அடிப்படையில், ரெயில்வே போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து பிகானர் ரெயில் நிலையத்தில் வைத்து கோச் உதவியாளர் சுபைரை கைது செய்தனர். சுபைர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர் என்றும் அவரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. 

    இதுபற்றிய பற்றிய புகாரைப் பெற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையம், ரெயில்வே வாரியத் தலைவர் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் இந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. 

    • ஆஷிஷ் குமார் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆபரேஷன் அலர்ட் நடவடிக்கையின்போது வீரமரணமடைந்தார்.
    • பாரம்பரியமாக ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் வீரர்கள் செய்தனர்.

    இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த ஒரு பெண்ணின் திருமணம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

    இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள பர்லி கிராமத்தில் ஆராதனா என்ற அந்த பெண்ணின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.

    அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரராக பணியில் இருந்த ஆராதனாவின் அண்ணன் ஆஷிஷ் குமார் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆபரேஷன் அலர்ட் நடவடிக்கையின்போது வீரமரணமடைந்தார்.

    இந்நிலையில் அண்ணன் இன்றி ஆராதனா திருமணம் நடக்கக்கூடாது என்று கருதிய ஆஷிஷ் குமார் பணியாற்றிய படைப்பிரிவில் உடன் பணியாற்றிய வீரர்கள் இமாசலப் பிரதேசம் புறப்பட்டனர்.

    ஆராதனாவுக்கு அண்ணனாக முன்னின்று அவர்கள் அனைத்துக் கடமைகளையும் செய்தனர். மணமகனை திருமண மேடைக்கு அழைத்துச் செல்வது, சடங்குகள் முடியும் வரை அருகில் நிற்பது, பின்னர் புகுந்த வீட்டுக்குச் செல்லும் போதும் கூடச் செல்வது வரை, பாரம்பரியமாக ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் வீரர்கள் செய்தனர்.

    இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சகோதரனின் பாசத்தையும், பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் விதமாக, வீரர்கள் ஆராதனாவிற்கு திருமணப் பரிசாக நிலையான வைப்புத் தொகை (Fixed Deposit) இருப்பை வழங்கினர்.

    வீரர்களின் இந்த செயல், திருமணத்துக்கு வந்திருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    இதுபற்றி வீரர்களிடம் கேட்கையில், "ஆராதனாவிற்கு அண்ணனாக நின்று ஆஷிஷின் நினைவைப் போற்றுவது எங்களது தார்மீகக் கடமை" என்று பதிலளித்தனர்.

    • பாகிஸ்தானியர்களால் அவனைக் கொல்ல முடியவில்லை, ஆனால் நம் சொந்தப் படைகள் அவன் உயிரைப் பறித்துவிட்டன என்று அவரின் தந்தை தெரிவித்தார்.
    • லடாக்கில் நடந்த இந்தக் கொலைகள் குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    லடாக்கில் மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை லேவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் உடனான மோதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களில் முன்னாள் ராணுவ வீரரான ட்சேவாங் தார்ச்சின் என்பவரும் ஒருவர். 1999 முதல் 2017 வரை அவர் ராணுவத்தில் பணியாற்றினார். சியாச்சின் பனிமலையில் பணியாற்றியவர் ஆவார். கார்கில் போரில் அவர் பங்குபெற்றார். அவரது தந்தையும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.

    மகன் இறப்பு குறித்து தந்தை அளித்த பேட்டியில், "என் மகன் ஒரு தேசபக்தன். அவன் கார்கில் போரில் போராடினான். மூன்று மாதங்கள் போர்முனையில் இருந்தான்.

    டா டாப் மற்றும் டோலோலிங்கில் பாகிஸ்தானியர்களுடன் சண்டையிட்டான். பாகிஸ்தானியர்களால் அவனைக் கொல்ல முடியவில்லை, ஆனால் நம் சொந்தப் படைகள் அவன் உயிரைப் பறித்துவிட்டன" என்று ஆதங்கத்துடன் கூறினார்.

    அவரின் பேட்டியை பகிர்ந்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், "தந்தை ராணுவத்தில், மகன் ராணுவத்தில் - தேசபக்தி அவர்களின் இரத்தத்தில் ஊறுகிறது.

    லடாக்கிற்காகவும் அவரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக பாஜக அரசு இந்த துணிச்சலான தேச மகனை சுட்டுக் கொன்றது. 

    தந்தையின் வலி நிறைந்த கண்கள் ஒரு கேள்வியைக் கேட்கின்றன: இன்று தேசத்திற்கு சேவை செய்ததற்கான வெகுமதி இதுதானா?

    லடாக்கில் நடந்த இந்தக் கொலைகள் குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

    மோடி ஜி, நீங்கள் லடாக் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டீர்கள். அவர்கள் தங்கள் உரிமைகளைக் கோருகிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் - வன்முறை மற்றும் பயத்தின் அரசியலை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • சுங்கச்சாவடியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், ராணுவ வீரர் காரில் இருந்து இறங்கிய விசாரித்துள்ளார்.
    • அப்போது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் அவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    உத்தர பிரதேசம் மாநிலம் மீரட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் ராணுவ வீரர் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருபவர் கபில் கவாத். இவர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீநகரில் பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார். விடுமுறை முடிந்த நிலையில் டெல்லிக்கு வாகனம் மூலம் சென்று அங்கிருந்து ஸ்ரீநகருக்கு விமானத்தில் செல்ல முடிவு செய்தார்.

    தனது உறவினர் உடன் காரில் சென்றபோது, மீரட்டில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்கள் அதிகமாக நின்றுள்ளது. விமான நிலையத்திற்கு செல்ல தாமதம் ஏற்பட்டதால் கபில் கவாத் கீழே இறங்கி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் பேசியுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அவரை தாக்கினர். அத்துடன் அங்கிருந்து ஒரு கம்பியில் கட்டிவைத்து கடுமையாக அடித்து உதைத்தனர்.

    இது தொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வங்கதேச குடிமக்கள் எனக்கூறி இந்திய குடியுரிமை ஆவணங்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
    • அத்துமீறிய கும்பலில் சீருடையில் இல்லா காவலர்கள் இருந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டினர்.

    மகாராஷ்டிரா மாநிலம் பயனே நகரில் கார்கில் போர் வீரர் ஹக்கிமுதீன் ஷேக் (58) வீட்டுக்குள் 60 பேர் கொண்ட கும்பல் புகுந்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கார்கில் போர் வீரர் வீட்டில் புகுந்த கும்பல், அவர்களை வங்கதேச குடிமக்கள் எனக்கூறி இந்திய குடியுரிமை ஆவணங்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    அத்துமீறிய கும்பலில் சீருடையில் இல்லா காவலர்கள் இருந்ததாக ஹக்கிமுதீன் ஷேக் குடும்பத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

    சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

    • பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பா மலை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டார்.
    • நீரில் மூழ்கிக் கொண்டிருந்த சுப்பாவை காப்பாற்ற லெப்டினன்ட் சஷாங்க் திவாரி தண்ணீரில் குதித்தார்.

    சிக்கிமில் ஆற்றில் விழுந்த சக ராணுவ வீரரை காப்பாற்ற முயன்றபோது, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு இளம் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

    இறந்தவர் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த லெப்டினன்ட் சஷாங்க் திவாரி ஆவார். 23 வயதான சஷாங்க் திவாரி, இந்திய ராணுவத்தின் சிக்கிம் ஸ்கவுட்ஸில் சேர்ந்து ஆறு மாதங்கள் மட்டுமே ஆகிறது.

    நேற்று காலை 11 மணியளவில் ஒரு மரப் பாலத்தைக் கடக்கும்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் கால் தவறி ஆற்றில் விழுந்தார்.

    பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பா மலை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டார்.பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பா மலை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டார். நீரில் மூழ்கிக் கொண்டிருந்த சுப்பாவை காப்பாற்ற லெப்டினன்ட் சஷாங்க் திவாரி தண்ணீரில் குதித்தார்.

    மற்றொரு சிப்பாய் நாயக் காட்டேலும் குதித்தார். அவர்கள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த அக்னிவீரை மீட்டனர். சுப்பா பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டபோதும், லெப்டினன்ட் சஷாங்க் திவாரி பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

    அவரது உடல் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு 800 மீட்டர் கீழ்நோக்கி கண்டெடுக்கப்பட்டது. அவரது மறைவுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார். 

    • பாகிஸ்தானின் தாக்குதலின் போது ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி உயிரிழந்தார்.
    • பவன் கல்யாண் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஆந்திராவை சேரந்த முடவத் முரணி நாயக் என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். இவர் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணைந்தவர்.

    இந்நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலின் போது உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக்கின் உடலுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    மேலும், முரளியின் குடும்பத்திற்கு பவன் கல்யாண் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

    • பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
    • பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

    ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தானில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக ஏப்ரல் 23 ஆம் தேதி பஞ்சாபில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவர் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதாக பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர். இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவரை ஒப்படைக்க பாகிஸ்தான் ராணுவம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • காம்போஜ் இன்ஸ்டாகிராம் மூலமாக சுக்சரண் சிங் உடன் பழக்கமாகி குண்டு தயாரிக்க கற்றுக்கொள்வது வரை சென்றுள்ளார்.
    • அவர் 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

    பஞ்சாப் மாநிலம் ஜலத்தினரில் யுடியூபர் ஒருவரின் வீட்டில் கடந்த மாதம் மர்ம நபர் கையெறி குண்டை (GRENADE) வீசி எறிந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிக்கவில்லை. குண்டு வீசிய மர்ம நபர் ஹர்திக் காம்போஜ் என்று அடையாளம் காணப்பட்டார்.

    காம்போஜிடம் பஞ்சாப் போலீஸ் நடத்திய விசாரணையில் அவருக்கு GRENADE தயாரிக்க ஜம்மு காஷ்மீரில் இருந்து பஞ்சாபின் முக்த்சார் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுக்சரண் சிங் என்பவர் ஆன்லைனில் பயிற்சி அளித்தது தெரியவந்தது.

    காம்போஜ் இன்ஸ்டாகிராம் மூலமாக சுக்சரண் சிங் உடன் பழக்கமாகி குண்டு தயாரிக்க கற்றுக்கொள்வது வரை சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று ராணுவ வீரர் சுக்சரண் சிங் பஞ்சாப் போலீசார் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். பஞ்சாபில் சமீக காலமாக குண்டுவீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பஞ்சாப் ரெஜிமென்டில் பணி செய்து வந்தார்.
    • இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    திருநந்திக்கரை வியாலிவிளையைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 பேரும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள்.இவரது மகன் விஜய் (வயது 24).

    கடந்த 2020-ம் வருடம் இந்திய ராணுவத்தில் சேர்ந்த இவர் பயிற்சி முடித்து பஞ்சாப் ரெஜிமென்டில் பணி செய்து வந்தார். கடந்த 4 -ந் தேதி (வெள்ளிக்கிழமை) இவர் சொந்த ஊருக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தார்.

    இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை மராட்டிய மாநிலம் சந்திரப்பூர் மாவட்டம் பத்ராவதி என்ற இடத்தில் ரெயில் தண்டவாளம் பகுதியில் ரத்தவெள்ளத்தில் இவர் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும், அவரது சடலம் பத்ராவதி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவரது குடும்பத்தினருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது.

    இந்த தகவலை கேட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். இதைத் தொடர்ந்து விஜயின் மூத்த சகோதரரும், ராணுவ வீரருமான விஷ்ணு நேற்று முன்தினம் இரவு சம்பவ நடந்த பத்ராவதிக்கு கிளம்பிச் சென்றார். இந்நிலையில் விஜயின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் இன்று காலையில் திருவனந்தபுரம் வழியாக சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இன்று இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    • சாதாரனமாக காய்கள் ஒரு கிலோ கொண்டதாக இருக்கும்
    • அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதனை வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.

    கன்னியாக்உமரி:

    திருவட்டார் அருகே மாத்தூர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராதாகிருஷ்ணன் (வயது 48). இவர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு விவசாய தொழில் செய்து வருகிறார். அருமனை பகுதியில் அன்னாசி பயிர் இடப்பட்டு விவசாயம் செய்துவந்தார்.

    இவரது தோட்டத்தில் 5½ கிலோ எடையில் அன்னாசி காய்த்தது. சாதாரனமாக காய்கள் ஒரு கிலோ கொண்டதாக இருக்கும். இந்த மாதிரி அன்னாசி காய்ப்பது மிக அபூர்வம். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதனை வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.

    • தாக்குதலில் படுகாயமடைந்தவர் நெய்யூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் கடுக்கா விளையை சேர்ந்தவர் தானேஸ்ராஜ் (வயது 53). இவர் அசாமில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகி றார்.

    இவரது மனைவி ரம்யா. கல்லுக்கூட்டம் சந்திப்பில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். இதன் திறப்பு விழாவுக்கு வாட்ஸ் அப் குரூப்பில் தானேஸ் ராஜின் நண்பர் ஆதரவு கருத்துக்களை பதிவிட்டார்.

    இதற்கு வேம்படி விளை யை சேர்ந்த ஜாப்ரி ஜாண் (27) எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் அவர், தேனேஸ்ராஜின் நண்பர் ஆடினார்விளையில் செல்லும்போது வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதனை தேனேஸ்ராஜ் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜாப்ரி ஜாண் கீழே கிடந்த கல்லை எடுத்து தேனேஸ்ராஜின் தலையில் அடித்து மிரட்டல் விடுத்தார். தாக்குதலில் படுகாய மடைந்த தேனேஸ் ராஜ் நெய்யூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து குளச்சல் போலீசார் ஜாப்ரி ஜாண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×