என் மலர்
நீங்கள் தேடியது "army soldier"
- வங்கதேச குடிமக்கள் எனக்கூறி இந்திய குடியுரிமை ஆவணங்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
- அத்துமீறிய கும்பலில் சீருடையில் இல்லா காவலர்கள் இருந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டினர்.
மகாராஷ்டிரா மாநிலம் பயனே நகரில் கார்கில் போர் வீரர் ஹக்கிமுதீன் ஷேக் (58) வீட்டுக்குள் 60 பேர் கொண்ட கும்பல் புகுந்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்கில் போர் வீரர் வீட்டில் புகுந்த கும்பல், அவர்களை வங்கதேச குடிமக்கள் எனக்கூறி இந்திய குடியுரிமை ஆவணங்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அத்துமீறிய கும்பலில் சீருடையில் இல்லா காவலர்கள் இருந்ததாக ஹக்கிமுதீன் ஷேக் குடும்பத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
- ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
- நான் என்னுடய X வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன்.
ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாட்டை கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து வரும் என்னுடைய உயிரினும் மேலான ராணுவ வீரர்களை நான் என்றும் வணங்குபவன் அவர்களின் தியாகத்தை வணங்குபவன் .
என்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க.வின் பேரணி குறித்து கேட்டபோது அது நாடகம் அவர்கள் மத்திய அரசையும் பாராட்டாமல் நாடகம் போடுகிறார்கள் என்று சொல்லியதை தி.மு.க தொலைக்காட்சிகள் என்னுடைய பேச்சை திரித்து போட்டுவிட்டார்கள் .
நான் என்னுடய எக்ஸ் வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன்.
ஆனாலும் இராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருக்கு மேயானால் அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய குடும்பம் முன்னால் இன்னால் இராணுவ வீரர்களின் குடும்பம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்!!!!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாகிஸ்தானின் தாக்குதலின் போது ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி உயிரிழந்தார்.
- பவன் கல்யாண் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஆந்திராவை சேரந்த முடவத் முரணி நாயக் என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். இவர் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணைந்தவர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலின் போது உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக்கின் உடலுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும், முரளியின் குடும்பத்திற்கு பவன் கல்யாண் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
- பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஏப்ரல் 23 ஆம் தேதி பஞ்சாபில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவர் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதாக பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர். இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவரை ஒப்படைக்க பாகிஸ்தான் ராணுவம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
- சரக்கு வேன் மோதி ராணுவ வீரர் பரிதாப இறந்தார்.
- மகன் கண் முன்னே பலியான சம்பவம் திருமங்கலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது42). இவர் டேராடூனில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், சஞ்சய் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சஞ்சய் பிளஸ்-1 படித்து வருகிறார்.
தர்மலிங்கம் விடுமுறை கிடைக்கும் போது ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துச்செல்வார். அதேபோல் கடந்த 17-ந் தேதி விடுமுறை எடுத்துகொண்டு சொந்த ஊருக்கு வந்தார்.
அவரது தாய் திருமங்கலம் அருகே உள்ள கல்லனை கிராமத்தில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக தர்மலிங்கம் நேற்று இரவு தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
விடத்தக்குளம்-எட்டுநாழி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது அவர்களது மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வேகமாக வந்த மினி சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தர்மலிங்கம் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவரது மகன் சஞ்சய்க்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து தர்மலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரர், விபத்தில் சிக்கி மகன் கண் முன்னே பலியான சம்பவம் திருமங்கலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
- செல்வகுமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
- கால் தடுக்கி விழுந்ததில் செல்வக்குமாருக்கு பின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டை பெத்தேல்நகர் காலனி குடியிருப்பை சேர்ந்தவர் இசக்கிதுரை. இவரது மகன் செல்வகுமார் (வயது28). ராணுவ வீரரான இவர் அசாமில் பணிபுரிந்து வந்தார்.
தவறி விழுந்து சாவு
இவருக்கு திருமணமான நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. தற்போது செல்வகுமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று இரவு செல்வகுமார், வீட்டின் படிக்கட்டில் கால் தடுக்கி விழுந்துள்ளார். இதில் செல்வக்குமாருக்கு பின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் தனது தாயாரிடம் நலமாக இருப்பதாக கூறிவிட்டு தனது அறைக்குள் சென்று கட்டிலில் படுத்து உள்ளார். இதன் பின்னர் செல்வகுமாரை அவரது தாய் சாப்பிடுவதற்காக கூப்பிட்ட போது அவர் எழுந்திருக்கவில்லை. அங்கு சென்று பார்த்த போது அவர் மயக்க நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மணிப்பூரில் விடுமுறையில் ராணுவ வீரர் வீட்டுக்கு வந்தார்.
- அவரை துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்துள்ளனர்.
புதுடெல்லி:
மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் வசித்து வந்தவர் செர்தோ தங்தங் கோம். ராணுவத்தில் வீரராக பணியாற்றிய இவர் விடுமுறையில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் நேற்று காலை 10 மணியளவில் கோமை கடத்திச் சென்றனர். அப்போது, அவரது 10 வயது மகன் இதனைப் பார்த்துள்ளான்.
இதுதொடர்பாக கோமின் மகன் போலீசாரிடம் கூறுகையில், 3 பேர் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் இருவரும் வீட்டின் முகப்பு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த மர்ம நபர்கள் கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து கோமின் தலையில் வைத்து, வெள்ளை நிற வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றனர் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கோமின் உடல் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் மோங்ஜாம் பகுதியில் இருந்து கிழக்கே உள்ள குனிங்தெக் என்ற கிராமத்தில் இருந்து இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலை சகோதரர் மற்றும் உறவினர் அடையாளம் காட்டினர். அவரது தலையில் துப்பாக்கி குண்டு காயம் ஒன்று காணப்பட்டது.
ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்படும் என ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் செல்லம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவரது மகள் அன்புச்செல்வி (வயது19). நர்சிங் பயிற்சி முடித்துள்ள இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் அன்புச் செல்வி ஒரு புகார் கொடுத்தார்.
அதில் தங்கள் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மாரீஷ் வரன் (24) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தோம்.
அப்போது திருமண ஆசைகாட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பமானேன்.
இதுபற்றி மாரீஷ்வரனிடம் கூறி தற்போது திருமணம் செய்யக்கேட்டபோது மறுத்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராமலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). இவர் மேற்கு வங்காளத்தில் ராணுவத்தில் புணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த முருகலெட்சுமி (வயது 34) என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு பிரேம்நாத் (14), ஹரிபிரசாத் (10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கண்ணன் தனது குடும்பத்தினருடன் ஆண்டிப்பட்டி பாலாஜி நகரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் முருகலெட்சுமி குன்னூர் அருகே ஆற்றுப்பாலத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகலெட்சுமியின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது கணவர் கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார்.
பின்னர் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது மனைவிக்கும் வேறு ஒரு வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது. இது குறித்து எனக்கு தெரியவரவே நான் என் மனைவியை கண்டித்தேன். ஆனால் அவர்கள் கள்ளத் தொடர்பு நீடித்து வந்தது.
மேலும் அந்த வாலிபரை 2-வது திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் முருகலெட்சுமி வசித்து வந்தார். எனது மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை எனது பெயரில் மாற்ற முயன்றேன். இதற்காக முருகலெட்சுமியிடம் கேட்ட போது அவர் மறுத்து விட்டார்.
நேற்று முன்தினம் எனது மகன்களின் பள்ளி சான்றிதழ்களை வாங்குவதற்காக முருகலெட்சுமி அவர்கள் படித்த பள்ளிக்கு வந்திருந்தார். இதை அறிந்த நான் அங்கு சென்று முருகலெட்சுமியை நைசாக பேசி சமாதானம் செய்து ஆட்டோவில் அழைத்து வந்தேன். பின்னர் ராமலிங்காபுரத்தில் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.
அதன் பிறகு எனது தந்தை சாமிக்கண்ணு, தாய் ராஜம்மாள் ஆகியோர் உதவியுடன் முருகலெட்சுமியின் உடலை ஆற்றில் வீசி விட்டேன்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து போலீசார் மனைவியை கொலை செய்த கண்ணன் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்தனர்.
அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவி சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
பெரும்பாலான வெளிநாட்டினர் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவுகின்றனர்.
அதை தடுக்க மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக எல்லை நெடுகிலும் ராணுவத்தை நிறுத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கடந்த 31-ந்தேதி (புதன்கிழமை) 5200 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எல்லையில் மேலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட உள்ளனர்.
மொத்தம் 15 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டு அவர்கள் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே 5200 வீரர்கள் அனுப்பப்பட்ட நிலையில் மேலும் 8 ஆயிரம் வீரர்கள் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மெக்சிகோ எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் அங்கு பணியில் இருக்கும் சுங்க இலாகா மற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு துணையாக செயல்படுவார்கள். இவர்கள் தவிர மீதமுள்ளவர்கள் படிப்படியாக அனுப்பப்படுவார்கள் என ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இது ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களை விட அதிகம் என்றும் அரசியல் லாபத்துக்காக டிரம்ப் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதை ராணுவ மந்திரி ஜிம் மாத்தீஸ் மறுத்துள்ளார். #Trump #MexicoBorder
சேதராப்பட்டு:
புதுவை நெட்டப்பாக்கத்தை அடுத்த கல்மண்டபம் பி.எஸ்.என்.எல். வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). இவர் சென்னை ஆவடியில் ராணுவ தளவாடம் தயாரிக்கும் தொழிற்சாலையில் துணை ராணுவ வீரராக உள்ளார்.
ராஜேந்திரன் தனது வீட்டின் அருகில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று இவர் பழைய வீட்டில் விலை உயர்ந்த செல்போனை வைத்திருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த செல்போனை திருடிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
அப்போது அக்கம் பக்கத்தினர் அந்த நபரை பிடித்து நெட்டப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் செல்போனை திருடிய வாலிபரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர் வில்லியனூரை அடுத்த உறுவையாறை சேர்ந்த முருகன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே குலாப்போஸ்ட் என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் உள்ள சாலையில் ராணுவ வீரர்கள் சென்றபோது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் அவர்களது கால்கள் பட்டதும், அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கு உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒருவர் பலியானார். மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்ணிவெடி தாக்குதலில் பலியான ராணுவ வீரர் பெயர் தல்பிர்சிங் என்பது பின்னர் தெரியவந்தது. #ArmySoldier #Killed #LanmineExplosion






