என் மலர்

    நீங்கள் தேடியது "nurse harassment"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருமண ஆசைகாட்டி நர்சை பாலியல் பலாத்காரம் செய்ததாக ராணுவ வீரர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் செல்லம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவரது மகள் அன்புச்செல்வி (வயது19). நர்சிங் பயிற்சி முடித்துள்ள இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் அன்புச் செல்வி ஒரு புகார் கொடுத்தார்.

    அதில் தங்கள் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மாரீஷ் வரன் (24) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தோம்.

    அப்போது திருமண ஆசைகாட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பமானேன்.

    இதுபற்றி மாரீஷ்வரனிடம் கூறி தற்போது திருமணம் செய்யக்கேட்டபோது மறுத்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உறவினர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்குட்பட்ட நெடுமதுரையைச் சேர்ந்த 21 வயது நர்சு, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், அண்ணன் முறை உறவினரான முருகேசன் (45) கடந்த பல ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், நேற்று மதுரை ஆஸ்பத்திரியில் பணி முடித்து வந்தபோது மீண்டும் பாலியல் தொல்லை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து விசாரித்த போலீசார் பெற்றோரை அழைத்து வரும்படி பெண்ணிடம் கூறி உள்ளனர். அவர் வீட்டில் சென்று தெரிவித்ததும், பெண்களின் தந்தை, உறவினர் முருகேசனிடம் சென்று தட்டிக்கேட்டனர். 

    அப்போது முருகேசன் அவரது மனைவி பாண்டியம்மன் உறவினர்கள் சுப்பிரமணி, மலர், பாலமுருகன், கிருமி ஆகிய 6 பேர் சேர்ந்து  நர்சை தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூடக்கோவில் போலீசில் பெண்ணின் தந்தை புகார் செய்தார்.
    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி முருகேசன் உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
    ×