search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mexico border"

    • கனடா மற்றும் மெக்சிகோ எல்லையில் இருந்து இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர்.
    • இந்த ஆண்டு கனடா எல்லை வழியாக நுழைய முயன்ற 30 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.

    வாஷிங்டன்:

    கனடா மற்றும் மெக்சிகோ எல்லையில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.

    2020-ம் ஆண்டில் 19,883 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    2021-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்து, 30,662 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 2022-ம் ஆண்டு சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததற்காக 63,927 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டு அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து சுமார் 96,917 இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என அமெரிக்க சுங்க மற்றும் எல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.

    இது அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரம். 2019-20-ம் ஆண்டு புள்ளி விவரத்துடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிகமாகும்.

    கனடா எல்லை வழியாக நுழைய முயன்ற 30 ஆயிரம் பேரும், மெக்சிகோ எல்லை வழியாக நுழைய முயன்ற 41 ஆயிரம் இதில் அடக்கம் என தெரிவித்துள்ளது.

    சட்ட விரோதமாக குடியேற வருகிற அனைவரையும் மெக்சிகோ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அடுத்த வாரம் எல்லையை மூடி விடுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். #DonaldTrump #MexicoBorder
    வாஷிங்டன்:

    அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் ஏராளமானோர் புகுந்து விடுகின்றனர். இதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் மிகப்பெரிய எல்லைச்சுவர் கட்டுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

    ஆனாலும் மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் மக்கள் நுழைவது தொடர்கிறது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி கடந்த 28-ந் தேதி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், “நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்களை தடுத்து நிறுத்துவதற்கு மெக்சிகோ எதையும் செய்வதில்லை. அவர்கள் பேசத்தான் செய்கிறார்களே தவிர செயலில் காட்டுவதில்லை. ஹோண்டுராஸ், கவுதமாலா, எல் சல்வேடார் நாடுகளைச் சேர்ந்தவர்கள் நமது பணத்தை பல்லாண்டு காலமாக எடுத்துச்செல்கின்றனர். தெற்கு எல்லையை மூடி விட எண்ணுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

    டிரம்ப் டுவிட்டரில் நேற்று முன்தினம் மேலும் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், “சட்ட விரோதமாக குடியேற வருகிற அனைவரையும் மெக்சிகோ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அடுத்த வாரம் எல்லையை மூடி விடுவேன் அல்லது எல்லையின் பெரும்பகுதியை மூடி விடுவேன்” என கூறி உள்ளார். #DonaldTrump #MexicoBorder
    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்த கவுதமாலா நாட்டைச் சேர்ந்த அகதிகளில் 7 வயது சிறுமி ஒருத்தி அமெரிக்க காவலில் இருந்தபோது பரிதாபமாக மரணம் அடைந்தாள்.
    வாஷிங்டன் :

    ஹோண்டுராஸ், கவுதமாலா, எல் சல்வடார் போன்ற மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டில் நிலவுகிற வறுமை, வன்முறை, துன்புறுத்தல் போன்றவற்றின் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

    அவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்து அகதிகளாக தஞ்சம் கேட்க முடியாதபடிக்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாக உத்தரவு போட்டார். ஆனால் அதற்கு, சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டு தடை போட்டது. இருப்பினும் அமெரிக்காவினுள் நுழைகிற மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த வாரம் கவுதமாலா நாட்டைச் சேர்ந்தவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 வயது சிறுமி ஒருத்தியும், அவளது தந்தையும் அடங்குவர்.

    ஆனால் அந்த சிறுமி அமெரிக்க காவலில் இருந்தபோது பரிதாபமாக மரணம் அடைந்தாள். அவள் பல நாட்களாக உணவோ, தண்ணீரோ கிடைக்காத நிலையில்தான் மரணம் அடைந்திருக்கிறாள் என்ற நெஞ்சை உலுக்கும் தகவலை எல்லை அதிகாரிகள் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

    இருப்பினும் அந்தச் சிறுமியின் மரணம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் முறைப்படி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. இந்த சம்பவம், அகதிகள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வெளிநாட்டினர் ஊடுருவலை தடுக்க மெக்சிகோ எல்லையில் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். #Trump #MexicoBorder
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவி சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    பெரும்பாலான வெளிநாட்டினர் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவுகின்றனர்.

    அதை தடுக்க மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக எல்லை நெடுகிலும் ராணுவத்தை நிறுத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி கடந்த 31-ந்தேதி (புதன்கிழமை) 5200 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எல்லையில் மேலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட உள்ளனர்.

    மொத்தம் 15 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டு அவர்கள் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே 5200 வீரர்கள் அனுப்பப்பட்ட நிலையில் மேலும் 8 ஆயிரம் வீரர்கள் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மெக்சிகோ எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அவர்கள் அங்கு பணியில் இருக்கும் சுங்க இலாகா மற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு துணையாக செயல்படுவார்கள். இவர்கள் தவிர மீதமுள்ளவர்கள் படிப்படியாக அனுப்பப்படுவார்கள் என ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    இது ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களை விட அதிகம் என்றும் அரசியல் லாபத்துக்காக டிரம்ப் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதை ராணுவ மந்திரி ஜிம் மாத்தீஸ் மறுத்துள்ளார். #Trump #MexicoBorder
    ×