search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US President trump"

    வெளிநாட்டினர் ஊடுருவலை தடுக்க மெக்சிகோ எல்லையில் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். #Trump #MexicoBorder
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவி சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    பெரும்பாலான வெளிநாட்டினர் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவுகின்றனர்.

    அதை தடுக்க மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக எல்லை நெடுகிலும் ராணுவத்தை நிறுத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி கடந்த 31-ந்தேதி (புதன்கிழமை) 5200 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எல்லையில் மேலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட உள்ளனர்.

    மொத்தம் 15 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டு அவர்கள் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே 5200 வீரர்கள் அனுப்பப்பட்ட நிலையில் மேலும் 8 ஆயிரம் வீரர்கள் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மெக்சிகோ எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அவர்கள் அங்கு பணியில் இருக்கும் சுங்க இலாகா மற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு துணையாக செயல்படுவார்கள். இவர்கள் தவிர மீதமுள்ளவர்கள் படிப்படியாக அனுப்பப்படுவார்கள் என ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    இது ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களை விட அதிகம் என்றும் அரசியல் லாபத்துக்காக டிரம்ப் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதை ராணுவ மந்திரி ஜிம் மாத்தீஸ் மறுத்துள்ளார். #Trump #MexicoBorder
    ×