என் மலர்
இந்தியா

எல்லை தாண்டிய பாகிஸ்தான் ராணுவ வீரர் - கைது செய்த இந்தியா
- பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஏப்ரல் 23 ஆம் தேதி பஞ்சாபில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவர் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதாக பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர். இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவரை ஒப்படைக்க பாகிஸ்தான் ராணுவம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story






