என் மலர்
நீங்கள் தேடியது "ராஜஸ்தான்"
- பட்டியல் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
- கடந்த சில நாள்களாக கடும் பணிச்சுமையால் மன அழுத்தத்தில் இருந்தார்.
ராஜஸ்தானின் பாரா பகுதியில் அரசு ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் 42 வயதான அனுஜ் கார்க். அவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக தோல்பூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அந்த வகையில் நேற்று இரவு 1 மணியளவில் வீட்டில் வைத்து வாக்காளர் பட்டியல் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில நாள்களாக கடும் பணிச்சுமைக்கு அவர் ஆளாகியிருந்ததாகவும், அதில் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகம், மேற்கு வங்கம், உட்பட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மரணங்கள் தொடர்ந்து வருகின்றன.
- ராஜஸ்தான் அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித் பணிபுரிந்து வருகிறார்.
- கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
2014 பேட்ச் ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஷிஷ் மற்றும் பாரதி தீட்சித் இருவரும் அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது ராஜஸ்தான் அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் திருமணம் செய்து கொண்டதிலிருந்து தான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தனது கணவர் ஆஷிஷ் துன்புறுத்துவதாக பாரதி தீட்சித் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சமீப காலமாக துன்புறுத்தல் அதிகரித்துள்ளது என்றும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பாரதி தனது புகாரில் தெரிவித்துள்ளார். பல குற்றவாளிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம், ஆஷிஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து தன்னை கடத்திச் சென்று பல மணி நேரம் சிறைபிடித்து வைத்திருந்ததாகவும், விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
புகாரை ஏற்று ஜெய்ப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு எதிரே வந்த 17 வாகனங்கள் மீது விபத்து ஏற்படுத்தியது.
- லாரி டிரைவரை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கோர சாலை விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.
நேற்று மதியம், ஜெய்ப்பூரில் லோகாமண்டி பகுதியில் உள ஹர்மதா என்ற இடத்தில், வேகமாக வந்த ஒரு காலி சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு எதிரே வந்த 17 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.
இந்த கோர விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் உள்ளூர் மக்கள், போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஜெய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர சோனி கூறியுள்ளார்.
விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் நடந்த இரண்டாவது பெரிய விபத்து இதுவாகும். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த மற்றொரு விபத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியதில் அதில் 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- 1,500 கிலோ எடை கொண்ட இந்த எருமை மாட்டின் விலை ரூ.21 கோடியாகும்.
- இதற்கு ஒரு நாள் தீவனத்துக்கே ரூ.1,500 செலவாகிறது
ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் புஷ்கர் கண்காட்சி நடைபெறுகிறது.
இதில் ஒட்டகம், குதிரை, எருமை மாடுகள் விற்பனை கண்காட்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் கால்நடை கண்காட்சி அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.
இந்த கண்காட்சியில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் அன்மோல் என்ற எருமை மாடு ஈர்த்தது. 'அன்மோல்' என்ற இந்த மாடு கருகருவென, வனப்புடன் இருந்தது. 1,500 கிலோ எடை கொண்ட இந்த எருமை மாட்டின் விலை ரூ.21 கோடியாகும்.
இதுகுறித்து அதன் உரிமையாளர் பால்மேந்திரா கில் கூறுகையில், 'இந்த மாட்டை வைத்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். மன்னரைப்போல பராமரிக்கப்படும் இந்த எருமைக்கு நாள்தோறும் பால், நெய், பருப்பு வகைகளோடு உலர் பழங்கள் உணவாக தருகிறேன். இதற்கு ஒருநாளைக்கு ரூ.1,500 செலவாகிறது' என்று பெருமையாக தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த கண்காட்சியில் வைரலான ரூ.21 கோடி மதிப்பிலான எருமை மாடு திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாபத்தின் பெயரில் விலங்குகளை கொடுமைப்படுத்துவதற்கு இது எடுத்துக்காட்டு என விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் அமிரா என்ற 9 வயது சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்தார்.
- சிறுமி தற்கொலை செய்துகொண்டது குறித்த தகவலை பள்ளி நிர்வாகம் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் அமிரா என்ற 9 வயது சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், மாணவி அமிரா கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளியின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
போலீசார் விசாரணையில், ஆசிரியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதால் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சிறுமி தற்கொலை செய்துகொண்டது குறித்த தகவலை பள்ளி நிர்வாகம் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறுமி பள்ளியின் 4வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று மாலை அனைவரும் வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
- ஆரம்பகட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஹலொடி பகுதியை சேர்ந்த 20 பேர் வேனில் பிகனீர் மாவட்டம் கோலயத் நகரில் உள்ள இந்து மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளனர்.
வழிபாட்டை முடித்துவிட்டு இன்று மாலை அனைவரும் வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது பலோடா மாவட்டத்தில் உள்ள மடோடாவில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியது.
இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 18 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்த அறிந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நொறுங்கிய வேனில் சிக்கிய காயமடைந்தவர்களை கிராம மக்களின் உதவியுடன் மீட்டனர். ஆரம்பகட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிவேகமாகச் சென்ற சுற்றுலாப் பேருந்தின் ஓட்டுநர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.
- பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ராஜஸ்தானில் தனியார் பேருந்து திடீரெனத் தீப்பிடித்த கோர விபத்தில்10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று மாலை, ஜெய்சால்மரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.
சில நிமிடங்களில், பேருந்து முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பலர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதவில், "ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் நான் மிகவும் துயரமடைந்துள்ளேன். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதம மந்திரி பேரிடர் நிவாரண நிதி (PMNRF) இலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.
- 14 க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ராஜஸ்தானில் தனியார் பேருந்து திடீரெனத் தீப்பிடித்த கோர விபத்தில்10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று மாலை, ஜெய்சால்மரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.
சில நிமிடங்களில், பேருந்து முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் 14 க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்துக் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, விபத்து நடந்த இடத்திற்கு நேரில் விரைந்தார்.
பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- பாகிஸ்தானின் பெண் ஏஜென்டின் ஹனி டிராப்பில் மங்கத் சிங் சிக்கியுள்ளார்.
- கடந்த 2 ஆண்டுகளாக மங்கத் சிங், பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட் உடன் தொடர்பில் இருந்துள்ளார்
பாகிஸ்தானின் ISI அமைப்புக்கு உளவு பார்த்ததாக மங்கத் சிங் என்பவரை ராஜஸ்தான் உளவுத்துறை கைது செய்தது.
மங்கத் சிங்கிடம் மேற்கொண்ட விசாரணையில், இஷா ஷர்மா என்ற போலி பெயர் கொண்ட பாகிஸ்தானின் பெண் ஏஜென்டின் ஹனி டிராப்பில் மங்கத் சிங் சிக்கியது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மங்கத் சிங், பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட் உடன் தொடர்பில் இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூருக்கு முன்னும், பின்னும் அல்வார் கண்டோன்மென்ட் பகுதியை மங்கத் சிங் உளவு பார்த்தது உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதங்களில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய்மான் சிங் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஆஸ்பத்திரி முழுவதும் தீ வேகமாகப் பரவியது. இதனால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக பதறியடித்து மருத்துவமனையை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 2 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 6 பேர் மூச்சு திணறியும் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும், இந்த தீவிபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களும் தீயில் எரிந்து நாசமானது.
தீ விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது.
தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா, நாடாளுமன்ற விவகார மந்திரி ஜோகராம் படேல் மற்றும் உள்துறை இணை மந்திரி ஜவஹர் சிங் பெதம் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தீ விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனை ஊழியர்கள் தகவல் எதுவும் தெரிவிக்காமல் ஓடிவிட்டதாக அவர்களிடம் குற்றம் சாட்டினர்.
தீவிபத்து குறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறும்போது, அறையில் இருந்து புகை வருவதைக் கண்டு உடனடியாக ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தோம், ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.
தீ விபத்து ஏற்பட்ட போது, அவர்கள் தான் முதலில் வெளியில் ஓடி வந்தனர். சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளின் நிலை குறித்து யாரும் எங்களிடம் எதுவும் கூற வில்லை.
தீ வேகமாக பரவியது. ஆனால் அதை அணைக்க எந்த உபகரணமும் இல்லை, தீயை அணைக்கும் கருவிகளும் இல்லை, சிலிண்டர்களும் இல்லை, தண்ணீர் வசதிகூட அங்கு இல்லை என்று கோபத்துடன் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மருத்துவக் கல்வித் துறை ஆணையர் இக்பால் கான் தலைமையிலான குழு விசாரணை நடத்த முதல்-மந்திரி பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
தீ விபத்துக்கான காரணங்கள், தீ விபத்துக்கான மருத்துவமனை நிர்வாகத்தின் நடவடிக்கைகள், தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் வெளியேற்றம் ஆகியவற்றை இந்தக் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- RUHS மருத்துவமனையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற 'சேவா பக்கவாடா' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில் நோயாளிகளுக்குப் பழங்கள், பிஸ்கட்டுகள் விநியோகிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெய்ப்பூர் RUHS மருத்துவமனையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற 'சேவா பக்கவாடா' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நோயாளிகளுக்குப் பழங்கள், பிஸ்கட்டுகள் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு பா.ஜ.க. பெண் தொண்டர் நோயாளிக்குக் கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டைப் புகைப்படம் எடுத்தவுடன் உடனடியாகத் திரும்பப் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக உதவி செய்வது போல நடித்த பெண் பாஜக தொண்டரின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
- முன்னாள் கணவருடன் பிறந்த குழந்தையை கேலி செய்ததால் விரக்தி.
- குழந்தையை கொலை செய்தால்தான் காதலுடன் வாழ முடியும் என்பதால் கொடூர முடிவு.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் அஞ்சலி (வயது 28). இவர் கணவரை விட்டு பிரிந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீரில் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தது.
அஞ்சலி அஜ்மீரில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணி புரிந்து வருகிறார். அதே ஓட்டலில் வேலைப் பார்க்கும் அல்கேஷ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியுள்ளது. இருவரும் Live-in பார்ட்னராக வசித்து வந்துள்ளது. இவர்களுடன் 3 வயது குழந்தையும் வசித்து வந்துள்ளது. அஞ்சலியின் குழந்தை அல்கேஷ்க்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. குழந்தையையும், அஞ்சலியையும் அல்கேஷ் கேலி செய்துள்ளார். இதனால் அஞ்சலிக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது.
அல்கேஷ் உடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்றால், தனது மகளை கொலை செய்ய வேண்டும் என அஞ்சலி முடிவு செய்துள்ளார். இதனால், குழந்தையை தாலாட்டு தூங்க வைத்துள்ளார். பின்னர் தோளில் தூக்கிக் கொண்டு வசித்து வந்த இடம் அருகே உள்ள ஏரிக்கு சென்றுள்ளா்ர. ஏரியில் பெற்ற குழந்தை என்ற கூட பார்க்காமல் தூக்கி வீசியுள்ளார்.
அத்துடன் நள்ளிரவில் குழந்தையை காணவில்லை என்று நடுரோட்டில் அங்கும் இங்குமாக அழைந்து தேடுவது போன்று நாடகமாடியுள்ளார். போலீசாருக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட, கிடுக்குப்பிடி விசாரணையில் அஞ்சலி குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அஞ்சலியை போலீசார் கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அஞ்சலியுடன் சேர்ந்து அல்கேஷும் குழந்தையை தேடியுள்ளார். அவருக்கு இந்த கொலையில் தொடர்ந்து உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






