search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Girl Child"

  • வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 37 வயதான பழங்குடியினப் பெண், வறுமையின் காரணமாக பிறந்த பெண் குழந்தையை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • ஏற்கனவே 4 குழந்தைகளுக்கு தாயான மோர்மதியின் கணவர் 5 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் கடுமையான வறுமையில் குடும்பம் இருந்துள்ளது.

  வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 37 வயதான பழங்குடியினப் பெண், வறுமையின் காரணமாக பிறந்த பெண் குழந்தையை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவின் கந்தசேராவில் உள்ள தாராபன் காலனியைச் சேர்ந்த மோர்மதி திரிபுரா (39) என்ற பழங்குடியின பெண்ணுக்கு கடந்த மே 22 ஆம் தேதி வீட்டில் வைத்து நடந்த பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

  ஏற்கனவே 4 குழந்தைகளுக்கு தாயான மோர்மதியின் கணவர் 5 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் கடுமையான வறுமையில் குடும்பம் இருந்துள்ளது. ரேஷன் கார்டை அடைமானம் வைத்து குழந்தைகளைப் பராமரித்து வந்த மோர்மதி, தற்போது பிறந்த குழந்தையை ஹெஜமாராவில் உள்ள ஒரு தம்பதிக்கு ரூ. 5,000-க்கு விற்றுள்ளார்.

   

  முன்னதாக தனது கருவைக் கலைக்குமாறு மருத்துவரை மோர்மதி அணுகியுள்ளார்.ஆனால் மருத்துவர் அதற்கு மறுப்பு தெரிவித்து மோர்மதிக்கு தேவையான மருந்துகளை இலவசமாக வழங்கி வந்துள்ளார். இருப்பினும், குழந்தை பிறந்த பிறகு, வறுமை காரணமாகக் குழந்தையை விற்றுள்ளார்.

  இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு செயலாளருமான ஜிதேந்திர சவுத்ரி அரசுக்குக் கொடுத்த அழுத்தத்தால் குழந்தையை வாங்கிய தம்பதியரிடம் இருந்து பெண் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. வறுமை காரணமாக அப்பகுதியில் குழந்தைகளை விற்கும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜிதேந்திர சவுத்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

   

   

  • மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
  • உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் பன்னா லால்- அனிதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

  கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் 4 ஆண்டுகள் கழித்து கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

   

  உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் பன்னா லால்- அனிதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.அனிதா மீண்டும் கர்ப்பமான நிலையில் தனக்கு ஆண் குழைந்தையை பெற்றுத் தர வேண்டும் என்று பன்னா லால் அனிதாவுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.

  ஆண் குழந்தை பிறக்காவிட்டால் அனிதாவை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்து கொள்வேன்தொடர்ந்து மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அனிதாவுடன் இதுதொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில் அரிவாளால் அனிதாவின் வயிற்றை அறுத்து, ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பரிசோதிப்பதாக மிரட்டி, தப்பியோட முயன்ற அனிதாவை பிடித்து அரிவாளால் வயிற்றை வெட்டினார்.

  அனிதாவின் வயிற்றில் குடல்கள் வெளியே வரும் அளவுக்கு வெட்டு ஆழமாக இருந்துள்ளது. அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கடையில் வேலை செய்த அவளது சகோதரர் ஓடி வந்து அவளை காப்பாற்றினார். அவரை பார்த்ததும் பன்னா லால் அங்கிருந்து தப்பியோடினார்.

  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனிதா உயிர்பிழைத்த நிலையில் வயிற்றில் இருந்த ஆண் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. பன்னா லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் பன்னா லால், தன் பொய் வழக்குப் பதிவு செய்ய அனிதா தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக வாதிட்டது குறிப்பிடத்தக்கது. 

  • மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.
  • தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  நெல்லை:

  வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 34). கணவரை பிரிந்த இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

  சமீபத்தில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள அந்தோணியார் ஆலயம் அருகே யாசகம் எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டி ருந்த சந்தியா அந்த பகுதியில் இரவில் குழந்தையுடன் தூங்கினார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.

  இது தொடர்பாக தூத்துக்குடி தன் பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். குழந்தையை திருடிய மர்ம நபர்கள் யார் என்பதை அறிய 150-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது குழந்தையை கடத்திச் சென்ற 2 நபர்களின் புகைப்படங்களை தூத்துக்குடி மாவட்ட போலீ சார் வெளியிட்டுள்ளனர்.

  போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணியன் பாலச்சந்தர் தலைமையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை யினர் புகைப் படத்தை அடிப்படையாகக் கொண்டு 2 பேரையும் தேடி வருகின்றனர்.

  மேலும் புகைப்படத்தில் உள்ள நபர்களை யாரேனும் பார்த்தால் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
  • அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது.

  தகவல் தொழில் நுட்பத்தில் நாளுக்குநாள் வளர்ச்சி கண்டுவரும் காலக்கட்டத்தில் வாழ்ந்து வரும் நாம், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கிடைக்கப் பெறுகிறோம். இதன் காரணமாக எந்த ஒரு விஷயத்தையும் நாம் எளிதாக செய்து முடிக்க முடிகிறது.

  இதுபோன்ற வளர்ச்சிகளை கண்டு வியக்கும் நாம், சில விஷயங்களை கண்டு அதிர்ச்சியடைய வேண்டி இருக்கிறது. அதில் ஒன்று தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள். சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

  அதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த போதிலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன. ஆகவே அதனை கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டம்.

  சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகளின் பாதுகாப்பு மசோதா (POCSO)-2011 நம் நாட்டு நாடாளுமன்றத்தில் 2012-ம் ஆண்டு மே 22-ந்தேதி நிறைவேற்றப்பட்டது.

  2019-ம் ஆண்டில், போக்சோ சட்டம் திருத்தப்பட்டு மேலும் கடுமையாக்கப்பட்டது. இந்த திருத்தம் குறைந்தபட்ச தண்டனையை 7 முதல் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் வரை உயர்த்தியது. பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், குற்றத்தில் ஈடுபட்டவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும். தீவிர தாக்குதலுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.

  போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்து அனைத்து மாநிலங்களிலும் அது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையும் கிடைத்துள்ளது. ஆனால் போக்சோ வழக்குகள் அதிகரித்ததே தவிர, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்ததாக தெரியவில்லை.

  அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது. குட் டச், பேடு டச் என அனைத்து தொடுகைகளின் விவரத்தையும் சிறு குழந்தைகள் இன்று எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் பெரும்பாலான குழந்தைகளுக்கு தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றி அறிந்து கொண்டுள்ளனர் என்றால் அதை மறுக்கமுடியாது. இருந்தபோதிலும் போக்சோ சட்டம் பற்றி பள்ளி குழந்தைகள் எளிதில் தெரிந்துகொள்வதற்காக கேரள மாநில பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம் சேர்க்கப்படுகிறது.

  வருகிற கல்வியாண்டில் 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் பற்றிய பாடம் இடம்பெற உள்ளது. இந்த தகவலை கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் கூறியதாவது:-

  போக்சோ சட்டம் பற்றிய பாடம் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் கற்பிக்கப்படும். இது அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலும் சேர்க்கப்படும்.

  மேலும் 5 முதல் 10-ம் வகுப்பு வரை தொழிற்கல்வி சேர்க்கும் வகையில் பாடத்திட்டம் முழுமையாக திருத்தப்படும். 1,3,5,7,9 ஆகிய வகுப்பு பாடப் புத்தகங்களும் அடுத்த கல்வியாண்டில் மாற்றப் படும். 4,6,8,10 வகுப்புகளிலும் பாடத்திடம் அடுத்த ஆண்டு மாற்றப்படுகிறது.

  1-ம் வகுப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் செயல்பாட்டு புத்தகங்கள் உள்ளன. ஆசிரியர்களுக்கான புத்தகங்களும் தயாராகி வருகின்றன. மேலும் நாட்டிலேயே முதன்முறையாக பெற்றோருக்கான புத்தகங்களும் தயாராகிறது.

  புதிய பாடத்திட்டத்தில் விளையாட்டு, கழிவு பிரச்சினை, தூய்மை, குடிமை உணர்வு, சமநீதியுடன் கூடிய பாலின விழிப்புணர்வு, அறிவியல் உணர்வு, விவசாயம், மதச்சார்பின்மை உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. பாட சாலைகள் திறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  கேரள மாநிலத்தில் இதற்கு முன்பு விரிவான பாடத்திட்ட திருத்தம் 2007-ம் ஆண்டு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  • பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
  • தண்ணீர் கேனில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  பவானி:

  பீகார் மாநிலம் கைத்வா லியா மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார் என்கிற அருன்பாகத் (வயது 32). இவரது மனைவி சாந்தினி தேவி. இவர்களுக்கு மனிஷா குமாரி (11) மற்றும் போன்பி குமாரி என்ற ஒன்றை வயது பெண் குழந்தையும் உள்ளது. அருன்பாகத் தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவ ட்டம் சித்தோடு அடுத்த பூம்புகார் தெருவில் வசித்து வருகிறார்.

  இவர் கொங்கம்பாளையம்-கங்காபுரம் ரோட்டில் உள்ள ஒரு பிராசசிங் மில்லில் கடந்த 5 வருடமாக லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அருண் பாகத் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

  மூத்த மகள் பள்ளிக்கு சென்றுவிட்டார். வீட்டில் சாந்தினிதேவி மற்றும் அவரது ஒன்றை வயது குழந்தை சோன்பிகுமாரி மட்டும் இருந்தனர். பின்னர் சாந்தினிதேவி வீட்டில் தூங்கி உள்ளார். குழந்தை சோன்பி குமாரி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது.

  திடீரென தூக்கம் கலைந்து எழுந்த சாந்தினிதேவி வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரைத் தேடினார். பின்னர் வீட்டிற்கு பின்னால் சென்று பார்த்தார்.

  அப்போது பாத்திரங்கள் கழுவதற்காக தண்ணீர் ஊற்றி வைத்திருந்த ப்ளூ கலர் தண்ணீர் வாளிக்குள் குழந்தை சோன்பிகுமாரி தலைகீழாக தண்ணீரில் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சித்தோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

  இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் கேனில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுட்காலம் 74 வாரங்கள் அதிகரிக்கும்.
  • பெண் குழந்தைகளுக்கும், தந்தைக்கும் இடையேயான பந்தம் உணர்வுப்பூர்வமானது.

  பெண் குழந்தைகளுக்கும், தந்தைக்கும் இடையேயான பந்தம் உணர்வுப்பூர்வமானது. தந்தை மீது எப்போதுமே பெண் குழந்தைகள் அதிக பாசத்தை காண்பிப்பார்கள். பெண் குழந்தைகள் தந்தையின் ஆயுள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்பது போலந்தில் உள்ள ஜெகில்லோனியன் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

  ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுட்காலத்தில் சுமார் 74 வாரங்கள் அதிகரிக்கும். பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப அந்த வீட்டு தந்தையின் ஆயுளும் அதிகமாகும் என்கிறது, அந்த ஆய்வு.

  இதற்கு எதிர்மாறாக தாயின் ஆயுட்காலம் அமைந்திருக்கிறது. ஒரு வீட்டில் மகன் அல்லது மகள், அல்லது இருவரும் இருந்தால் தாயின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்கிறார்கள். அவரது ஆயுளையும் குறைக்கிறார்கள். சராசரியாக தாயின் ஆயுட்காலம் 95 வாரங்கள் குறையும் என்கிறது அந்த ஆய்வு.

  • விருதுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை யும், பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
  • பெண்க ளாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.

  விழுப்புரம்:

  ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி பயில உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீர தீர செயல் புரிந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) "தேசிய பெண் குழந்தை விருது" வழங்கப்பட்டு வருகிறது.

  இவ்விருதுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை யும், பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ் நாட்டை பிறப்பிட மாகவும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்ட பெண் குழந்தையாக இருக்க வேண்டும். இவ்விருத்திற்கு தகுதிக ளான கீழ்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான-தனித்துவமான செய்திருத்தல், சாதனை பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகிய வற்றிற்கு தீர்வு காண்ப தற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூல மாகவோ விழிப்பு ணர்வை எற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ப தை போன்ற செயல்களை பெண்க ளாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.

  விருதுக்கான விண்ணப் பங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலு வலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உட்பட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன்மொழி களுடன் மாவட்ட சமூகநல அலு வலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் சமூகநல ஆணையரகத்துக்கு பரிசீ லனைக்கு அனுப்பி வைக்க ப்படும். மாவட்டங்களி லிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வுகுழு மூலம் பரிசீலனை செய்யப்ப ட்டு அனைத்து தகுதிகள் பெற்ற பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு வரும் ஜனவரி 24-ந் தேதி மாநில விருது வழங்கப்படும்.

  இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செயல்படும் அறை எண்.26 மாவட்ட சமூக நல அலு வலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்பிக்க இறுதி நாள் 20.11.2023 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப் படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி தெரி வித்துள்ளார்.

  • வட்டார அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
  • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

  வெள்ளகோவில்

  வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று வட்டார அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர் கதிரவன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, இளம்வயதில் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

  இதில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

  • உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • போலீசார் சிசுக்களை இங்கு வீசி சென்றவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே உள்ள குப்பைத் தொட்டியை நாய்கள் சுற்றி வந்தபடி இருந்தன. இன்று காலை இவ்வழியாக சென்ற பொதுமக்கள் நாய்களை விரட்டி குப்பைத் தொட்டியை பார்த்தபோது 2 பெண் சிசுக்கள் கிடந்தன.

  இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விஷயம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் குப்பைத் தொட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடினர்.

  இது குறித்து நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பெண் சிசு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  குப்பைத் தொட்டி அருகே கிடந்ததால் சிசுக்களை நாய்கள் கடித்து குதறியுள்ளன. இதில் ஒரு சிசுவின் தலையை காணவில்லை. போலீசார் சிசுக்களை இங்கு வீசி சென்றவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

  அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் உள்ளதா? அதில் சிசுவை வீசிச் சென்றவர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். 2 பெண் சிசுக்களை வீசிச் சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை தேடி வருகின்றனர்.

  முறையற்ற உறவில் பிறந்த குழந்தைகளா அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது.
  • குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும்.

  உலகத்தில் எல்லா சமூகத்திலும், சாதி, மதம் என்கிற வித்தியாசமின்றி ஒட்டு மொத்தமாக ஒடுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு என்றால் அது பெண்ணினமேஆகும். தாமஸ்ராய்ட்டர்ஸ் ஆய்வின் முடிவின்படி உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி. கருவிலேயே பெண் சிசுவாக இருந்தால் கருச்சிதைவிலிருந்து, பிறந்தவுடன் பெண்குழந்தையாக இருந்தால் கள்ளிப்பால் என்று வன்முறை தொடங்கி விடுகிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள் என்கிற பெயரில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், விதவை, பொட்டுக்கட்டுதல் என்று காலங்காலமாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டனர்.

  பெரும்பாலும் இத்தகையவன்முறைகள், 90 சதவீதம் நெருங்கிய உறவினர்களாலோ, நண்பர்களாலோ, அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களாலோ, பணியிடத்திலோ, பள்ளிக்கூடங்களிலோ உள்ளவர்களால் நடத்தப்படுகிறது. இதில் வேதனையான விஷயம், பெரும்பாலான குற்றங்கள் வெளியே தெரிவதில்லை. அப்படியே வந்தாலும் செய்தித்தாள்களில் எங்கோ ஒருமூலையில் ஒதுங்கி விடுகிறது.

  இவைகள் எல்லாம் தடுக்கப்பட என்னதான் வழி?

  குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். இந்திய அரசாங்கம் 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியில் வல்லுறவு கொள்பவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என்று சட்டம் இயற்றியுள்ளது. வரவேற்கப்படவேண்டிய ஒன்றானாலும், குற்றங்கள் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறுவதற்கும் பலஆண்டுகள் ஆகி விடுகிறது.

  தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்களது ஆண்குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களிடத்தே, பெண்களும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு சமஉரிமை உடையவர்கள்; ஆண்களுக்கு அடிமையாக, ஏவல் செய்பவர்களாக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல என்கிற உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும். சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை. தைரியம், பலம், அறிவு, இவைகளை எல்லாம் ஆணுக்கு மட்டுமே உரியகுணங்களாக சித்தரிக்கப்படுகிறது, அத்தகைய சூழலில் வளரும் பெண் குழந்தைகள் தங்களுக்கு புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் குறைவு, மற்றும் பலவீனமானவர் என்று கருதத் தொடங்கி விடுகின்றனர்.

  உதாரணமாக, ஏதாவது பொருளினைத் கைத்தவறி நழுவவிட்டால், ஆண்குழந்தை அதைபற்றிக் கவலைக்கொள்ளாது. வீட்டிலும் திட்டிவிட்டு விட்டு விடுவார்கள். அதே நேரத்தில் பெண் குழந்தைக்கு திட்டு மட்டுமல்ல, உனக்கு ஏன் இந்த கடினமான வேலை என்று கூறப்படும் போது பெண் குழந்தை தன்னால் கடினமானவற்றை செய்ய முடியாது என்று நம்பத் தொடங்குகிறது. இப்படியாக வளரும் அப்பருவத்திலேயே அதன் மனதில் நீ பலவீனமானவள் என்கிற ஆழமான விதை ஊன்றப்படுகிறது.

  நன்கு பயிற்சிப் பெற்ற தடகள வீராங்கனையுடனோ, குத்துச்சண்டை பயின்ற பெண்ணிடமோ அவ்வாறு பயிற்சிப் பெறாத ஆண்கள் மோதி வெற்றிப் பெறமுடியாது. ஆகவே ஆணோ, பெண்ணோ, நான் யாருக்கும் சளைத்தவரல்ல, என்கிற எண்ணமும், பயிற்சியும் பெற்றால் எதையும் செய்ய முடியும் என்பது தான் உண்மை. ஊடகங்கள் மற்றும் தொலைக் காட்சி தொடர்கள் பெண்களுக்கு எதிரானதாகவும் வன்முறையை தூண்டுபவையாகவும் உள்ளன.

  திரைப்படங்கள் போன்று தணிக்கைக்குழு இல்லையென்றாலும் சுயக்கட்டுப்பாடுகளோடு நம் வீட்டு பெண்களும் குழந்தைகளும் பார்ப்பதாக இருந்தால் எத்தகைய பொறுப்புணர்வோடு நடந்து கொள்வோமோ அந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேப்போன்று ஊடகங்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் கேலி செய்யும் செய்திகளையும் வெளியிடக்கூடாது.

  பெண்களையும் சகமனிதர்களாக பார்க்காமல் அவர்கள் தங்ககள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கருவியாக பார்க்கும் மனோபாவமே அடிப்படை முறையான பாலினகல்வி கொடுக்காமையும், இத்தகைய தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கின்றன. மீடூ (நானும்கூட) இயக்கங்கள் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வடிக்கால்களாக அமைந்துள்ளன.

  மேலைநாடுகளில் மட்டுமின்றி நமது நாட்டில் கூட, பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகவலைத்தளங்களில் தங்களுக்கு கொடுமை இழைத்தோரை குறித்த உண்மையை வெளியிடுவதன் மூலமாக, தவறு செய்தவர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இது போன்று தவறு செய்தவர்களை வெளிப்படுத்தும் போது எதிர்காலத்தில் தவறு செய்ய முயற்சி செய்பவர்களை தடுக்க ஏதுவாகும்.

  • ரகசியமாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
  • 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

  திருவனந்தபுரம் :

  கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடையை சேர்ந்தவர் அகில்தேவ் (வயது25). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வினீஷா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

  இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அகில்தேவும், வினீஷாவும் மதுரைக்கு சென்று விட்டு ரெயிலில் திருவனந்தபுரத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு அதே ரெயிலில் 13 வயது மகளுடன் திருவனந்தபுரத்திற்கு வந்து கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணும், அகில்தேவும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர்.

  இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அகில்தேவ் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு, 'உன்னையும், உனது மகளையும் பார்க்க ஆவலாக உள்ளது. எனவே உன் மகளை அழைத்துக்கொண்டு கொச்சிக்கு வா' என கூறியுள்ளார். அதன்படி இளம்பெண்ணும் தனது மகளுடன் கொச்சிக்கு வந்தார்.

  அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தயாராக இருந்த அகில்தேவ், தன்னை சந்திக்க ஓட்டலுக்கு வருமாறு கூறினார். இதையடுத்து இளம்பெண்ணும், அவருடைய மகளும் அங்கு சென்றனர். அப்போது 3 பேரும் ஓட்டல் அறையில் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

  பின்னர் திடீரென்று அந்த பெண் தனது மகளை அகில்தேவுடன் தனியாக விட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறினார். அப்போது சிறுமி என்றும் பாராமல் அகில் தேவ் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து கதறி அழுதபடியே அறையை விட்டு வெளியே வந்த சிறுமி தனக்கு நடந்தவற்றை தாயிடம் கூறினார். ஆனால் அவரோ, 'உன்னை அகில் தேவிடம் தனிமையில் இருக்கவே அழைத்து வந்தேன். அதற்காக அவர் ரூ.1,500 -யை என்னிடம் கொடுத்து விட்டார்' எனக்கூறினார். பெற்ற தாயே தன்னை நாசம் செய்ததை அறிந்து அந்த சிறுமி வேதனையடைந்தார்.

  தொடர்ந்து அகில்தேவ் அந்த சிறுமியை தன்னுடைய காதலியான வினீஷாவின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டில் இருந்த வினீஷாவின் பெற்றோர் அகில்தேவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர்.

  இதனால் ரகசியமாக காட்டாக்கடை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் அங்கு வந்த போலீசார் அகில்தேவிடம் விசாரணை நடத்தியபோது சிறுமிக்கு நடந்த கொடூரம் வெட்ட வெளிச்சமானது.

  இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த அகில்தேவ், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் மற்றும் அகில்தேவின் காதலியான வினீஷா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

  ரூ.1,500-க்காக பெற்ற மகளையே வாலிபருக்கு தாய் விருந்தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • அவர்களை சுதந்திரமாகச் சிந்திக்க, செயல்படவிடவேண்டும்.
  • பெண் குழந்தைகளிடம் சொல்லக்கூடாத விஷயங்களை பார்க்கலாம்.

  பெண் குழந்தைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் தவறாது சொல்லிக்கொடுக்க வேண்டிய, சொல்லிக்கொடுக்கக் கூடாத விஷயங்கள் உள்ளன. அதில் சொல்லக்கூடாத விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

  * பெண் குழந்தைகளுக்கு அச்சம் தரும், அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் வகையிலான செயல்களை சொல்வதோ, செய்வதோ கூடாது.

  * ஆண் குழந்தைக்கு, பெண் குழந்தையைவிட அதிக முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆண் குழந்தை பிறந்த உடன், மூத்த பெண் குழந்தை மீது கவனம் குறைந்துபோகும் சூழலுக்கு இடம் தரக் கூடாது. ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை வாய் வார்த்தையாகச் சொல்லாமல், அதனை அவர்களே உணரும் வகையில் பெற்றோர்களின் வளர்ப்பு இருக்க வேண்டும். மேலும், மூத்த பெண் குழந்தை அதிக பொறுப்புடன், விட்டுக்கொடுத்து போகவேண்டும், வீட்டில் வேலைகள் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி, அந்தச் சிறுமிக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

  * 'எதிர்த்துப் பேசாம நான் சொல்றதை மட்டும் கேளு' என்று பெண் குழந்தைகளிடம் அதிகாரம் செலுத்தாமல், ஒரு செயலால் விளையும் நன்மை, தீமைகளை அவர்களுக்கு அன்புடன் புரியும்படியாக சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும், எப்போதும் பெண் குழந்தைகளை கண்காணித்தபடியே இருந்தால், அவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்களின் தனித்திறமைகள் வெளியே தெரியாமலும், சுய சிந்தனை வளராமலும் போகலாம். எனவே, அவர்களை சுதந்திரமாகச் சிந்திக்க, செயல்படவிடவேண்டும்.

  * கிரிக்கெட், ரோபாட்டிக்ஸ், கராத்தே என்று தனக்கு ஆர்வமுள்ள ஒரு விஷயத்தை பெண் குழந்தை கற்றுக்கொள்ள விரும்பும்போது, 'அதெல்லாம் பொண்ணுங்களுக்கு சரிப்பட்டு வராது' என்று கூறி மறுப்பது நியாயம் அன்று. இன்றைய உலகில் ஆண்களுக்கானது என்று எந்தத் துறையும் இல்லை. அவர்கள் விரும்பும் துறை எதுவாக இருந்தாலும், அதில் அவர்கள் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டியது பெற்றோர் பொறுப்பு. 'ஆண், பெண் பாகுபாடற்ற சமுதாயத்தில் உன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம்' என ஊக்கம் கொடுக்க வேண்டும்.

  * ஆண் குழந்தை அழுதால் தவறு எனச் சொல்பவர்கள், பெண் குழந்தைக்கு அதையே அடையாளமாக, அவர்களின் ஆயுதமாக கைகொள்ளும்படி அவர்களை வளர்ப்பது தவறு. 'அழுகையால் எந்தக் காரியமும் முடியாது. திறமையும், தைரியமும், முயற்சியும் மட்டுமே நீ வேண்டுவதை பெற்றுத் தரும்' என்று சொல்லி வளர்க்க வேண்டும்.

  ×