என் மலர்
நீங்கள் தேடியது "Harassment"
- படித்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். இது பற்றி சக ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரித்தனர்.
- 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஆசிரியரை போலீசார் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மம்பாட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்சலாம்(வயது57).
அப்துல்சலாம் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது வகுப்பில் படித்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். இது பற்றி சக ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரித்தனர்.
அப்போது ஆசிரியர் அப்துல்சலாம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக மாணவி கூறினார்.
இது பற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் பற்றி விசாரித்தனர். பின்னர் இது குறித்து நிலம்பூர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் அப்துல்சலாம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பெண்ணுரிமை காப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பது மற்றும் கண்டிப்பது, பெண்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் முன்னேற்றம், தனிப்பட்ட குடும்பத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. குடும்பத்தின் முன்னேற்றம், அதில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தில் அடங்கியுள்ளது. இதை உணர்ந்து, வருங்கால தலைமுறைக்குப் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை புரியவைத்து வளர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு நல்லவற்றை போதித்து வளர்ப்பதில் பெரும்பங்கு தாயைச் சார்ந்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்ப்பது, பெண்களை மதித்து நடப்பது போன்றவற்றை, ஆண் குழந்தைகளுக்கு பெண்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாற்றத்துக்கான செயல்பாடு நம்மிடம் இருந்தே தொடங்கட்டும்.
தேனி மாவட்டம் போடி சந்தைப்பேட்டைத் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் குருமணி (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவியை காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளார்.
பின்னர் அவரை திருமணம் செய்வதாக கூறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் குருமணியின் நண்பரான மாரியப்பன் மகன் ரமேஷ் (வயது 21) என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளனர்.
சிறுமியின் உடலில் மாற்றங்கள் தென்படவே அவரது பெற்றோர் விசாரித்த போது நடந்த விபரங்களை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குருமணி மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூரில் உள்ள பட்டாசு ஆலையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் கோபால் (வயது 52).
இந்த பட்டாசு ஆலை ஊழியர் ஒருவர் வேலைக்கு வரவில்லை. இதனால் கோபால் அந்த ஊழியர் வீட்டுக்கு சென்று சத்தம் போட்டார். அதன் பின்னரும் அவர் வேலைக்கு வரவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று கோபால் மீண்டும் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது 17 வயது பிளஸ்-2 படிக்கும் மகள் தனியாக இருந்தார்.
அப்போது அவர் அந்த மாணவியிடம் ரூ.500 கொடுத்து தீபாவளிக்கு இனாமாக வைத்துக் கொள் எனக்கூறி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவியின் தாயார் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மதுரை:
மேலூரை அடுத்த முசுண்டகிரிப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிசாமி (வயது 27). இவர் விழுப்புரத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ஆண்டிசாமி அதே பகுதியில் வசிக்கும் 9-ம் வகுப்பு மாணவியுடன் நெருங்கி பழகியுள்ளார். அப்போது திருமண ஆசை காட்டி அந்த சிறுமியை கற்பழித்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த மாணவி திருமணத்துக்கு வற்புறுத்தி உள்ளார். ஆனால் ஆண்டிசாமி திருமணத்துக்கு மறுத்து விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை அறிந்த ஆண்டிசாமி, தந்தை பாண்டி, தாய் மீனா, சகோதரர் சரவணன் மற்றும் உறவினர் ஜெயபிரகாஷ் ஆகிய 5 பேரும் மாணவியின் வீட்டுக்கு சென்று மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் துவரிமான் இந்திரா காலனியை சேர்ந்த சக்திவேல் மனைவி முத்துசெல்வி (வயது 34) இவர் சம்பவத்தன்று மதியம் அங்குள்ள வாழைத் தோட்டத்துக்கு புல் அறுக்க சென்று உள்ளார்.
அப்போது அதே பகுதியில் வசிக்கும் அழகுமலை (49) என்பவர் அவரை கையை பிடித்து இழுத்து கற்பழிக்க முயற்சி செய்து உள்ளார். முத்துச்செல்வி மறுக்கவே, நடந்ததை ‘வெளியே சொன்னால் நடப்பதே வேறு’ என்று மிரட்டிவிட்டு சென்றார். இது தொடர்பாக முத்துசெல்வி புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம், குனிகல் வட்டம், மாதகோனஹள்ளியை சேர்ந்தவர் கவுசிக் (வயது26), இவர் தனது கிராமத்தின் அருகே உள்ள சிகேபாளையாவைச் சேர்ந்த பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவியை கடத்தி சென்று பெங்களூருவில் உள்ள தனது நண்பரின் அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஹூலியூர்துர்கா போலீசார் கவுசிக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஜெயகரன் வாசுதேவன் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 17 வயதில் சிறுமி உள்ளார்.
இந்த நிலையில் சிறுமிக்கு தாயின் 2-வது கணவரான ஜெயகரன் வாசுதேவன் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே ஜெயகரன் வாசுதேவன், ‘ஆன்லைன்’ மூலம் போலீசாருக்கு தனது மனைவி மோசடி செய்ததாக புகார் அளித்தார். இது தொடர்பாக அப்போது புழல் போலீசில் இன்ஸ்பெக்டராக இருந்த நடராஜன் விசாரணை நடத்தினார். அவர், விசாரணைக்காக போலீஸ் நிலையம் வந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது தாயும் தங்களுக்கு தொல்லை தரும் 2-வது கணவர் ஜெயகரன் வாசுதேவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் நேற்று வழக்கு தெடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன் வருகிற 10-ந்தேதி விசரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
கோர்ட்டில் சிறுமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
விசாரணைக்காக சென்றபோது நீ அழகாக இருக்கிறாய் என்று இன்ஸ்பெக்டர் நடராஜன் என்னை அழைத்தார். நான் பயந்து தூரமாக நின்றேன். அப்போது என் கையை பிடித்து இழுத்தார். நான் சத்தம் போடுவேன் என்று கூறினேன். அதற்கு அவர் இது போலீஸ் ஸ்டேசன் யாரும் இங்கு வரமாட்டார்கள் என்றார். அப்போது ஜெயகரனும் பக்கத்தில் இருந்தார்.
நான் அவமானத்தால் கண் கலங்கி உருகிப்போய் விட்டேன். அந்த இடத்திலேயே இறந்துவிடலாம் என்று தோன்றியது. நீயும் உன் அம்மாவைப் போல் இரண்டு, மூன்று திருமணம் செய்துகொள்ள ஆசையா? அதற்கு நான் ‘ஓகே’ வா என்று கூறி என்னை நான்கு மணி நேரம் நிற்க வைத்து உற்று பார்த்தார்.
நான் கூறியதை போல் செய்தால் உன்னை மட்டும் விட்டுவிடுகின்றேன் என இரட்டை அர்த்தங்களினால் என்னிடம் ஆபாச வார்த்தைகளால் பேசினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 26.11.18 அன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மனுவில் சிறுமி கூறியிருப்பதாவது:-
எனது தாய்க்கும் ஜெயகரன் என்பவருக்கும் கடந்த 5.10.2017 அன்று வடபழனி கோயிலில் 2-வது திருமணம் நடைபெற்றது. என் அம்மா மீது அன்பாக இருப்பதை போல் நடித்து எனக்கு அவர் பாலியல் ரீதியாக நிறைய துன்புறுத்தல்களை செய்து வந்தார். எனது சிறிய ஆடைகளை ஆன்லைனில் வாங்கிக் கொடுத்தார். என்னை தீய எண்ணத்துடன் பார்த்து வந்தார்.
செல்போனில் ஆபாச படங்களையும் காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் எனது தாயை அடிக்கவும், துன்புறுத்தவும் ஆரம்பித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் எங்கள் மீது ஜெயகரன் வாசுதேவன் ஆன்லைனில் புகார் செய்திருப்பதாகவும் அதனால் எங்களை விசாரணைக்கு வரவேண்டும் என்று என்னையும், எனது தாயையும் இன்ஸ்பெக்டர் நடராஜன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்தார்.
அப்போது அவர் இரட்டை அர்த்தங்களினால் என்னிடம் ஆபாச வார்த்தைகள் பேசினார். நான் அழுத போதும் என்னை விடவில்லை. என்னையும் தாயையும் மாலை 6.30 மணி வரை போலீஸ் நிலையத்தில் சட்டத்துக்கு முரணாக வைத்தார்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான இன்ஸ்பெக்டர் நடராஜன் தற்போது வேறு ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
கோர்ட்டில் வழக்கு உள்ளதால் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. #TNPolice
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சேர்ந்த 21 வயது பெண் கடந்த 2015-ம் ஆண்டில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். கல்லூரி அருகே உள்ள கடைக்கு அடிக்கடி அவர் சென்று வந்தார்.
அப்போது ஈரோடு வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் (37) என்பவர் அந்த மாணவிக்கு அறிமுகமானார்.
பின்னர் ஒரு நாள் ராதாகிருஷ்ணன் அந்த மாணவியிடம் எனக்கு பிறந்தநாள் அதற்காக உனக்கு நான் விருந்து கொடுக்கிறேன் என்று கூறி மாணவியை சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு காரில் அழைத்துச் சென்றார். காரில் போகும்போது அந்த மாணவியிடம ஆபாச வீடியோவை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதை அவர் விரிவாக எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த மாணவியிடம் உனது வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
இவ்வாறாக 4 வருடமாக அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் அந்த மாணவி இரண்டு முறை கர்ப்பம் அடைந்தார். ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து அந்த மாணவியை அவர் பலாத்காரம் செய்தார்.
மேலும் தனது நண்பர்களுடன் நீ அனுசரித்து செல்ல வேண்டும் என்று அந்த மாணவியை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். இதனால் பயந்து போன மாணவி இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார். பின்னர் மாணவியின் தந்தை இதுகுறித்து ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அவர் இதே போன்று பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து இருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் உள்ளதா? ஆபாச படங்கள் உள்ளதா? என்று தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். ராதாகிருஷ்ணன் அந்த மாணவியிடம் உன்னைப் போன்று பல பெண்களை நான் சீரழித்து உள்ளேன் என்று கூறியுள்ளார் அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது57) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரனுக்கு தெரியவந்தது. இது சம்பந்தமாக விசாரணை நடத்தும்படி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வாகுப்தாவிடம் புகார் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தும் படி போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு அபூர்வாகுப்தா உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது உதயகுமார் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது. இதையொட்டி போக்சோ சட்டத்தில் உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் கல்லூரி மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் ஆச்சிப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் (வயது 20), வி.கே.வி. லே-அவுட் பகுதியை சேர்ந்த பாபு (24), சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த செந்தில் (33), பார் நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் பார் நாகராஜ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மணிவண்ணன் என்ற மணிகண்டன் கடந்த 1 மாதமாக தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் கடந்த 25-ந்தேதி கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் முன்பு மணிகண்டன் சரணடைந்தார். நீதிபதி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று ஜாமீன் கேட்டு மணிகண்டன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிறையில் உள்ள மணிகண்டனை 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு இன்று மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி 4 நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
விசாரணைக்கு பின்னர் திங்கட்கிழமை மாலை மணிகண்டனை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மணிகண்டனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். #PollachiCase #CBCID