என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி கற்பழிப்பு"

    • 15 வயது சிறுவன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வளைகுடா நாட்டிற்கு சென்றுவிட்டார்.
    • இந்த வழக்கில் தொடர்புடைய 45 வயது மதிக்கத்தக்க ஆண் கைது செய்யப்படவில்லை.

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் சந்தேரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை, 15 வயது சிறுவன் உள்பட 5 பேர் கடந்த சில மாதங்களாக பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    கடை ஊழியர் நவுசாத் பொருட்களை வினியோகம் செய்ய சிறுமியின் வீட்டுக்கு வந்தபோது, தனியாக இருந்த அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதேபோல் சிறுவன் உள்பட மற்ற 4 பேரும் சிறுமி தனியாக வீட்டில் இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.

    இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள், அதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை சீரழித்த 15 வயது சிறுவன், சிறுமியின் மைத்துனர் உள்பட 5 பேர் மீதும் வழக்கு பதிந்தனர். இந்த சம்பவத்தில் நவுசாத், பயாஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

    15 வயது சிறுவன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வளைகுடா நாட்டிற்கு சென்றுவிட்டார். ஆகவே அவரையும், இந்த வழக்கில் தொடர்புடைய 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஆகிய இருவரும் கைது செய்யப்படவில்லை. சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அவரது மைத்துனர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறுமியின் உடலை அடைத்து வைத்த அறையிலேயே குல்வர்தன் மது போதையில் இரவு முழுவதும் தூங்கினான்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள நீருகட்டு வாரி பள்ளியை சேர்ந்தவர் கோபிநாத். நெசவு தொழிலாளி. இவரது மகள் ரிஷிகா பிரியா (வயது 7). பெற்றோர்கள் இருவரும் தனித்தனியாக வேலைக்குச் சென்று தங்களது 2 குழந்தைகளையும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்து வந்தனர்.

    நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் ரஷிகா பிரியா தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்தார். அவரது பெற்றோர் வேலைக்குச் சென்று இருந்தனர்.

    சிறுமியின் எதிர்த்த வீட்டை சேர்ந்தவர் குல்வர்தன் (30). மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை குல்வர்தன் நைசாக பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து துடிதுடிக்க கொலை செய்தார்.

    யாருக்கும் தெரியாமல் இருக்க வீட்டில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் சிறுமியின் உடலை அடைத்து வைத்தார். வீட்டிற்கு வெளியே விளையாடிய சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கணவன், மனைவி இருவரும் பதறி அடித்து கொண்டு வந்து அப்பகுதியில் உள்ளவர்களுடன் சேர்ந்து சிறுமியை தேடிப் பார்த்தனர். ஆனால் அவர்களால் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து மதனப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். இந்த நிலையில் சிறுமியின் உடலை அடைத்து வைத்த அறையிலேயே குல்வர்தன் மது போதையில் இரவு முழுவதும் தூங்கினான்.

    நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் போலீசார் குல்வர்தன் வீட்டின் கதவை தட்டினர். மது போதையில் இருந்த குல்வர்தன் கதவை திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது குல்வர்தன் தூங்கிக்கொண்டு இருந்தார்.

    அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் குல்வர்தன் ரிஷிகா பிரியாவை அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    மீண்டும் குல்வர்தன் வீட்டிற்கு சென்ற போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். குல்வர்தன் போலீசாரை தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ரிஷிகா பிரியாவின் உடலில் ஆடை இல்லாமல் கொலை செய்யப்பட்டு பிளாஸ்டிக் டிரம்மில் அடைக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.

    போலீசார் சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் சிறுமியின் பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் மும்பை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    குல்வர்தனை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும். இல்லை என்றால் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் குல்வர்தனுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதியளித்தனர்.

    இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • அத்தையின் கணவர், அவரது மகன் மற்றும் தனது தந்தையால் சிறுமி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
    • சிறுமி 8 வயதாக இருக்கும் போது அவரது தாய்மாமன் பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

    கேரளாவை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவளது தந்தை மற்றும் உறவினர்களே இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவர போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள புன்னப்பிரா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, தனது தோழியை சந்தித்த போது கடந்த 4 ஆண்டுகளாக தந்தை மற்றும் உறவினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவதாக கூறி கண்ணீர் விட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    விசாரணையில் சிறுமியின் தாய், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தையின் சகோதரி வீட்டில், சிறுமி தங்கினார். அங்கு தான் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

    அத்தையின் கணவர், அவரது மகன் மற்றும் தனது தந்தையால் சிறுமி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானது தெரிய வந்ததை தொடர்ந்து தந்தை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் சிறுமி 8 வயதாக இருக்கும் போது அவரது தாய்மாமன் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பான புகாரில் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மஜாம் அலியை கைது செய்தனர்.
    • வாழ்நாள் முழுவதும் (அதாவது சாகும் வரை) சிறை தண்டனை விதித்து கடந்த 2022-ம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த 20.1.2020 அன்று பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். மாலை 4.30 மணி அளவில் வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அந்தப் பகுதியில் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜாம் அலி (வயது 20) என்பவர் அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்றுள்ளான்.

    அவர் முட்புதற்களுக்குள் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர் சிறுமி அணிந்திருந்த உடையில் இணைக்கப்பட்டிருந்த கயிற்றின் மூலமாக அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பிவிட்டார். சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அதே பகுதியில் புதருக்குள் பிணமாக சிறுமி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மஜாம் அலியை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. மு வில் மஜாம் அலி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் (அதாவது சாகும் வரை) சிறை தண்டனை விதித்து கடந்த 2022-ம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்புக்கு எதிராக மஜாம் அலி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் பா.நம்பி செல்வன் ஆஜராகி, சிறுமி கொலை வழக்கில் நேரடி சாட்சியங்கள் கிடையாது. சூழ்நிலை சாட்சிகள் மற்றும் விஞ்ஞானபூர்வமான சாட்சிகளின் அடிப்படையில் கீழ் கோர்ட்டு மேல்முறையீட்டாளருக்கு தண்டனை விதித்து உள்ளது.

    இறந்த சிறுமியின் உடலில் மேல்முறையீட்டாளர் முடி இருந்தது. இது அவருடையது தான் என்பது விஞ்ஞானபூர்வமான பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டாளருக்கு கீழ் கோர்ட்டு விதித்த சாகும் வரை தண்டனையை உறுதி செய்தும், அவருடைய மேல்முறையீட்டு மனுவை தள்ளு படி செய்தும் உத்தரவிட்டனர்.

    • பயந்து போன இருவரும் பெற்றோரிடம் சொல்லாமல் அமைதி காத்தனர்.
    • சிறுமியின் பெற்றோர் சைதாபாத் போலீசில் புகார் செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த சைதாபாத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    சிறுமியும், அவரது 7 வயது சகோதரனும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றனர். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பினர். பெற்றோர் வேலைக்கு சென்றதால் சிறுமி தனது சகோதரருடன் வீட்டில் இருந்தார். சிறுமி தனியாக இருப்பதை அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் கவனித்தார்.

    கஞ்சா போதையில் இருந்த வாலிபர் சிறுமியின் வீட்டிற்கு வந்து சிறுமியை சரமாரியாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் சிறுமியையும், அவரது சகோதரனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றார். இதனால் பயந்து போன இருவரும் இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லாமல் அமைதி காத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமை குறித்து தெரிவித்தார். சிறுமியின் பெற்றோர் சைதாபாத் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • தாய் திட்டியதால் சிறுமி கோபித்துக் கொண்டு 2 மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
    • வாலிபர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் 15 வயது சிறுமி சுற்றித்திரிவதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சென்ற போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு மூலமாக விசாரித்தனர். விசாரணையில் சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பது தெரியவந்தது. சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் சிறுமி பல்லடத்தை சேர்ந்தவர் என்பதும், தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு 2 மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த நிலையில் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த மினி பஸ் டிரைவர் முகமது நசீர்(வயது 22) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    வாலிபர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார் முகமது நசீரை போக்சோவில் கைது செய்தனர்.

    • நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.
    • அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 45 வயது மீனவர் ஒருவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    அவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் கள்ளக்காதலியின் மகள் மட்டும் இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு சென்ற அவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார். நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் இது குறித்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சிவ பிரகாசம் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தார். இதற்கிடையே சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

    இந்த நிலையில் நேற்று முத்தியால்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    • வெங்கடேசனின் வீட்டில் சிறுமியும், அவரது தாயாரும் வாடகைக்கு வசித்து வந்தனர்.
    • வெங்கடேசன் கொத்தனராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ளனர்.

    ஆவடி:

    சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரை சேர்ந்தவர் 35 வயது பெண். இவருக்கு 15 வயதான மகள் இருக்கிறார். இந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அவரது தாயார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    அங்கு சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமிக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இதுபற்றி சிறுமியின் தாயாரிடம் தெரிவித்தனர். இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி தாயார் சிறுமியிடம் விசாரித்தார். அப்போது சிறுமி தான் கர்ப்பமானதற்கு வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன் (வயது40) என்பவரே காரணம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வெங்கடேசனை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    வெங்கடேசனின் வீட்டில் சிறுமியும், அவரது தாயாரும் வாடகைக்கு வசித்து வந்தனர். வெங்கடேசன் கொத்தனராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ளனர். ஆனால் குடும்ப தகராறு காரணமாக 2 மனைவிகளையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடன் தாய் விஜயா (67), சகோதரி லலிதா (42) ஆகியோர் தங்கி உள்ளனர்.

    வீட்டு உரிமையாளர் என்பதால் சிறுமி, வெங்கடேசன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். இதில் சிறுமி மீது வெங்கடேசனுக்கு மோகம் ஏற்பட்டது. ஒருநாள் வெங்கடேசன், சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது போல் வெங்கடேசனின் உறவினர் வேங்கையன் (36) என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதே போல் வெங்கடேசனின் மேலும் 2 நண்பர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவளது வாழ்க்கையை கொடூரமாக சீரழித்துள்ளனர்.

    வெங்கடேசன் இதே போல் பலமுறை மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதற்கு வெங்கடேசனின் தாயார் விஜயா, சகோதரி லலிதா ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ள அதிர்ச்சி தகவலும் வெளியானது. இதில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.

    இதையடுத்து ஆவடி மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வெங்கடேசன், வேங்கையன், உடந்தையாக இருந்த விஜயா, லலிதா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர்கள் 4 பேரும் திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • 11 வயது சிறுமி வீட்டில் குளிக்கும் போது வீடியோ எடுத்ததை காட்டியுள்ளார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ்வழக்கு பதிந்து நாகராஜனை தேடி வந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு பல்லவரா யநத்தம் முருகன் கோவில் தெரு வை சேர்ந்தவர் நாக ராஜ். (வயது24), கூலி தொழி லாளி திருமண மாகாதவர். இவர்கடந்த 15-ந் தேதி இதே பகுதியை சேர்ந்த நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் 6 -ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி வீட்டில் குளிக்கும் போது வீடியோ எடுத்ததை காட்டியும், அவரை மிரட்டி பல முறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டுபுதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் மற்றும் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ்வழக்கு பதிந்து நாகராஜனை தேடி வந்தனர். நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • ஜாமீனில் வெளியே வந்த தீபக்குமார் சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தீபக்குமாரை 2-வது முறையாக போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் தீபக்குமார் (27). திருமண மேடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    கடந்த ஆண்டு தீபக்குமார் ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீபக்குமாரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த தீபக்குமார் அந்த சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். கடந்த மாதம் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இதுகுறித்து சிறுமியிடம் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தீபக்குமார் தான் சிறுமியின் குழந்தைக்கு தந்தை என தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தீபக்குமாரை 2-வது முறையாக போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சிவமணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
    • புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அரசு ஆஸ்பத்திரி டிரைவர் சிவமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 17 வயது சிறுமி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சேலம் அருகே உள்ள காடையாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வருபவர் சிவமணி (வயது 50). இவர் அந்த மாணவியிடம் நல்லவர் போல் பழகி மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்தினார். அதன் பிறகு நாளடைவில் அவர், மாணவியிடம் தவறாக பழக தொடங்கினார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது பற்றி வீட்டில் சொல்லி விடுவதாக கூறி எச்சரிக்கையும் விடுத்தார். ஆனால் சிவமணி கேட்கவில்லை.

    மாணவியை பின்தொடர்ந்து தன்வலையில் வீழ்த்தினார். தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், தனக்கு சொத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தைகளை அள்ளி விட்டு, மாணவியை பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.

    இதை அறிந்த மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    சிவமணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அரசு ஆஸ்பத்திரி டிரைவர் சிவமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைதான அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    • 17 வயது சிறுமியை கடத்தி போதைக்கு அடிமையாக்கி 3 மாதங்களாக ஒரு கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஓட்டல் உரிமையாளர் ஜோசி தாமஸ், லாட்ஜ் உரிமையாளர் சாலாம், மானேஜர் அஜித்குமார், பூந்துறையை சேர்ந்த பெண் கிரிஜா உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

    சிறுமியை காணாமல் தவித்த பெற்றோர் இது பற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை போலீசார் மீட்டனர். அந்த சிறுமியின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் அவர் போதைக்கு அடிமையாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அந்த சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுத்து விசாரித்தனர். இதில் அந்த சிறுமியை கடந்த 3 மாதங்களாக 4 மாவட்டங்களுக்கு கடத்தி சென்று ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதன் விபரம் வருமாறு:-

    கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, அருகில் உள்ள பஸ் நிலையத்திற்கு சென்று உள்ளார். அங்கு சிறுமியை வாலிபர் ஒருவர் சந்தித்து பேசியுள்ளார். அவர் சிறுமியை அருகில் உள்ள லாட்ஜூக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து அவர் மயக்கத்தில் இருந்த போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை லாட்ஜ் உரிமையாளரும் சீரழித்துள்ளார்.

    மறுநாள் அங்கிருந்து தப்பி வந்த சிறுமியை இன்னொரு நபர், வேலை தருவதாக கூறி அவரது வீட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார். இப்படி திருச்சூர், வயநாடு, பாலக்காடு உள்பட 4 மாவட்டங்களுக்கு அந்த சிறுமியை கடத்தி சென்று 3 மாதங்கள் செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளனர்.

    இவை அனைத்தையும் தெரிந்து கொண்ட போலீசார் அந்த சிறுமி கொடுத்த தகவலின் பேரில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஓட்டல் உரிமையாளர் ஜோசி தாமஸ், லாட்ஜ் உரிமையாளர் சாலாம், மானேஜர் அஜித்குமார், பூந்துறையை சேர்ந்த பெண் கிரிஜா உள்பட 8 பேரை கைது செய்தனர்.

    இதில் 13 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    17 வயது சிறுமியை கடத்தி போதைக்கு அடிமையாக்கி 3 மாதங்களாக ஒரு கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×