மேட்டூரில் 17 வயது சிறுமி பலாத்காரம்- அரசு ஆஸ்பத்திரி டிரைவர் கைது

சிவமணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அரசு ஆஸ்பத்திரி டிரைவர் சிவமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
மேட்டூரில் 17 வயது சிறுமி பலாத்காரம்- அரசு ஆஸ்பத்திரி டிரைவர் கைது
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 17 வயது சிறுமி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

சேலம் அருகே உள்ள காடையாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வருபவர் சிவமணி (வயது 50). இவர் அந்த மாணவியிடம் நல்லவர் போல் பழகி மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்தினார். அதன் பிறகு நாளடைவில் அவர், மாணவியிடம் தவறாக பழக தொடங்கினார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது பற்றி வீட்டில் சொல்லி விடுவதாக கூறி எச்சரிக்கையும் விடுத்தார். ஆனால் சிவமணி கேட்கவில்லை.

மாணவியை பின்தொடர்ந்து தன்வலையில் வீழ்த்தினார். தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், தனக்கு சொத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தைகளை அள்ளி விட்டு, மாணவியை பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.

இதை அறிந்த மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

சிவமணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அரசு ஆஸ்பத்திரி டிரைவர் சிவமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைதான அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com