ஆலப்புழாவில் 14 வயது சிறுமிக்கு 4 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை- தந்தை உள்பட 3 பேர் கைது

அத்தையின் கணவர், அவரது மகன் மற்றும் தனது தந்தையால் சிறுமி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.சிறுமி 8 வயதாக இருக்கும் போது அவரது தாய்மாமன் பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
ஆலப்புழாவில் 14 வயது சிறுமிக்கு 4 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை- தந்தை உள்பட 3 பேர் கைது
Published on

கேரளாவை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவளது தந்தை மற்றும் உறவினர்களே இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவர போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள புன்னப்பிரா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, தனது தோழியை சந்தித்த போது கடந்த 4 ஆண்டுகளாக தந்தை மற்றும் உறவினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவதாக கூறி கண்ணீர் விட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

விசாரணையில் சிறுமியின் தாய், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தையின் சகோதரி வீட்டில், சிறுமி தங்கினார். அங்கு தான் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

அத்தையின் கணவர், அவரது மகன் மற்றும் தனது தந்தையால் சிறுமி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானது தெரிய வந்ததை தொடர்ந்து தந்தை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் சிறுமி 8 வயதாக இருக்கும் போது அவரது தாய்மாமன் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பான புகாரில் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com