என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Girl Molested"
- கடந்த 2020-ம் ஆண்டு தொழிலாளி 16 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்தார்.
- வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
செங்கல்பட்டு:
உத்திரமேரூர் அருகே உள்ள ஒழுகரை கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது58). தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்தார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.
இது தொடர்பான புகாரின் பேரில் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அப்போது குற்றவாளி குணசேகரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
- வீடு திரும்பிய சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்தார்.
- திண்டோரி மாவட்ட தலைமை போலீஸ் நிலையத்துக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
திண்டோரி:
மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டம் பஜாக் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக அதே பகுதியை சேர்ந்த 4 பேர் காரில் வந்தனர். சிறுமியை போகும் வழியில் விட்டுவிடுவதாக கூறி காரில் ஏறக்கூறினர். சிறுமியும் நம்பி காரில் ஏறினார்.
உடனடியாக காரை ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டை நோக்கி வேகமாக ஓட்டி சென்றனர். பின்னர் 4 பேரும் சிறுமியை கற்பழித்தனர். அவரது அழுகுரல் கேட்காமல் இருக்க காரில் சத்தமாக பாடல்களை ஒலிக்க செய்தனர். பின்னர் சிறுமியை அங்கேயே விட்டு விட்டு 4 பேரும் தப்பி சென்று விட்டனர்,
வீடு திரும்பிய சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்தார். இதுகுறித்து புகார் அளிக்க சிறுமியின் பெற்றோர் உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்களின் புகாரை ஏற்க போலீசார் மறுத்துவிட்டனர்.
பின்னர் திண்டோரி மாவட்ட தலைமை போலீஸ் நிலையத்துக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அவர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து திண்டோரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாத் மார்க்கம் கூறுகையில், "குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க டி.எஸ்.பி. தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை வாங்க மறுத்து போலீசார் அலட்சியமாக நடந்து கொண்டது குறித்து கேட்டதற்கு அது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- இரவு முழுவதும் மகள் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த தாய் கோல்கொண்டா போலீசில் புகார் செய்தார்.
- சிறுமியை பலாத்காரம் செய்ய அறை வழங்கிய லாட்ஜ் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் கோல்கொண்டா பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் அப்துல் நதீம் (வயது 23). எலக்ட்ரீசியன். இவரது நண்பரான பைக் மெக்கானிக் நஜ்ருதீன் ( 20).
இருவரும் சேர்ந்து கடந்த 14-ந்தேதி 15 வயது சிறுமியை கடத்திக்கொண்டு நார்சிங்கியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்த லாட்ஜ் மேலாளர் ஜான் சிங்கிடம் தங்குவதற்கு அறை வேண்டும் என கேட்டனர்.
அதற்கு மேலாளர் அறை தர முடியாது என கூறினார். இதனைக் கண்ட லாட்ஜ் உரிமையாளர் விஜய் பணத்திற்கு ஆசைப்பட்டு கொண்டு அறை ஒதுக்க வேண்டும் என மேலாளருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்களுக்கு அறை வழங்கப்பட்டது. அப்துல் நதீம் மற்றும் அவரது நண்பர் நஜ்ருதீன் இருவரும் சிறுமியை இரவு முழுவதும் அறையில் வைத்து பலாத்காரம் செய்தனர்.
இரவு முழுவதும் மகள் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் இது குறித்து கோல்கொண்டா போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் அப்துல் நதீம் நேற்று காலை சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். இதனைக் கண்ட அவரது தந்தை மகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து தந்தையிடம் தெரிவித்தார்.
இது குறித்து சிறுமியின் தந்தை கோல்கொண்டா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் நதீம், மற்றும் நஜ்ருதீன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் சிறுமியை பலாத்காரம் செய்ய அறை வழங்கிய லாட்ஜ் உரிமையாளர் விஜய் மற்றும் மேலாளர் ஜான்சிங் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
- சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தனர்.
- சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்திற்கு உட்பட்ட ராகுவாஸ் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பூபேந்திர சிங் என்பவர் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது போலீஸ் நிலையத்தை ஒட்டிய வீட்டில் வசிக்கும் கான்ஸ்டபிள் ஒருவரின் மகளான 4 வயது சிறுமி அங்கு விளையாட சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுமியை ஒரு அறைக்கு அழைத்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திர சிங் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தனர்.
ஆனால் அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அப்போது சிலர் சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங்கை பிடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதற்கிடையே பாரதிய ஜனதா எம்.பி. கிரோடி லால் மீனா சம்பவ இடத்திற்கு சென்றார். அவர் கூறுகையில், தலித் சிறுமியை சப்-இன்ஸ்பெக்டர் பலாத்காரம் செய்த சம்பவம் மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பாவி குழந்தைக்கு நீதி கிடைக்க சம்பவ இடத்திற்கு வந்துள்ளேன்.
அசோக் கெலாட் அரசின் திறமையின்மையால் எதேச்சதிகாரமாக மாறி உள்ள காவல்துறை, தேர்தல் போன்ற முக்கியமான சந்தர்ப்பத்தில் கூட அட்டூழியங்களை செய்ய தயங்குவதில்லை என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், மாநில சுகாதார அமைச்சர் பர்சாதி லால் மீனா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எல்லா வகையிலும் உதவி செய்யப்படும் என்றார்.
- சிறுமியின் குடும்பத்தினர் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு இடம்பெயர்ந்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் சிறுமியிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரணை நடத்தினர்.
கோவை:
கோவை சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் கடந்த 2020-ம் ஆண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.
அப்போது சிறுமிக்கு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரவீன் என்ற அரவிந்த் (23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு மாதங்களுக்கு முன்பு பிரவீனுக்கு பிறந்த நாள் என்பதால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் சொல்வதற்காக சிறுமி சென்றார்.
அப்போது பிரவீன் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதற்கிடையே சிறுமியின் குடும்பத்தினர் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு இடம்பெயர்ந்தனர். அவர்களுடன் சிறுமியும் சென்றார்.
இந்தநிலையில் சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை பெற்றோர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சிறுமியிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரணை நடத்தினர். அப்போது பிரவீன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
சம்பவம் நடந்தது கோவை மாவட்டம் சூலூர் என்பதால் எர்ணாகுளம் போலீசார் இந்த வழக்கை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி 18 வயது சிறுமியை பிறந்த நாளுக்கு அழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வயநாடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறினா
- சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், வயிற்று வலி அல்ல என்றும் அது பிரசவ வலி என்று கூறினர்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறினார். இதனைத்தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு வயிற்று வலி அல்ல என்றும் அது பிரசவ வலி என்றும் கூறினர். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
தொடர்ந்து சிறுமியிடம் விசாரித்தபோது, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 56 வயது தொழிலாளி தான் இதற்கு காரணம் என தெரியவந்தது. அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை கைது செய்தனர்.
- குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் உறவினருக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மொத்தம் 80 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, கடந்த 2020-ம் ஆண்டு உறவினர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு இடுக்கி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வர்க்கீஸ் தீர்ப்பு கூறினார்.
அதில் குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் ஆண் உறவினருக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மொத்தம் 80 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவருக்கு ரூ.40ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் மறுவாழ்வுக்காக சிறுமிக்கு ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
- ஒரு வருடமாக சிறுவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து மாணவி வெளியே சொல்லாமல் பயத்தில் இருந்தார்.
- வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியான சூழ்நிலைக்கு மாணவி தள்ளப்பட்டார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மென்டாடா பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி. இவரது பெற்றோர் வெளியூரில் வசிக்கின்றனர்.
மாணவி அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகினர்.
இதனிடையில் கடந்த ஆண்டு சிறுவன் மாணவியை தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தான். தொடர்ந்து அவனது நண்பர்கள் 3 பேரிடம் இதனை தெரிவித்தான்.
இதைத் தொடர்ந்து அவனது நண்பர்கள் மாணவியை தனிமையில் சந்தித்து மிரட்டினர். மாணவியை அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்தனர்.
ஒரு வருடமாக அவர்கள் மிரட்டலுக்கு அடிபணிந்து மாணவி வெளியே சொல்லாமல் பயத்தில் இருந்தார். இதனால் வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியான சூழ்நிலைக்கு மாணவி தள்ளப்பட்டார். இதனை கவனித்த அவரது பாட்டி மாணவியிடம் விசாரித்தார்.
அப்போது தன்னை அங்குள்ள சிறுவர்கள் பலாத்காரம் செய்ததை மாணவி தெரிவித்தார். இது குறித்து கஜபதி நகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.
மேலும் 4 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேரை கைது செய்து சிறுவர் ஜெயிலில் அடைத்தனர்.
- டாக்டர்கள் பரிசோதித்த போது மாணவிக்கு கருக்கலைப்பு நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
- பாதிக்கப்பட்ட மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 37). லாரி ஓட்டுநர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் மிரட்டி பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பமானார்.
மகளின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை கண்டு அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என கருதிய அவர், மகளுக்கு ராயம்புரம் கிராமத்தில் உள்ள ஒரு மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளார்.
அதனை மாணவி வாங்கி சாப்பிட்டார். பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் அவருக்கு ஆண் சிசு இறந்து பிறந்தது. பின்னர் அந்த சிசுவை ஒரு சாக்கு பையில் சுற்றி வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவிக்கு உதிரப்போக்கு நிற்காததால் வேறு வழி இல்லாமல் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த மாணவிக்கு கருக்கலைப்பு நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக பணியாளர் செல்வி அகஸ்தியர் செந்துறை கிராம நிர்வாக அலுவலர் வாழவந்தானுக்கு தகவல் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் செந்துறை போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் வீட்டின் பின்புறம் புதைத்த 7 மாத சிசுவின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான அவரது கொடூர தந்தை, கர்ப்பத்தை கலைக்க மாத்திரை வாங்கி கொடுத்த தாயார், டாக்டர்களின் ஆலோசனை பெறாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மெடிக்கல் உரிமையாளர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெற்ற மகளை லாரி டிரைவர் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கி கருக்கலைப்பு செய்த சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.