என் மலர்
நீங்கள் தேடியது "சிறுமி கர்ப்பம்"
- போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது.
- சிறுமி புகார் அளித்த வாலிபரிடம் டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் 13 வயது சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது அவர் கர்ப்பமாக இருந்ததை அறிந்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தன் மகளிடம் கேட்ட போது ஒரு வாலிபர் தன்னை வன்கொடுமை செய்ததாக கூறினார். இதுகுறித்து பெற்றோர் தரப்பில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது.
சிறுமி புகார் அளித்த வாலிபரிடம் டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதன் முடிவுகள் வராததால் வாலிபர் கைது செய்யப்படவில்லை. சிறுமி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருப்பதால் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் தாய் தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் தனது மகளின் நிலைக்கு காரணமான வாலிபர் கைது செய்யப்படாததை நினைத்தும், மனைவி தற்கொலை செய்ததை நினைத்தும் கவலையில் இருந்த சிறுமியின் தந்தை இன்று தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சின்னாளபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சிறுமிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் சிறுமியின் தாய் உடுமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
- சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் பக்கத்து வீட்டிலுள்ள கூலித்தொழிலாளி முருகன் என்பது தெரிய வந்துள்ளது.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் முருகன்(வயது 32).கூலித் தொழிலாளி.இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 11 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.இந்தநிலையில் இவருடைய பக்கத்து வீட்டில் உள்ள 16 வயது சிறுமியிடம் முருகன் ஆசை வார்த்தைகள் கூறி,கடந்த 6 மாதங்களாக கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துள்ளார்.இந்தநிலையில் சிறுமிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் சிறுமியின் தாய் உடுமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அது குறித்து விசாரித்தபோது சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் பக்கத்து வீட்டிலுள்ள கூலித்தொழிலாளி முருகன் என்பது தெரிய வந்துள்ளது.இதனையடுத்து சிறுமியின் தாய் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- இருவரும் தனிமையில் உல்லா சமாக இருந்ததால், தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்து ள்ளார்.
- குழந்தைகள் நல அலு வலர்கள் மூலம் சிறுமி மீட்கப்பட்டார்.
கடலுார்:
கடலுார், திரு வந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவரு க்கும், 14 வயது சிறுமி க்கும் பள்ளியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டது. தற்போது இருவருமே பாதியில் படிப்பை நிறுத்திவிட்டனர். பின்னர் இருவரும் தனிமையில் உல்லா சமாக இருந்ததால், தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்து ள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவி னர்கள் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், குழந்தைகள் நல அலு வலர்கள் மூலம் சிறுமி மீட்கப்பட்டு, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, 16 வயது சிறுவனை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
- சிறுவன் சிறுமியை தனது அக்காள் ஊரான விழுப்புரம் பனக்குப்பம் பகுதிக்கு அழைத்து சென்றார்.
- தனியாக இருந்த சிறுமியிடம் சிறுவனின் அக்காள் உனக்கு எனது தம்பியுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது. நீ எப்படி கர்ப்பமானாய் என்று கேட்டுள்ளார்.
கடலூர்:
கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி திருவந்திபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்துவந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 14 வயது சிறுமி படிக்கும் பள்ளியில் படித்து வந்தார். அப்போது இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கண்களால் பேசிய அவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தனர். இந்த விவகாரம் அரசல் புரசலாக தெரியவந்தது. இதனால் 2 பேரும் பள்ளியில் இருந்து படிப்பை நிறுத்திவிட்டனர். இதற்கிடையே அந்த சிறுமி கர்ப்பமானார்.
அதிர்ச்சியடைந்த சிறுமி தனது காதலனிடம் தெரிவித்தார். உடனே காதலன் உனனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதியளித்தார். அதன்பின்னர் அந்த சிறுவன் சிறுமியை தனது அக்காள் ஊரான விழுப்புரம் பனக்குப்பம் பகுதிக்கு அழைத்து சென்றார்.
அப்போது சிறுவன் தனது அக்காளிடம் நான் இவளை திருமணம் செய்ய உள்ளேன். எனவே பத்திரமாக பாதுகாக்கும்படி கூறிவிட்டு தனது ஊருக்கு வந்துவிட்டார். தனியாக இருந்த சிறுமியிடம் சிறுவனின் அக்காள் உனக்கு எனது தம்பியுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது. நீ எப்படி கர்ப்பமானாய் என்று கேட்டுள்ளார்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம்கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் குழந்தைகள் நல காப்பகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது நடந்த விபரத்தை கண்ணீர் மல்க அந்த சிறுமி கூறினார். சம்பவம் நடந்த இடம் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் உடனடியாக அங்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது மேற்கண்ட தகவலை தெரிவித்தார். அதன்பேரில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர். சிறுமி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கைதான சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
- சிறுமி பண்ருட்டி தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றார்
- சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த ஏ.ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி பண்ருட்டி தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றார். அதே பகுதியான விலங்கல்பட்டை சேர்ந்த ராஜ்குமார் (வயது 24). அவரது சகோதரி வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி சில தினங்களாக சோர்வாக இருந்ததுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் நேற்று மாலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் அதிர்ச்சியடைந்து, 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை அவரது தாயாரிடம் தெரிவித்தார். இது குறித்து சிறுமியிடம் அவரது தாயார் விசாரித்த போது ராஜ்குமார் நடந்து கொண்டதை பற்றி கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். மேலும், ராஜ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
- அஜித்குமார் சென்னையில் செயல்படும் ஒரு பேக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 4-ந் தேதி சொந்த கிராமத்திற்கு வந்தார்.
திருவாடானை:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 சிறுமி பிளஸ்-1 வரை படித்துள்ளார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதியில் தங்கி முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் தொத்தார் கோட்டையை சேர்ந்த உறவினர் ராஜேந்திரன் மகன் அஜித்குமார் (வயது25) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அஜித்குமார் சென்னையில் செயல்படும் ஒரு பேக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரும், சிறுமியும் 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித்குமார் அடிக்கடி சிறுமியை சந்தித்து வந்தார். அப்போது சென்னை திருவான்மியூரில் உள்ள லாட்ஜூக்கு அழைத்து சென்று சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 4-ந் தேதி சொந்த கிராமத்திற்கு வந்தார்.
பின்னர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் காளையார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக திருவாடானை மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சிறுமியின் பெற்றோர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி கூலிவேலைக்கு சென்று வருகின்றனர்.
- சிறுமியின் தாய் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் அரூர் சிக்கனூரில் உள்ள அருந்ததியர் தெருவைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமியின் பெற்றோர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி கூலிவேலைக்கு சென்று வருகின்றனர். இதன் காரணமாக சிறுமி உள்பட 3 குழந்தைகளையும் பாட்டி வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி சொந்த ஊருக்கு கணவன், மனைவியும் வந்தனர். அப்போது தாயிடம் சிறுமி தனக்கு 4 மாதங்களாக வயிற்றில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தார்.
உடனே அவரை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தார்.
இதில் அதே ஊரைச் சேர்ந்த லெனின்குமார் என்கிற பார்த்திபன் (30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. லெனின்குமார் நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிறை வார்டனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரையை விற்பனை செய்த மருந்துக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
- சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்று போலீசார் விசாரித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் மாணவியின் எதிர்காலம் கருதி ரகசியமாக கருவை கலைக்க முடிவு செய்தனர்.
இதற்காக கருக்கலைப்பு மாத்திரையை மருந்து கடையில் இருந்து வாங்கி வந்து சிறுமிக்கு கொடுத்தனர். இந்த மாத்திரையை சாப்பிட்ட சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்தப்போக்கு அதிகமாகி சிறுமி இறந்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரையை விற்பனை செய்த மருந்துக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதற்கிடையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கோவில் வழியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர் ராமேசுவரம் சென்று தனது உறவினர் வீட்டில் பதுங்கிக்கொண்டார். உடனே போலீசார் அங்கு சென்று அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
விருதுநகர்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள மெய்யனூத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது75). இவரது 17 வயது பேத்தி திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் 2 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
பெரியசாமி அவரிடம் விசாரித்தபோது காரியா பட்டியில் நடந்த பங்குனி பொங்கல் திருவிழாவுக்காக உறவினர் வீட்டுக்கு சென்ற போது கீழஉப்பிலிக்குண்டு பகுதியை சேர்ந்த பால் பாண்டி என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து பால்பாண்டியிடம் சிறு மியை திருமணம் செய்து கொள்ளுமாறு உறவி னர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்தார். இதைத்தொடர்ந்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெரியசாமி புகார் செய்தார். போலீசார் பால்பாண்டி மீது போக்சோ வில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
மற்றொரு சம்பவம்
விருதுநகரில் கிழக்கு பகுதியில் உள்ள குடி யிருப்பை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சிறுமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பெற்றோர் கள் சிறுமியிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவருடன் ஒரு வருடமாக பழக்கம் இருப்பதாகவும், அவர் அங்குள்ள தியேட்டர் பகுதிக்கு அழைத்து சென்றும் பெற்றோர் வெளியே செல்கிறபோது வீட்டிற்கு வந்தும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொள்ளாச்சி ஆஸ்பத்திரியில் உண்மை தெரிய வந்தது
- போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து முடிந்து உள்ளார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிறுமிக்கு அவரது உறவினர் மகனாக 21 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த பிப்ரவரி மாதம் 2 பேரும் பழனிக்கு சென்றனர். பின்னர் அங்கு வைத்து 2 பேரும் திருமணம் செய்தனர். இதனையடுத்து 2 பேரும் செட்டிக்காபாளையத்தில் ஒன்றாக வசித்து வந்தனர்.
இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். சிறுமிக்கு ரத்த பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
அப்போது டாக்டர்கள் சிறுமியின் வயதை பார்த்த போது அவர் 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது.
பின்னர் டாக்டர்கள் இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் 17 வயதில் திருமணம் செய்து கர்ப்பமானது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
- பெற்றோர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு மரப்பாலம், வள்ளுவர் வீதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (32). பூக்கடைக்காரர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் ரகுமான் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர். அப்போது பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அப்துல் ரகுமான் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அப்துல் ரகுமான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
- 16 வயதுடைய சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயதுடைய சிறுவன் பழக்கமாகி உள்ளார்.
- மாத்திரைகளை சாப்பிட்ட சிறுமிக்கு வீட்டிலேயே கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் வடிகால் அருகே நிறைய பறவைகள் சுற்றிக்கொண்டு இருந்தன. இதை பார்த்த சிலர், அங்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. தூக்கி வீசப்பட்ட நிலையில், கரு இருந்ததை அடுத்து, பறவைகள் அதனை இரையாக்கவே அங்கு அதிகளவில் பறந்துள்ளன.
மயக்க நிலையில் இருந்த கருவை நேரில் பார்த்த சிலர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் கருவை சோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் கடந்த 9-ந்தேதி சூரத்தின் அபேக்ஷா நகரில் நிகழ்ந்தது. இதனை தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் 16 வயதுடைய சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். முதலில் தாயும், சிறுமியும் மறுத்த நிலையில், போலீசார் அவர்களின் பாணியில் விசாரித்தபோது உண்மை வெளிவந்தது.
போலீசார் விசாரணையில், 16 வயதுடைய அச்சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயதுடைய சிறுவன் பழக்கமாகி உள்ளார். நட்பாக தொடங்கிய இவர்களின் சந்திப்பு நாளடைவில் காதல் கடந்த உறவாக மாறியுள்ளது. இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார்.
சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும், சிறுவன் உத்தர பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கும், பின்னர் மும்பைக்கும் தப்பியோடி உள்ளார். இதனால் சிறுவன் சிறுமியின் கர்ப்பதை கலைக்க முடிவு செய்து மும்பையில் இருந்து மாத்திரைகளை வாங்கி அனுப்பி உள்ளான். மாத்திரைகளை சாப்பிட்ட சிறுமிக்கு வீட்டிலேயே கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கருவை தூக்கி வடிகால் அருகே வீசியுள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுமி போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் சிறுமி கர்ப்பமாக இருந்ததை டாக்டர்கள் உறுதி உறுதிபடுத்தி உள்ளனர். இதனையடுத்து சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.