என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl pregnancy"

    • சிறுமிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் சிறுமியின் தாய் உடுமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
    • சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் பக்கத்து வீட்டிலுள்ள கூலித்தொழிலாளி முருகன் என்பது தெரிய வந்துள்ளது.

     உடுமலை:

    உடுமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் முருகன்(வயது 32).கூலித் தொழிலாளி.இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 11 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.இந்தநிலையில் இவருடைய பக்கத்து வீட்டில் உள்ள 16 வயது சிறுமியிடம் முருகன் ஆசை வார்த்தைகள் கூறி,கடந்த 6 மாதங்களாக கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துள்ளார்.இந்தநிலையில் சிறுமிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் சிறுமியின் தாய் உடுமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அது குறித்து விசாரித்தபோது சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் பக்கத்து வீட்டிலுள்ள கூலித்தொழிலாளி முருகன் என்பது தெரிய வந்துள்ளது.இதனையடுத்து சிறுமியின் தாய் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

    இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்த போது அந்த தகவல் உண்மைக்கு மாறானது என்பது தெரியவந்தது.மேலும் அந்த சிறுமி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றதாகவும் அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்ததாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அந்த 14-வயது சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த சிறுமி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவர் சிறுமியை பலாத்காரம் செய்ததில் கருவுற்றதும் தெரியவந்துள்ளது. மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    ×