என் மலர்

    நீங்கள் தேடியது "girl pregnant"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இருவரும் தனிமையில் உல்லா சமாக இருந்ததால், தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்து ள்ளார்.
    • குழந்தைகள் நல அலு வலர்கள் மூலம் சிறுமி மீட்கப்பட்டார்.

    கடலுார்:

    கடலுார், திரு வந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவரு க்கும், 14 வயது சிறுமி க்கும் பள்ளியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டது. தற்போது இருவருமே பாதியில் படிப்பை நிறுத்திவிட்டனர். பின்னர் இருவரும் தனிமையில் உல்லா சமாக இருந்ததால், தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்து ள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவி னர்கள் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், குழந்தைகள் நல அலு வலர்கள் மூலம் சிறுமி மீட்கப்பட்டு, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, 16 வயது சிறுவனை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 பேரும் கடந்த மார்ச் மாதம் தென்னம்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தனர்.
    • போலீசார் தினேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கோவை பேரூர் அருகே உள்ள பஞ்சு மில்லுக்கு வேலைக்கு வந்தார்.

    அப்போது சிறுமிக்கு முள்ளங்காடு பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த மார்ச் மாதம் தென்னம்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். பின்னர் தினேஷ் அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். சிறுமியை கவனிக்க யாரும் இல்லாததால் தினேஷ் அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அவர் தனது பெற்றோரிடம் சிறுமிக்கு 19 வயது ஆகி விட்டது என கூறினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தினேஷ் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் தினேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுமியை கர்ப்பம் ஆக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    • உசிலம்பட்டி சமூக நல அதிகாரி விருமாயி சேடப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் பேரையூர், நரியம்பட்டியைச் சேர்ந்தவர் அய்யர் (34). இவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த மாதம் திருமணம் செய்தார்.

    இதற்கு அதே பகுதியில் வசிக்கும் மல்லிகா, அவரது கணவர் ராஜா உடந்தையாக இருந்தனர். திருமணத்துக்குப் பிறகு அய்யர், சிறுமியின் எதிர்ப்பையும் மீறி பல்வேறு தருணங்களில் பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமாக உள்ளார்.

    இது குறித்து உசிலம்பட்டி சமூக நல அதிகாரி விருமாயி சேடப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வாலிபர் அய்யரை கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒரத்தநாடு அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே சில்லத்தூர் வெட்டிகாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்தாண்டு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பட்டுக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் ஒரு வாலிபரை கைது செய்தனர். பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த சிறுமி, ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை யாருக்கு சொந்தம் என்பதை அறிவதற்காக சிறுமிக்கு மரபணு சோதனை செய்யப்பட்டது.

    அப்போது குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்பில்லை என தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது சிறுமி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர் பாச்சூரை சேர்ந்த பொன்னையன் மகன் பால்ராஜ் (வயது 27) என தெரிவித்தார். இது தொடர்பாக விசாரித்து, பட்டுக்கோட்டை மகளிர் போலீசார் பால்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.

    கைதான பால்ராஜூக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேனி அருகே பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே காட்டு நாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகி 5 வயது குழந்தை உள்ளது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

    இந்த வி‌ஷயம் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்ததால் அவர் சண்டை போட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால் கார்த்திக் அடிக்கடி இளம்பெண் வீட்டுக்கு சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் அந்த பெண் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    கணவர் பிரிந்து சென்று விட்டார். நான் கர்ப்பமாக உள்ளேன். எனவே என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் தன்னை சந்தித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து தேனி அனைத்து மகளிர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பழனி அருகே 13 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    பழனி:

    பழனி அருகே உள்ள சின்னகலையம்புத்தூர் ஊராட்சியை சேர்ந்த 13 வயது சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்தனர். இதை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன்தான் காரணம் என கூறினார்.

    ஆனால் பள்ளியில் சென்று விசாரித்த போது மாணவி தெரிவித்த பெயரில் எந்த மாணவனும் இல்லை என தெரிய வந்தது. இதனையடுத்து தாசில்தார் பழனிச்சாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பழனி பகுதியைச் சேர்ந்த காமராஜ் (55) என்ற தொழிலாளிதான் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கற்பழித்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருமண ஆசைகாட்டி சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் தனது தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கண்மாய்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த களச்சி கருப்பன் என்பவரது மகன் ராஜபிரபு கடந்த 6 மாதமாக காதலித்து வந்தார்.

    அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறிய ராஜபிரபு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பிணியானார்.

    தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமி கேட்டபோது, ராஜ பிரபு மற்றும் அவரது தந்தை களச்சி கருப்பன் ஆகியோர் மறுத்து விட்டனர்.

    இது குறித்து மேலவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து ராஜபிரபு, அவரது தந்தை களச்சி கருப்பன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பல்லடம் அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்த டெய்லர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    பல்லடம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் சவுந்திரபாண்டி(வயது 27). இவர் கடந்த 3 வருடங்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து சின்னக்கரையில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். 

    இந்தநிலையில் சவுந்திரபாண்டிக்கு பனியன் கம்பெனியில் வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இந்த சமயத்தில் சவுந்திரபாண்டி திருமணம் செய்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார்.

    பின்னர் கடந்த 2 மாங்களுக்கு முன்பு சவுந்திரபாண்டி ஊருக்கு சென்றார். மீண்டும் அவர் திரும்பி வரவில்லை. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி மயங்கி கீழே விழுந்தார். அவரை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து பெற்றோர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவர் சவுந்திரபாண்டியுடன் பழகியதால் கர்ப்பமானதாக கூறினார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் மாணிக்கம் சவுந்திரபாண்டியை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர் சிறுமியை கர்ப்பமாக்கியதை ஒப்புக்கொண்டார். மேலும் ஊருக்கு சென்ற சவுந்திரபாண்டி சிறுமியிடம் பழகியதை மறைத்து கடந்த 9-ந் தேதி உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சவுந்திரபாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலம் காப்பகத்தில் தங்கி இருந்த 16 வயது பெண் கர்ப்பமடைந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தேக்கம்பட்டி ஊத்துக்கடை பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

    அவருக்கு திடீரென மனநலம் பாதித்ததால் பெற்றோர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டனர். இந்த பெண் அடிக்கடி காணாமல் போய்விடுவது வழக்கம். வீட்டை விட்டு வெளியேறி மனம்போன போக்கில் நடந்து சென்று விடுவார்.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்த அந்த பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பெண்ணின் தாயார் சென்னையில் வீட்டு வேலை செய்து வருகிறார். 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை அவர் சேலம் வருவது வழக்கம்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர் மகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். பின்னர் மீண்டும் காப்பகத்தில் சேர்த்துவிட்டனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் மகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

    அந்த பெண் உடல் மெலிந்து சோர்வுடன் காணப்பட்டதால், சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கியது யார் என்று தெரியவில்லை. அவர் மனநிலை சரியில்லாமல் சுற்றியதை பார்த்து யாராவது அவரது கற்பை சூறையாடி இருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணம் ஆகாமல் 16 வயதில் பெண் கர்ப்பமான சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காதலித்து திருமணம் செய்ததில் 15 வயது சிறுமி கர்ப்பம் ஆனதால் காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே தெங்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் கோவளம் டி.சி. நகர் பகுதிக்கு வேலைக்காகச் சென்றிருந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயது பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணை ராஜேஷ் காதலித்தார்.

    இந்த தகவல் அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ராஜேஷ் தனது ஊருக்கு வந்தார். அவரது உறவினர்கள் ராஜேசுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

    அங்குள்ள ஒரு வீட்டில் ராஜேசும், அந்த பெண்ணும் குடித்தனம் நடத்தினர். இதில் அந்த பெண் கர்ப்பம் ஆனார். இதற்கு பரிசோதனை செய்வதற்காக ராஜேஷ், அந்த பெண்ணை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.

    பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். சிறுமி போல் இருந்ததால் அந்த பெண்ணின் வயதை கேட்டனர். அப்போது அவர் தனக்கு 15 வயதே ஆவதாக தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இதுபற்றி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி ஆகியோர் நேரில் வந்து அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது ராஜேஷ் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், பலமுறை அவர் தன்னுடன் உறவு கொண்டதால் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி அவரை கர்ப்பமாக்கியதற்காக ராஜேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ராஜேசுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது உறவினர்கள் அபிஷா, சரோஜா, சுதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    ராஜேசும், அவரது உறவினர்களும் தலை மறைவாகி உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp