சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெரம்பலூர் அருகே 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் டிரைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
குண்டர் சட்டம்
குண்டர் சட்டம்
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி கிராமத்தை சேர்ந்த வேலுசாமி மகன் கனகராஜ் (வயது29). டிரைவரான இவர் 15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்தநிலையில் கனகராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையின்பேரில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கனகராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். 

இதையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகலினை மகளிர் போலீசார் திருச்சி மத்திய சிறையில் உள்ள கனகராஜிடம் வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com