சிறுமியை கர்ப்பம் ஆக்கியவர் கைது

சிறுமியை கர்ப்பம் ஆக்கியவர் கைது செய்யப்பட்டார். உசிலம்பட்டி சமூக நல அதிகாரி விருமாயி சேடப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
சிறுமியை கர்ப்பம் ஆக்கியவர் கைது
Published on

மதுரை

மதுரை மாவட்டம் பேரையூர், நரியம்பட்டியைச் சேர்ந்தவர் அய்யர் (34). இவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த மாதம் திருமணம் செய்தார்.

இதற்கு அதே பகுதியில் வசிக்கும் மல்லிகா, அவரது கணவர் ராஜா உடந்தையாக இருந்தனர். திருமணத்துக்குப் பிறகு அய்யர், சிறுமியின் எதிர்ப்பையும் மீறி பல்வேறு தருணங்களில் பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமாக உள்ளார்.

இது குறித்து உசிலம்பட்டி சமூக நல அதிகாரி விருமாயி சேடப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வாலிபர் அய்யரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com