என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnant"

    • சேகரின் தந்தை சட்டையா அவர்களின் திருமணத்தை சிறிதும் விரும்பவில்லை
    • ராணி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    தெலுங்கானாவில் மகன் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை கர்ப்பிணி மருமகளை வெட்டிக்கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் தாஹேகம் மண்டலத்தில் உள்ள கெர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். BC சமூகத்தை சேர்ந்த இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராணி என்ற பட்டியலின (ST) பெண்ணை காதலித்து மணந்தார்.

    சேகரின் தந்தை சட்டையா அவர்களின் திருமணத்தை சிறிதும் விரும்பவில்லை. மகன் மற்றும் மருமகள் மீது அவர் வஞ்சத்துடன் இருந்து வந்துள்ளார்.

    தற்போது ராணி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சட்டையாவின் சாதிவெறி ரத்த வெறியாக மாறியுள்ளது. நேற்று(சனிக்கிழமை) கர்ப்பிணி மருமகளை அவர் இரக்கமின்றி கோடரியால் தாக்கினார். தாக்குதலில் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சட்டையாவை கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.   

    • இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது.
    • ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவரது உடலை தங்கள் வயலில் வைத்து எரித்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தில், வரதட்சணை கேட்டு 21 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் கணவர் மற்றும் உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் .

    மைன்புரி மாவட்டத்தின் கோபால்பூர் கிராமத்தில் ரஜினி குமாரி என்ற அந்த 21 பெண் கணவர் சச்சின் உடன் வசித்து வந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது. ரஜினி அண்மையில் கர்ப்பமாகி உள்ளார்.

    ரஜினியை கணவர் சச்சினும் அவரது உறவினர்களும் ரூ.5 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

    இதை நிறைவேற்றத்தால், அவர்கள் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) ராஜனியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் ரஜினி உயிரிழந்தார்.

    பின்னர், ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவரது உடலை தங்கள் வயலில் வைத்து எரித்துள்ளனர்.

    இந்தச் சம்பவம் குறித்து அறிந்த ராஜனியின் தாயார் சுனிதா தேவி சனிக்கிழமை அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதற்கிடையே தாயார் சுனிதா தேவி அளித்த குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சச்சின், அவரது சகோதரர்கள் பிரான்ஷு மற்றும் சஹ்பாக், உறவினர்களான ராம்நாத், திவ்யா மற்றும் டினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.    

    • சீனாவில் ஒரு பெண் அடுத்தடுத்து கர்ப்பமாகி 3 குழந்தைகளை பெற்றெடுத்தார்.
    • இதனால் அவர் ஜெயிலுக்குப் போவதை தவிர்த்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பீஜிங்:

    சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 2020-ம் ஆண்டில் மோசடி வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார்.

    இப்படி ஒரு விலக்கு இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார்.

    இதன் விளைவாக, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து ஜெயிலுக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார்.

    தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், இதுபோல் தொடர்ந்து கர்ப்பம் தரிப்பதை அறிந்து கொண்டனர். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படலாம் என தெரிவிக்கிறது.

    • வழக்கமான மாதவிடாய் ஏற்படுவதில் எந்த மாறுபாடும் இல்லாமல் இருந்துள்ளது.
    • வயிற்று வலியால் கழிவறைக்கு சென்றபோது, பெண் குழந்தை பிறந்துள்ளது.

    இங்கிலாந்தை சேர்ந்தவர் மைக்கேல் க்ரீன். இவரது மனைவி ஹெலன். இவர்களுக்கு 6 வயதில் டார்சி என்ற பெண் குழந்தை உள்ளது.

    மைக்கேல் க்ரீன் தனது குடும்பத்துடன் 10 நாள் சுற்றுப் பயணமாக கனடா சென்றுள்ளார். டோரான்டோவில் தங்கியிருந்தபோது ஹெலனுக்கு சற்று வயிறு வலித்துள்ளது. இதனால் கழிவறைக்கு சென்றுள்ளார். திடீரென வயிற்றில் இருந்து வெளியே ஏதோ ஒன்று தள்ளுவது போன்று உணர்ந்துள்ளார். அப்போது கீழே பார்த்தபோதுதான், அவரது வயற்றில் இருந்து குழந்தை பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.

    ஹெலன், தான் கர்ப்பிணியாக இருப்பதாக உணர்ந்ததே இல்லையாம். அதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லையாம் எனத் தெரிவித்துள்ளார். இந்த வகையான கர்ப்பத்திற்கு cryptic pregnancy ஆகும். அவருக்கு வழக்கமாக வரக்கூடிய மாதவிடாயில் எந்த மாறுபாடும் ஏற்படவில்லையாம். அப்படி இருந்தும் குழந்தை பிறந்துள்ளது.

    என்றாலும், தற்போது தங்களது குடும்பத்தில் கூடுதலான ஒரு பெண் குழந்தை இணைந்துள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளனர். இது மிக மிகப்பெரிய ஷாக். இருந்தாலும் லவ்லி சர்ப்பிரைஸ் என ஹெலன் தெரிவித்துள்ளார்.

    • 2 மாதங்களுக்கு முன்பு என் மனைவி கர்ப்பம் தரித்தார்
    • முதலில் என் அமணிவியிடம் வேலையை விடுமாறு கூறினேன்.

    கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது ரூ.1.2 கோடி (வருடத்திற்கு) ஊதிய வேலையை ராஜினாமா செய்துள்ள சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    இளைஞர் ஒருவர் Reddit இல் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "நான் WHF (WORK FROM HOME) முறையில் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி ஊதியம் பெற்று வருகிறேன். 2 மாதங்களுக்கு முன்பு என் மனைவி கர்ப்பம் தரித்தார். இதையடுத்து முதலில் அவளை வேலையை விட சொன்னேன். ஆனால் மனைவி தொடர்ந்து வேலை செய்ய விரும்பியதால் மனைவியை கவனித்துக்கொள்ள நான் வேலையை விட்டுவிட்டேன். வீட்டிலிருந்து மனைவியை கவனித்துக்கொள்ள போகிறேன். உங்கள் குடும்பத்தினருக்கு தேவைப்படும் போது நீங்கள் அவர்களுடன் இருப்பதை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த பதிவு இணையத்தில் வைரலாக அந்த இளைஞரை பாராட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    • விசாரணையில் அவரது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது
    • இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைக்கின்றனர்.

    அசாமில் உள்ள ஸ்ரீபூமியைச் சேர்ந்தவர் புலோக் மலாக்கர். இவர் சில்சாரில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளாக கைனகாலஜிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார்.

    இதுவரை சுமார் 50 பிரசவங்களை செய்துள்ளார். அதுவும் சிசேரியன் பிரசவங்கள். இந்நிலையில் அவர் போலி மருத்துவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    கடைசியாக ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் போது ஆபரேஷன் தியேட்டரில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார்.

    மூத்த காவல்துறை அதிகாரி நுமல் மஹாதா கூறுகையில், புலோக் ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்றும், விசாரணையில் அவரது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது என்றும் கூறினார். ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைக்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரியில் போலி மருத்துவர்களைப் பிடிக்க அசாம் அரசு சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.   

    • சகோதரி உறவு முறையில் வருவதால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் இரு தரப்பு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • பிரியங்கா கர்ப்பம் அடைந்து 8 மாதங்கள் ஆகி விட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த தண்டலம் ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சுரேந்திரன் (வயது28). இவருக்கும் சோழிங்கநல்லூரில் வசித்து வரும் உறவினர் மகளான பிரியங்காவுக்கும்(25) இடையே சிறுவயது முதலே பழக்கம் ஏற்பட்டது. என்ஜினீயரான பிரியங்கா போரூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சுரேந்திரனின் தாயும், பிரியங்காவின் தாயும் உடன் பிறந்த சகோதரிகள் ஆவர். எனவே சுரேந்திரன்-பிரி யங்கா நட்பாக பழகி வந்ததை குடும்பத்தினர் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கிடையே அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இது பற்றி தெரிந்ததும் இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முறை தவறிய காதலை எடுத்து கூறி அறிவுரை வழங்கினர். ஆனால் காதலர்கள் இருவரும் இதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தனிமையில் சுற்றி பழகி வந்தனர். இதற்கிடையே பிரியங்கா கர்ப்பம் அடைந்தார். இதனை கூறி அவர்கள் திருமணம் செய்து வைக்குமாறு குடும்பத்தாரிடம் கேட்டு உள்ளனர். ஆனால் இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கூறி கர்ப்பத்தை கலைத்து விடலாம் எனவும் சகோதரி உறவு முறையில் வருவதால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் இரு தரப்பு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் பிரியங்கா கர்ப்பம் அடைந்து 8 மாதங்கள் ஆகி விட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் காதலர்கள் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

    திருமணம் செய்து வைக்க பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த காதலர்கள் சுரேந்திரனும், பிரியங்காவும் நேற்று இரவு தண்டலம் பகுதியில் உள்ள பம்புசெட் அறையில் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டனர்.

    நீண்டநேரம் ஆகியும் வெளியே சென்ற சுரேந்திரன் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தேடி சென்றபோது பம்பு செட் அறையில் சுரேந்திரனும், பிரியங்காவும் தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருப்போரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முறைதவறிய காதலால் 8 மாத கர்ப்பிணி காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நான் எந்த முஸ்லிம் நோயாளிகளையும் பார்க்கப் போவதில்லை"
    • துயரத்திலும் பயத்திலும் இருக்கிறாள். தனக்காக மட்டுமல்ல, அவளுக்குள் வளரும் உயிருக்காகவும்.

    காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கடந்த ஏப்ரல் 22 அன்று பயகரவாத்திகளால் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு அவர்களின் மத அடையாளங்களை பயங்கரவாதிகள் கேட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவத்துக்குப் பின் வட இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், இஸ்லாமியர் என்பதால் 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    கஸ்தூரி தாஸ் நினைவு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவரான டாக்டர் சி.கே. சர்க்கார், "உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் என் மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொல்கிறார்கள், நீங்கள் கொலைகாரர்கள்.

    உங்கள் கணவர் இந்துக்களால் கொல்லப்பட வேண்டும், அப்போதுதான் இந்துக்கள் அனுபவித்த வலியை நீங்கள் உணர முடியும். முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக மாறக் கற்பிக்கப்படும் மதரஸாக்கள் மற்றும் மசூதிகளுக்கு மட்டுமே நீங்கள் சிகிச்சைக்காகச் செல்ல வேண்டும்.திரும்பி வராதே, நீங்களெல்லாம் ஒரே மாதிரிதான்" என்று கூறி, அவர் 7 மாதமாக சிகிச்சை அளித்து வந்த முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

    "இந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம், மனம் உடைந்துள்ளோம். கடந்த ஏழு மாதங்களாக டாக்டர் சர்க்காரின் பராமரிப்பில் இருக்கும் எனது கர்ப்பிணி மைத்துனிக்கு நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்காக மட்டுமே அவருக்கு சிகிச்சையளிக்க அவர் வெளிப்படையாக மறுத்ததைக் கண்டு திகைப்பு ஏற்பட்டது.

    அப்போதிருந்து அவள் அழுது கொண்டிருக்கிறாள். துயரத்திலும் பயத்திலும் இருக்கிறாள். தனக்காக மட்டுமல்ல, அவளுக்குள் வளரும் உயிருக்காகவும்.

    அவளுக்கு ஆதரவு, இரக்கம் மற்றும் கவனிப்பு தேவைப்படும் நேரத்தில், அவள் வெளிப்படையான தப்பெண்ணத்தையும் கொடுமையையும் சந்தித்தாள்" என்று அந்தப் பெண்ணின் உறவினரான வழக்கறிஞர் மெஹ்ஃபுசா கதுன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

    இதுகுறித்து பேசிய சமூக ஆர்வலர் மோனா அம்பேகோன்கர், "அவர் (மருத்துவர்) ஒரு ஆபத்தான குற்றவாளி. மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    • இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது.
    • கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாக சிறுவன் தெரிவித்துள்ளான்.

    சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.

    இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது. 13 வயது சிறுவன் ஒருவன் அவசர சிகிச்சை மையத்தை அழைத்து, தனது 37 வார கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாகவும், அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

    ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், செல்போனில் மருத்துவ உதவியாளர் சென் சாயோஷூனின் ஆலோசனையின் படி தனது தாய்க்கு சிறுவன் பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    சிறிது நேரத்திற்குப் பிறகு, மருத்துவ உதவியாளர்கள் வந்து தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். 

    • 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றெடுத்தார்.
    • பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது

    உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது மருத்துவரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    லக்னோவில் 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் ஷி மெடிக்கல் கேர் என்ற மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார். அதன்பின் பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    சமீபத்தில் லக்னோ மருத்துவக் கல்லூரியில் சந்தியா எடுத்த எக்ஸ்ரேயில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. மார்ச் 26 ஆம் தேதி அவரது வயிற்றிலிருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

    இதனையடுத்து தனது மனைவி சந்தியாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், 17 ஆண்டுகளாக தனது மனைவி வேதனைப்பட்டதற்கு மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வாலின் அலட்சியம் தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

    • ஏற்காட்டில் ஒரு பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.
    • ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (20). நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு இன்று அதிகாலை 1 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஏற்காடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் பணியில் இருந்த சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோர் வந்து நந்தினியை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆத்து பாலம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது. அதை தொடர்ந்து ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், நந்தினிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    இதையடுத்து 1.30 மணி அளவில் நந்தினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நந்தினி, குழந்தையை சேலம் அரசு மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்தனர். குறித்த நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு நந்தினியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

    • கள்ளக்காதல் மூலம் கர்ப்பிணியான பெண் குழந்தையுடன் மாயமானார்.
    • அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் விவேகானந்தர் புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவரது மனைவி அழகு ராணி (25). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    கடந்த சில மாதங்களாக அழகு ராணி தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டி என்பவருடன் பழகி வந்தார். இது குறித்து கணவர் கேட்டபோது தான் சகோதர முறையில் பழகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அழகு ராணி தனது கணவரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டி தான் காரணம் என கூறியுள்ளார். இதனால் மாரிமுத்து அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அழகு ராணி தனது 5 வயது மகளுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாரிமுத்து அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மனைவி மாயமான தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த பாண்டி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×