என் மலர்
நீங்கள் தேடியது "mother"
- தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.
- சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே 2016ல் நகை, பணத்திற்காக தாய், மகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வசந்தா (64) மற்றும் அவரது மகள் தேன்மொழி (32) ஆகிய இருவரையும் வீட்டு வேலைக்கு வந்த சத்யா, தவ்லத் பேகம், இவர்களின் நண்பர் ஜெயக்குமார் இணைந்து கொலை செய்துள்ளனர். மேலும், தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.
வீட்டின் உள்ளே மயங்கிக் கிடந்த சிறுமி, மறுநாள் காலை வெளியே வந்தபோதுதான் இந்த கொலைச் சம்பவம் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் மூவருக்கும் 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
- இந்த வீடியோவில் KTM பைக்கை அந்த இளைஞர் வாங்குகிறார்.
- அவருடன் இருந்த அம்மாவின் கழுத்திலும் நகைகள் இல்லாமல் இருந்தது இணையத்தில் பேசுபொருளானது.
புதிதாக பைக் வாங்கி அதனை ரீல்ஸ் விடியோவாக பதிவிட்ட அரியலூர் இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த வீடியோவில் KTM பைக்கை அந்த இளைஞர் வாங்குகிறார். அவருடன் அவரின் அம்மா, அப்பா தோற்றத்தில் 2 பேர் நிற்கின்றனர். குறிப்பாக அவருடன் இருந்த அம்மாவின் காதிலும் கழுத்திலும் நகைகள் இல்லாமல் இருந்தது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.
அம்மாவின் கழுத்தில் ஒரு நகை கூட இல்லாமல் இருக்கும் நிலையில், பையனுக்கு பைக் கேட்கிறதா? என்று பலரும் இணையத்தில் விமர்சனம் முன்வைத்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞர் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் என்னுடன் இருந்தவர் என் அத்தை என்றும் நான் சேமித்த பணம் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் கொடுத்த பணத்தில் தான் பைக் வாங்கினேன். எங்கள் பணத்தில் நாங்கள் பைக் வாங்கியதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய இளைஞரின் தாயார், "பையன் ஆசைப்பட்டான் வண்டி வாங்கி கொடுத்தேன். அதுல என்ன பிரச்சினை.நான் சம்பாரிக்கிறேன். அவன் சம்பாரிக்கிறான்.`பொறுமையா போ' அப்படினு அட்வைஸ் பண்ணுங்க. வேண்டாம்னு சொல்லல... அத விட்டுட்டு தேவையில்லாம கமெண்ட் பண்ணாதீங்க. ஏழைங்கன்னா இந்த வண்டி வாங்கி ஓட்ட கூடாதுனு ரூல்ஸ் இருக்கா?'' ஏன்னு தெரிவித்தார்.
- பெயர் சூட்டும் நிகழ்வில் வீட்டின் மேற்கூரைப் பூச்சு இடிந்து விழுந்தது
- உயிரிழந்த குழந்தையின் தாயார் ராதா மகேஸ்வரி மருத்துவமனையில் அனுமதி
தூத்துக்குடி அருகே குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வில் வீட்டின் மேற்கூரைப் பூச்சு இடிந்து விழுந்ததில், விழாவுக்கு வந்த எதிர்வீட்டைச் சேர்ந்த பெண்ணின் 11 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தையின் தாயார் ராதா மகேஸ்வரிக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் நடந்த இந்த துயரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும் அன்னைக்கும் உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உண்டாக்கும்.
- தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போடலாம்.
தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைகள் பெறும் நன்மைகள் குறித்தும், தாய்ப்பால் கொடுப்பதால் தாய் அடையும் நன்மைகள் குறித்தும் காண்போம்.
முதல்பால்...
குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பிலிருந்து வரும் முதல் பால் (கொலஸ்ட்ரம்) 'தங்க திரவம்' என அழைக்கப்படுகிறது. காரணம், மஞ்சள் நிறத்தில் வரும் இப்பாலில் புரதங்கள், ஆன்டிபாடிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் ஆரம்பகாலத்தில் குழந்தையின் செரிமான அமைப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கொலஸ்ட்ரமில் கொழுப்பு குறைவாகவும், இம்யூனோகுளோபுலின்கள் அதிகமாகவும் உள்ளது. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
தாய்ப்பாலில் ரத்த வெள்ளை அணுக்கள், ஆன்டிபாடிகள், நொதிகள் மற்றும் மனித பால் ஒலிகோசாக்கரைடுகள் (HMOs) நிறைந்துள்ளன. அவை புதிதாகப் பிறந்த குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மற்றும், உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வளர்க்கின்றன. குழந்தை வளரும் காலக்கட்டத்தில் இவை அத்தியாவசிய நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.
மூளை வளர்ச்சி
மூளை வளர்ச்சிக்கு அவசியமான டோகோசாஹெக்ஸெனாயிக் அமிலம் தாய்ப்பாலில் உள்ளது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் அவசியமாகிறது.

தாய்-சேய் பிணைப்பை தாய்ப்பால் வலுப்படுத்துகிறது
வயதுக்கு ஏற்ற வளர்ச்சி
குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ப தாய்ப்பாலின் கலவை மாறுபடும். ஆரம்ப பால் புரதத்தால் நிறைந்தது. அதே நேரத்தில் பிந்தைய பால் (ஹிண்ட்மில்க்) கெட்டியாகவும், கொழுப்பாகவும் இருக்கும். இது குழந்தையின் எடை அதிகரிப்பிற்கு மிகவும் முக்கியமானது.
உளவியல்
தாய்ப்பால் கொடுப்பது உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உண்டாக்குகிறது. தாய்-சேய் பிணைப்பை வலுப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் சீராக இருக்கும். தாய்ப்பால் குடிக்கக்கூடிய குழந்தை எப்பொழுதும் உற்சாகமாகக் காணப்படும், சோர்வாக இருக்காது.
நோய்தடுப்பு
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, உடல் பருமன், டைப் 1 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவு. மேலும் காது தொற்று மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு.
தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள்
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் ரத்தப்போக்கு நிற்கும். சுகப்பிரசவத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். தாய்ப்பால் கொடுப்பதால் அவை சரியாகும். தாய்ப்பால் கொடுக்க தாயின் கர்ப்பப்பை விரைவில் சுருங்கி விடும். இதன் காரணமாக வயிறு பெரிதாவது தடுக்கப்படும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் மீண்டும் கர்ப்பம் தரிப்பதில் இருந்து இடைவெளி கிடைக்கும். இது பெண்களுக்குச் சிறந்த நன்மை அளிக்கும். தாய்ப்பால் கொடுத்தால் இளமை போய்விடும் என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கிறது. ஆனால் தாய்ப்பால் கொடுத்தால் பெண்கள் இளமையாக இருப்பார்கள். முக்கியமாக தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோயை தடுக்கும். மேலும் கருப்பை புற்றுநோய், எலும்புப்புரை, இருதய நோய், உடல் பருமன் போன்றவற்றையும் தடுக்கும்.
- தாய் இல்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்ததை பேருந்து நிலைய ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
- இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விரைந்து விசாரணை நடத்தினர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனது 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக தவிக்கவிட்டு, ஆண் நண்பருடன் தாய் பைக்கில் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு இன்ஸ்டாவில் பழக்கமான ஆண் நண்பருடன் தாய் சென்றுள்ளார். தாய் இல்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்த பேருந்து நிலைய ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விரைந்து விசாரணை நடத்தி, சில மணி நேரங்களுக்குள் அந்தப் பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து போலீசார் அவரது கணவரைத் தொடர்பு கொண்டு குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தையை இளம்பெண்ணும் அவரின் தாயாரும் விற்க முயன்றுள்ளனர்.
- போலீசார் குழந்தையை விற்ற இளம்பெண், அவரது தாயார் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண் ஆகியோரை கைது செய்தனர்.
அசாம்:
அசாம் மாநிலம் சிவசாகர் சிவில் மருத்துவமனையில் கடந்த மாதம் 22 வயதான இளம்பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாகவில்லை. தகாத உறவில் குழந்தை பிறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் அந்த குழந்தையை இளம்பெண்ணும் அவரின் தாயாரும் விற்க முயன்றுள்ளனர். குழந்தை விற்கப்போகும் தகவல் குழந்தைகள் நலக்குழு மருத்துவமனைக்கு தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையை விற்க வேண்டாமென அந்த இளம்பெண்ணிற்கும், அவரது தாயாருக்கும் அறிவுரை வழங்கினர். அவர்களின் அறிவுறுத்தலையும் மீறி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்பே அவர்கள் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் குழந்தையை விற்ற இளம்பெண், அவரது தாயார் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண் ஆஷா பணியாளர் ஒருவர் என 3 பேரை கைது செய்தனர். குழந்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- சூடான இரும்புக் கம்பியால் குழந்தையின் கை, கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
- தீக்காயங்களைக் காட்டி, தனது தாய்தான் சூடு வைத்ததாகக் கூறும் வீடியோவும் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில், சேட்டை செய்ததற்காக தனது மகனின் கைகள், கால்கள் மற்றும் கழுத்தில் சூடான இரும்புக் கம்பியால் சூடு வைத்த ஒரு தாய் நேற்று கைது செய்யப்பட்டார்.
ஹுப்பள்ளி, திப்பு நகரில் திங்கட்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் சேட்டைகள் காரணமாக ஆத்திரமடைந்த தாய் அனுஷா ஹுலிமாரா, இந்த கொடூர தண்டனையை அளித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூடான இரும்புக் கம்பியால் மகனின் கை, கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
சிறுவனின் அழுகுரல் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையை மீட்டுள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை நலத்துறை அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தேவையான ஆதரவையும் கவனிப்பையும் வழங்க அறிவுறுத்தியுள்ளனர்.
- அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
- தனது குழந்தைகளை காப்பாற்றிய தாயின் வீடியோ இணையத்தில் வைரலானது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்திற்கு பிறகு அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கிய தனது குழந்தைகளை மீட்க போராடிய ஒரு தாயின் வீடியோ இணையத்தில் வைரலானது.
பெண் ஒருவர் பால்கனியில் நின்றுகொண்டு, தன உயிரை பற்றி கவலைப்படாமல் கீழே தரையில் இருந்தவர்களிடம் தனது 2 குழந்தைகளை கவனமாக ஒப்படைத்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, தனது குழந்தைகளின் உயிரை துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய தாயை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
- இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது.
- கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாக சிறுவன் தெரிவித்துள்ளான்.
சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.
இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது. 13 வயது சிறுவன் ஒருவன் அவசர சிகிச்சை மையத்தை அழைத்து, தனது 37 வார கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாகவும், அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், செல்போனில் மருத்துவ உதவியாளர் சென் சாயோஷூனின் ஆலோசனையின் படி தனது தாய்க்கு சிறுவன் பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, மருத்துவ உதவியாளர்கள் வந்து தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
- யோகேஷ் குமார் என்ற 18 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
- பலத்த காயமடைந்த ரேகா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மகன் இறந்த துக்கம் தாளாமல் மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யோகேஷ் குமார் என்ற 18 வயது இளைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
யோகேஷ் உயிரிழந்த துக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவரது தாய் ரேகா (40) மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரேகா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
- தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க ராஜேஷ்-ன் தாய் முன்வந்தார்.
டெல்லியில் சிறுநீரக கோளாறால் அவதியுற்ற 59 வயது மகனுக்கு 80 வயதான தாய் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க அவரது தாய் முன்வந்தார்.
மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது தாயாரின் சிறுநீரகம் அவருக்குப் பொருத்தமானது என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, இருவருக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- திருக்குறுங்குடி அருகே உள்ள மேலகட்டளையை சேர்ந்தவர் ராஜம்மாள்.கூலி வேலை செய்து வருகிறார்.
- இதையடுத்து ராஜம்மாளையும் செல்வின் தாக்கினார். இதில் காயமடைந்த ராஜம்மாள் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள மேலகட்டளையை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது65). இவரது கணவர் சுந்தர்ராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். ராஜம்மாள் கூலி வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவில் ராஜம்மாளின் மகன் ஜான் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவிற்காக மேலகட்டளையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் அலங்காரப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் செல்வின், ஜானை பார்த்து ஆலயத்தை அலங்காரப்படுத்த நீங்கள் யார்? எனக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வின், ஜானை தாக்கினார். இதைப்பார்த்த ராஜம்மாள் தட்டிக் கேட்டார். இதையடுத்து ராஜம்மாளையும் செல்வின் தாக்கினார். இதில் காயமடைந்த ராஜம்மாள் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தாய், மகனை தாக்கிய செல்வினை தேடி வருகின்றனர்.






