என் மலர்tooltip icon

    இந்தியா

    காலம் கலிகாலம் ஆகிவிட்டது... மதுகுடிக்க குழந்தையை விற்ற கல்நெஞ்ச தாய்
    X

    காலம் கலிகாலம் ஆகிவிட்டது... மதுகுடிக்க குழந்தையை விற்ற கல்நெஞ்ச தாய்

    • லெட்சுமிக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
    • லெட்சுமியின் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத், எல்லம்மா குட்டா பகுதியைச் சேர்ந்தவர் பி.ஸ்ரீனிவாஸ், இவரது மனைவி லெட்சுமி. தம்பதிக்கு 2 மாத ஆண் குழந்தை உள்ளது.

    லெட்சுமிக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தினமும் மது குடிக்க பணம் இல்லை. இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு திருமணத் தரகு நிறுவனத்துடன் தொடர்புடைய ரமாதேவி மற்றும் மஞ்சுளா ஆகியோர் குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு கேட்டனர்.

    பணம் வந்தால் மது குடிக்கலாம் என்ற ஆசையில் லெட்சுமி தனது கணவருக்கு தெரியாமல் குழந்தையுடன் தலைமறைவானார்.

    2 பெண்கள் உதவியுடன் புனேவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான விஷால் என்பவருக்கு ரூ. 2.4 லட்சத்திற்கு குழந்தையை விற்றனர்.

    லெட்சுமியின் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். லட்சுமி, மஞ்சுளா, ரமாதேவி மற்றும் விஷால் ஆகியோர் கைது செய்து குழந்தையை மீட்டனர்.

    மதுவுக்காக குழந்தையை விற்பனை செய்யும் அளவிற்கு காலம் கலிகாலம் ஆகிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×