என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஏழைங்கன்னா இந்த வண்டி வாங்கி ஓட்ட கூடாதுனு ரூல்ஸ் இருக்கா? - வைரல் இளைஞனின் தாய்
- இந்த வீடியோவில் KTM பைக்கை அந்த இளைஞர் வாங்குகிறார்.
- அவருடன் இருந்த அம்மாவின் கழுத்திலும் நகைகள் இல்லாமல் இருந்தது இணையத்தில் பேசுபொருளானது.
புதிதாக பைக் வாங்கி அதனை ரீல்ஸ் விடியோவாக பதிவிட்ட அரியலூர் இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த வீடியோவில் KTM பைக்கை அந்த இளைஞர் வாங்குகிறார். அவருடன் அவரின் அம்மா, அப்பா தோற்றத்தில் 2 பேர் நிற்கின்றனர். குறிப்பாக அவருடன் இருந்த அம்மாவின் காதிலும் கழுத்திலும் நகைகள் இல்லாமல் இருந்தது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.
அம்மாவின் கழுத்தில் ஒரு நகை கூட இல்லாமல் இருக்கும் நிலையில், பையனுக்கு பைக் கேட்கிறதா? என்று பலரும் இணையத்தில் விமர்சனம் முன்வைத்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞர் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் என்னுடன் இருந்தவர் என் அத்தை என்றும் நான் சேமித்த பணம் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் கொடுத்த பணத்தில் தான் பைக் வாங்கினேன். எங்கள் பணத்தில் நாங்கள் பைக் வாங்கியதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய இளைஞரின் தாயார், "பையன் ஆசைப்பட்டான் வண்டி வாங்கி கொடுத்தேன். அதுல என்ன பிரச்சினை.நான் சம்பாரிக்கிறேன். அவன் சம்பாரிக்கிறான்.`பொறுமையா போ' அப்படினு அட்வைஸ் பண்ணுங்க. வேண்டாம்னு சொல்லல... அத விட்டுட்டு தேவையில்லாம கமெண்ட் பண்ணாதீங்க. ஏழைங்கன்னா இந்த வண்டி வாங்கி ஓட்ட கூடாதுனு ரூல்ஸ் இருக்கா?'' ஏன்னு தெரிவித்தார்.






