என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞன்"

    • இந்த வீடியோவில் KTM பைக்கை அந்த இளைஞர் வாங்குகிறார்.
    • அவருடன் இருந்த அம்மாவின் கழுத்திலும் நகைகள் இல்லாமல் இருந்தது இணையத்தில் பேசுபொருளானது.

    புதிதாக பைக் வாங்கி அதனை ரீல்ஸ் விடியோவாக பதிவிட்ட அரியலூர் இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்த வீடியோவில் KTM பைக்கை அந்த இளைஞர் வாங்குகிறார். அவருடன் அவரின் அம்மா, அப்பா தோற்றத்தில் 2 பேர் நிற்கின்றனர். குறிப்பாக அவருடன் இருந்த அம்மாவின் காதிலும் கழுத்திலும் நகைகள் இல்லாமல் இருந்தது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.

    அம்மாவின் கழுத்தில் ஒரு நகை கூட இல்லாமல் இருக்கும் நிலையில், பையனுக்கு பைக் கேட்கிறதா? என்று பலரும் இணையத்தில் விமர்சனம் முன்வைத்தனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞர் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் என்னுடன் இருந்தவர் என் அத்தை என்றும் நான் சேமித்த பணம் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் கொடுத்த பணத்தில் தான் பைக் வாங்கினேன். எங்கள் பணத்தில் நாங்கள் பைக் வாங்கியதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய இளைஞரின் தாயார், "பையன் ஆசைப்பட்டான் வண்டி வாங்கி கொடுத்தேன். அதுல என்ன பிரச்சினை.நான் சம்பாரிக்கிறேன். அவன் சம்பாரிக்கிறான்.`பொறுமையா போ' அப்படினு அட்வைஸ் பண்ணுங்க. வேண்டாம்னு சொல்லல... அத விட்டுட்டு தேவையில்லாம கமெண்ட் பண்ணாதீங்க. ஏழைங்கன்னா இந்த வண்டி வாங்கி ஓட்ட கூடாதுனு ரூல்ஸ் இருக்கா?'' ஏன்னு தெரிவித்தார்.

    • உத்தரப் பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த டால்பின் நீச்சல் குளத்தில் ஏற்கனவே ஒரு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் உள்ள டால்பின் நீச்சல் குளம் ஒன்றில் நேற்று (மே 20) ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது இளைஞன் ஒருவன் சாகசம் செய்யும் நோக்கில் நீச்சல் குளத்துக்குள் குதித்துள்ளார். இதனால் எதிர்பாராத விதமாகச் சாகசம் செய்யக் குதித்த இளைஞனின் முழங்கால் நீச்சல் குளத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த மற்றொரு இளைஞனின் முகத்தில் தாக்கவே மயக்கமடைந்த இளைஞன் நிலைதடுமாறி நீருக்குள் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளார்.

    சம்பவ நடந்த இடத்தில் அருகில் பலர் இருந்த போதும் இளைஞரைக் காப்பாற்ற முடியவில்லை. நீச்சல் குள லைப் கார்டும் ( உயிர்காப்பாளரும்) மிகவும் தாமதமாக அங்கு வந்து அலட்சியமாகச் செயல்பட்டுள்ளார். இதனால் அவரின் அலட்சியத்தையும் நீச்சல் குளத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் குறித்து அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

    இந்த டால்பின் நீச்சல் குளத்தில் ஏற்கனவே ஒரு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் செய்யப்படாமல் தொடர்ந்து நீச்சல் குளம் இயங்கி வந்ததே மற்றொரு உயிரிழப்புக்குக் காரணம் என்று கண்டனங்கள் எழுந்துள்ளது.

     

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நீச்சல் குளத்துக்கு போலீசார் சீல் வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் குளத்தை நிரந்தரமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான பரபரப்பான வீடியோ வெளியாகி இதுபோன்ற பல நீச்சல் குளங்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.  

    • தன்னிடம் அவர் அத்துமீறுவதை அறிந்த சிறுமி கத்திக் கூச்சல் போட்டுள்ளார்
    • அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் குட்டு வெளிப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹரோதி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கேட்போருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்த கொலை சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த கிராமத்தில் 8 வயது சிறுமி தனியாக இருக்கும்போது பாலியல் வன்புணர்வு செய்யும் நோக்கத்தில் குடிபோதையில் இருந்த உறவுக்கார இளைஞர் அருகே நெருங்கியுள்ளார்.

    தன்னிடம் அவர் அத்துமீறுவதை அறிந்த சிறுமி கத்திக் கூச்சல் போட்டுள்ளார். இதனால் மாட்டிகொள்வோமோ என்ற பயத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து கரும்புக் காட்டில் உடலை மறைத்து வைத்துள்ளார். சிறுமி திடீரென காணாமல் போனதால் அனைவரும் தேடி வந்த நிலையில் கரும்புக்காட்டில் இலைகளால் மறைக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக குழந்ததையின் தந்தை அதே கிராமத்தில் வசித்து வரும் உறவுக்கார இளைஞன் மீது சந்தேகம் தெரிவித்து போலீசிடம் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் குட்டு வெளிப்பட்டுள்ளது. எனவே அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

    ×