என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "victim"
- லாரியில் பயணம் செய்தவர்கள் முந்திரிப் பருப்பு மூட்டைகளுக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடினர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் பொரம்பலம் என்ற இடத்தில் இருந்து முந்திரி பருப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
லாரியில் டிரைவர் உட்பட 10 பேர் இருந்தனர். 2 மாவட்டங்களை இணைக்கும் சிலகவரி பகலு என்ற இடத்தில் லாரி சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.
லாரியில் பயணம் செய்தவர்கள் முந்திரிப் பருப்பு மூட்டைகளுக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடினர்.
விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் லாரிக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்து ஏற்படுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
லாரிக்கு அடியில் சிக்கிய 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியை ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ஒன்றுக்கு வரும்படி அழைத்த அந்த பி.டி. ஆசிரியர் தனது வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
- சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ரூ.30,000 ஆயிரத்தை கொடுத்து போலீசுக்கு போக வேண்டாம் என்று அந்த பி.டி. ஆசிரியர் எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதும் கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பதற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் வேலையிலும் பாலியல் பலாத்கார கொடூரங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் பள்ளியில் பி.டி. ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 20 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த சிறுமி இன்று உயிரிழந்தார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம், சிறுமியை ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ஒன்றுக்கு வரும்படி அழைத்த அந்த பி.டி. ஆசிரியர் தனது வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து மாணவியின் உடல்நிலை பாதிக்கபட்டதைத் தொடர்ந்து சிறுமியை அத்தை ஊருக்கு அனுப்பி பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். தனக்கு நடந்ததைச் சிறுமி அத்தையிடம் கூறவே, பெற்றோர்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது. ஆனால் ஊரார் முன் அவமானப்படக் கூடுமோ என்று பயந்து அவர்கள் போலீசில் புகார் அளிக்கத் தயங்கியுள்ளனர்.
இதற்கிடையில் சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ரூ.30,000 ஆயிரத்தை கொடுத்து போலீசுக்கு போக வேண்டாம் என்று அந்த பி.டி. ஆசிரியர் எச்சரித்துள்ளார். கடந்த மாதங்களில் சிறுமியின் மிகவும் மோசமாகிக்கொண்டே வந்த நிலையில் ஜூலை 10 ஆம் தேதி இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையறிந்த அந்த பி.டி. ஆசிரியர் தப்பியோடிய நிலையில் அவரை இன்னும் போலீசார் தேடி வருகிறனர். இந்த நிலையில்தான் சிறுமியின் உடல்நிலை கடந்த 20 நாட்களாக மிகவும் மோசமாகி சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.
- படுகாயமடைந்த வினீத் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் அட்டிங்கல் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அம்பிகா. இவரது மகன் வினீத் (வயது34). சி.பி.எம். உள்ளூர் கமிட்டி உறுப்பினராக இருக்கும் இவர், எடகோடு கூட்டுறவு சேவை சங்கத்தில் பணியாற்றி வந்தார். வினித் இன்று அதிகாலை தனது நண்பர் அக்ஷய் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பள்ளிபுரம் பகுதியில் வந்த போது, அவர்களது மோட்டார் சைக்கிள் மீது வர்க்கலாவில் இருந்து வேகமாக வந்த கார் மோதியது. இதில் வினீத் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த வினீத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் அக்ஷய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மிசிசிப்பி மாகாணத்தில் இண்டியாநோலா தேவாலய தெருவில் உள்ள நைட் கிளப்பில் இந்த துப்பாக்கிச்சூடு அரங்கேறியுள்ளது.
- துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை மிசிசிப்பி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள நைட் கிளப் ஒன்றில் மர்ம நண்பர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 16 பேர் குண்டடிபட்டுள்ளனர். சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சமபாவங்கள் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது.
மிசிசிப்பி மாகாணத்தில் இண்டியாநோலா தேவாலய தெருவில் உள்ள நைட் கிளப்பில் நேற்று நள்ளிரவுக்கு மேல் இந்த துப்பாக்கிச்சூடு அரங்கேறியுள்ளது. கிளப்பின் வாசலில் பலர் நின்றிருந்தபோது அவர்கள் மீது நடந்த இந்த துப்பாக்கிச்சூத்தில் 19 வயது இளைஞன் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டடி பட்ட 16 பெரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை மிசிசிப்பி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பது சகஜமாக உள்ள நிலையில் மளிகைக் கடைகளில் ஏடிஎமில் பணம் எடுப்பது போன்று குண்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற அளவுக்கு வந்துள்ளது. அதை அந்நாட்டு மக்கள் வரவேற்றும் உள்ளனர். எனவே அங்கு வன்முறை சகஜமாகிவருவதாக நெட்டிசன்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
- கடந்த 4 நாட்களில் காசாவில் தாக்கப்பட்ட 4வது பள்ளி இதுவாகும்.
- 'நாங்கள் பள்ளியின் வாசலில் அமர்ந்திருக்கும்போது, ராக்கெட்டுகள் எங்களை நோக்கி பாய்ந்தன'
பாலஸ்தீனத்தில் காசா, ரஃபா நகரங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் நேற்று [ஜூலை 9] காசா நகரில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசாவின் அப்சான் பகுதியில் உள்ள அல்- அவ்டா பள்ளி மீது குறிவைத்து இஸ்ரேல் ராணவம் இந்த வான் வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள கான் யூனிஸ் நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறனறனர். டாக்குதலில்போது சுமார் 2000 பேர் பள்ளியில் இருந்துள்ளனர்
கடந்த 4 நாட்களில் காசாவில் தாக்கப்பட்ட 4வது பள்ளி இதுவாகும். இந்த தாக்குதலை மோசமான படுகொலை என்று தெரிவித்துள்ள பாலஸ்தீன ஊடகம், உயிரிழந்த 29 பேரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிவித்துள்ளது. 'நாங்கள் பள்ளியின் வாசலில் அமர்ந்திருக்கும்போது, ராக்கெட்டுகள் எங்களை நோக்கி பாய்ந்தன' என்று தாக்குதலில் உயிர்பிழைத்த முகமது சுக்கார் என்பர் தெரிவித்துள்ளார்.
அல்- அவ்டா பள்ளிக்கு அருகில் ஹமாஸ் உறுப்பினர்கள் பதுங்கியிருந்த்ததாகவும் அதனாலேயே தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மத்திய காசாவின் நஸ்ரேத்தில் அமெரிக்கர்களால் நடத்தப்பட்ட அல்- ஜாவ்னி பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
- அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வெளிப்படையாகவே இந்த வித்தியாசத்தை அன்றாடம் நம்மால பார்க்கவும் உணரவும் முடிகிறது. அந்த வகையில் சாலைகளில் பணக்காரர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் சொகுசு கார்கள் இடித்து சாமானிய மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.
தற்போது மும்பையில் முக்கிய புள்ளி ஒருவரின் மகன் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் 24 வயதுடைய அந்த இளைஞர் மிஹிர் ஷாம் என்பதும் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது மிஹிர் தப்பித்த நிலையில் அவரின் தந்தை ராஜேஷ் ஷாவைவும் குடும்ப டிரைவரையும் போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் மிஹிர் ஷாமை முக்கிய குற்றவாளியாக குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது தம்பதி சென்ற இருசக்கரவாகனத்தின்மீது மிஹிர் ஷாம் ஓட்டிவந்த பிஎம்டபில்யூ சொகுசு கார் பின்னால் இருந்து மோதியதில் தூக்கிவீசப்பட்டு கார் பானட்டில் சிக்கி பெண் 100 மீட்டருக்கு இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார்.
பெண்ணின் கணவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது விபத்து குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், 'கார் மோதியதில் நான் ஸ்கூட்டரில் இருந்து இடது புறமாக விழுந்துவிட்டேன். எனது மனைவி காரின் முன்புறம் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. நான் இப்போது என்ன செய்வேன். இவர்களெல்லாம் [விபத்து ஏற்படுத்திய இளைஞர் மற்றும் அவரது தந்தை] பெரிய ஆட்கள். அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து துரதிஷ்டவசமானது, சட்டம் தன் கடமையைச் செய்யும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தப்பியோடிய மிஹிரை தேடும் பணியில் போலீஸ் இறங்கியுள்ளது.
- தன்னிடம் அவர் அத்துமீறுவதை அறிந்த சிறுமி கத்திக் கூச்சல் போட்டுள்ளார்
- அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் குட்டு வெளிப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹரோதி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கேட்போருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்த கொலை சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த கிராமத்தில் 8 வயது சிறுமி தனியாக இருக்கும்போது பாலியல் வன்புணர்வு செய்யும் நோக்கத்தில் குடிபோதையில் இருந்த உறவுக்கார இளைஞர் அருகே நெருங்கியுள்ளார்.
தன்னிடம் அவர் அத்துமீறுவதை அறிந்த சிறுமி கத்திக் கூச்சல் போட்டுள்ளார். இதனால் மாட்டிகொள்வோமோ என்ற பயத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து கரும்புக் காட்டில் உடலை மறைத்து வைத்துள்ளார். சிறுமி திடீரென காணாமல் போனதால் அனைவரும் தேடி வந்த நிலையில் கரும்புக்காட்டில் இலைகளால் மறைக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குழந்ததையின் தந்தை அதே கிராமத்தில் வசித்து வரும் உறவுக்கார இளைஞன் மீது சந்தேகம் தெரிவித்து போலீசிடம் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் குட்டு வெளிப்பட்டுள்ளது. எனவே அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாகெஸ்தான் பிராந்தியத்தில் இந்த வெறிச்செயல்கள் அரேங்கேற்றியுள்ளது.
- இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயகராவதிகளில் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ரஷ்யாவில் வார இறுதி நாளான [ஞாயிற்றுக்கிழமை] நேற்று [ஜூன் 23] யூத வழிபாட்டுத் தளங்கள் மீதும் போலீஸ் நிலையம் மீதும் துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் 1 மதகுரு, 14 போலீசார் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாகெஸ்தான் பிராந்தியத்தில் இந்த வெறிச்செயல்கள் அரேங்கேற்றியுள்ளது.
நேற்று அப்பகுதியில் உள்ள சர்ச்களுக்குள்ளும் Synagogue எனப்படும் யூத வழிபாட்டுத் தளங்களுக்குள்ளும் திடீரென துப்பாக்கிகளுடன் நுழைந்த அந்த கும்பல் வழிபாட்டுக்காக கூடியிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர்.
தாக்குதலினால் மகாச்காலா பகுதியில் உள்ள சர்ச் உட்பட இரண்டு சர்ச்கள் தீப்பற்றி எறிந்தன. சம்பவங்களின்போது அங்கு கூடியிருந்த மக்கள் உயிர்பிழைத்த நிலையில் மதகுரு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் தப்பிச் செல்லும்போது போலீஸ் போஸ்ட் மீதும் அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இந்த மொத்த தாக்குதல்களிலும் இதுவரை 14 போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் உடனடியாக நடந்த்து இல்லை என்றும் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதுவரை இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயகராவதிகளில் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் தப்பியோடியவர்களை தேடும் பனி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்துக்கு முன்னாள் ரஸ்ய தலைநகர் மாஸ்க்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி ஹாலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகலால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 133 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த வெறிச்செயல் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
- ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிக்கொண்டு கடல்வழியாக பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் படகு மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டின் ஏடன் பகுதிக்கருகே நேற்று வந்துகொண்டிருந்தபோது கடல் சீற்றத்தால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் 100 பேர் கடலில் தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பனி தொடங்கியுள்ளது. அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு அருகில் இருந்த உள்ளூவர் மீனவர்கள் உடனே விரைந்து கடலில் தத்தளித்த 78 அகதிகளை மீட்டனர். இன்னும் சுமார் 100 பேர் கடலில் தொலைந்தனர் என்று அம்மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து ஐ.நா வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டையும் நாட்டையும் இழந்து நிர்கதியில் வேற்று தேசம் நோக்கி பயணிக்கும் அகதிகள் சாரை சாரையாக கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.
- உத்தரப் பிரதேசத்தில் மகன்களின் கண் முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அர்ஷத் துப்பகையால் சுடப்பட்ட காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மகன்களின் கண் முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் துணி வியாபாரம் செய்து வருபவர் அர்ஷத் (32). இவர் தனது குடும்பத்துடன் நீச்சல் குளத்துக்கு குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு ஏற்பட்ட சிறிய பிரச்சனை கைகலப்பாக மாறி துப்பாக்கிச்சூடு வரை சென்றுள்ளது. பேசிக்கொண்டிருந்த போதே அர்ஷத் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட்டத்தில் சம்பவ இடத்திலேயே அர்ஷத் உயிரிழந்தார்.
அப்போது அவரது மகன்கள் உடன் இருந்தும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது .சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கு நடத்த பிரச்சனைக்கு என்ன காரணம் என்று தெரியவராத நிலையில் நீச்சல் குளத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அர்ஷத் துப்பகையால் சுடப்பட்ட காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 2 வீடியோ கேமிங் சென்டர்கள் தீப்பிடித்து எரித்ததில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- நகரில் இதுபோன்று இயங்கும் 34 கேமிங் செகன்டர் பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல் இயங்கி வந்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 2 வீடியோ கேமிங் சென்டர்கள் தீப்பிடித்து எரித்ததில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த கேமிங் சென்டர்கள் எந்தவித பாதுகாப்பு சான்றிதழும் பெறாமல் 2 வ வருடங்களாக இயங்கிவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நகரில் இதுபோன்று இயங்கும் 34 கேமிங் செகன்டர் பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல் இயங்கி வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் குஜராத் உயர்நீதிமன்றம், மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்று (மே 27) நடந்த விசாரணையின்போது, கேமிங் சென்டரில் சில காலங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தப்பட்டதாகவும் அங்கு சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்திய புகைப்படங்களை நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்தது.
புகைப்படங்களை வாங்கி பார்த்த நீதிபதி, "யார் இந்த அதிகாரிகள்? அவர்கள் அங்கு விளையாட சென்றார்களா? என கேள்வியெழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், விபத்துக்குள்ளான இந்த கேமிங் சென்டர்கள் எந்த அனுமதியும் இன்றி 2 வருடமாக இயங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மாநில அரசும் இவ்வளவு காலமும் தூங்கிக்கொண்டிருந்ததா என கேள்வியெழுப்பிய அவர், இனியும் இந்த அரசை நம்பப்போவதில்லை என்று காட்டமாக தெரிவித்தார். அரசு இயந்திரங்கள் வேலை செய்யாதது காரணமாகவே மக்கள் இறக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
- அமெரிக்காவின் பிராங்க்ஸ் பல்கலைக்கழகத்தின் அருகில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயமடைந்தனர்.
- கறுப்பு உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் மொப்பட்டில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
அமெரிக்காவின் பிராங்க்ஸ் பல்கலைக்கழகத்தின் அருகில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயமடைந்தனர். பார்மொடன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள டேவிட்சன் அவென்யூவில் இன்று (மே 24) காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
36 வயதுடைய ஆணும் 44 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் மார்பில் சுடப்பட்டுள்ளனர். மற்றொருவர் கையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் அவர் உடனடியாக செயின்ட் பர்னபாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கறுப்பு உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் மொப்பட்டில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். குற்றவாளிகள் இருவரை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளார். பல்கலைக்கழகத்தின் அருகில் நடத்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்