என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hit"

    • ஸ்பாடிஃபை இந்த ஆண்டின் பாடல்களை உலகளாவிய ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்தன.
    • அனிருத் , சந்தோஷ் நாராயணன், சாய் அப்யங்கர் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

    2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு திருப்புமுனையான ஆண்டாக அமைந்தது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு திரையரங்குகள் முழு வீச்சில் திரும்பிய நிலையில், இசைத் துறை புதிய உச்சங்களைத் தொட்டது.

    ஸ்பாடிஃபை போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள், இந்த ஆண்டின் பாடல்களை உலகளாவிய ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்தன. ஜனவரி 1 முதல் டிசம்பர் 30 வரை வெளியான பாடல்களை அடிப்படையாகக் கொண்டு, ஸ்பாடிஃபை வெளியிட்ட டாப் 10 தமிழ் பாடல்கள் பட்டியல், தமிழ் இசையின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது.

    இந்தப் பட்டியலில் அனிருத் , சந்தோஷ் நாராயணன், சாய் அப்யங்கர், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

    இந்தக் தொகுப்பில் , இந்த டாப் 10 பாடல்களை ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம்


    1. ஊரும் ப்ளட் (Oorum Blood) – டியூட்

    இசையமைப்பாளர்: சாய் அபயங்கர்

    பாடகர்கள்: சாய் அபயங்கர் மற்றும் அபர்ணா நாராயணன்

    ஸ்பாடிஃபை டாப் 10-இன் முதல் இடத்தை சாய் அப்யங்கரின் இசையில் உருவான ஊரும் ப்ளட் பிடித்துள்ளது.

    இப்பட்டியலில் 8,96,43,074 ஸ்ட்ரீம்களுடன் இது உச்சத்தில் நிற்கிறது. ஆகஸ்ட் 28 அன்று வெளியான இந்தப் பாடல் ஒரு உற்சாகமான ஹிப்-ஹாப் டிராக் ஆகும். இந்த பாடல் இளைஞர்களின் வாழ்க்கையை காதலை பிரதிபலித்தது. சாய் அபயங்கரின் கூல் பீட்ஸ் மற்றும் பிரதீப் மமிதாவின் டான்ஸ் இந்த பாடலை ஹிட் பாடலாக மாற்றியது. "ஒரு அலை அவ கலை அவ..." வரிகள், காதலர்களின் ரிங்டோனாக மாறியது

     2. மோனிகா (Monica) – கூலி

    இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்

    பாடகர்கள்: சுப்லாஷினி மற்றும் அனிருத்

    இப்பட்டியலில் 80,679,580 ஸ்ட்ரீம்களுடன் அனிருத்தின் "மோனிகா" பாடல் இரண்டாவது இடம்பிடித்துள்ளது. இந்தப் பாடல், ரஜினிகாந்தின் கூலி படத்தில் இடம்பெற்றுள்ளது. அனிருத்தின் டைனமிக் பீட்ஸ், பூஜா ஹெக்டேவின் நடனம் இளைஞர்களை ஈர்த்தது. "மோனிகா... ஓ மோனிகா..." என்ற வரிகள், ரீல்ஸ் மற்றும் டிக்டாக்கில் வைரலானவை. இந்தப் பாடல், 2025-இல் தமிழ் சினிமாவின் மாஸ் இசையின் உச்சமாகக் கருதப்படுகிறது. படத்தின் வெற்றிக்கு இது பெரும் பங்களிப்பு செய்தது.


    3. கனிமா (Kanimma) – ரெட்ரோ

    இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்

    பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்

    65,618,166 ஸ்ட்ரீம்களுடன் சந்தோஷ் நாராயணனின் "கனிமா" பாடல் 3 ஆம் இடம் பிடித்துள்ளது. இது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற திருமண வரவேற்பு பாடலாகும். சூர்யா - பூஜா ஹெக்டே நடனம் மற்றும் சந்தோஷ் நாராயணனின் குரல் மற்றும் நடனத்தால் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. இந்தப் பாடல், தமிழ் சினிமாவின் உணர்ச்சி இசையின் சிறந்த உதாரணம் ஆகும்.


    4. வழித்துணையே (Vazhithunaiye) – டிராகன்

    இசையமைப்பாளர்: லியோன் ஜேம்ஸ்

    பாடகர்கள்: சித் ஸ்ரீராம், சஞ்சனா கல்மஞ்சே

    லியோன் ஜேம்ஸின் இசையில் 62,161,580 ஸ்ட்ரீம்கள் பெற்ற 'வழித்துணையே' பாடல் இந்த பட்டியலில் 4 ஆம் இடம் பிடித்துள்ளது. டிராகன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் காதலர்களின் விருப்ப பாடலாக மாறியது. குறிப்பாக இந்த வீடியோ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பாடலால் தான் கயாடு லோகர் இனைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

    5. சித்திர புத்திரி (Sithira Puthiri)

    61,073,988 ஸ்ட்ரீம்களுடன் சாய் அப்யங்கரின் இண்டிபெண்டெண்ட் ஆல்பமாக வெளியான இப்பாடல் அதிரி புதிரி ஹிட் அடித்தது. ரசிகர்கள் இப்பாடலின் யூனிக் சவுண்டை பாராட்டினர், ஸ்பாடிஃபை பிளேலிஸ்ட்களில் இப்பாடல் அடிக்கடி இடம்பெற்றது.

    6. பவர்ஹவுஸ் (Powerhouse) – கூலி

    இசையமைப்பாளர்: அனிருத்

    பாடகர்கள்: அனிருத் , அறிவு

    அனிருத் ரவிச்சந்தரின் பவர்ஹவுஸ் பாடல் 60,811,993 ஸ்ட்ரீம்களுடன் 6 ஆம் இடம் பிடித்துள்ளது.

    கூலி படத்தின் மாஸ் ஆன்தெம் ஆக வெளியான இப்பாடல் ரஜினி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


    7. கண்ணாடி பூவே (Kannadi Poove) – ரெட்ரோ

    இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்

    பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்

    கண்ணாடி பூவே பாடல் 7,457,598 ஸ்ட்ரீம்களுடன் 7 ஆம் இடத்தை பிடித்துள்ளது. இது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற காதல் சோக பாடலாகும். சந்தோஷ் நாராயணின் இசை மற்றும் குரல் இந்த பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்தது. காதல் சோகத்தை நினைப்பவர்களின் ரிங் டோனாக இந்தாண்டு இந்த பாடல் மாறியது.

    8. பதிக்கிச்சு (Pathikichu) – விடாமுயர்ச்சி

    இசையமைப்பாளர்: அனிருத் 

    பாடகர்கள்: அனிருத்

    பதிக்கிச்சு பாடல் 45,027,321 ஸ்ட்ரீம்களுடன் 8 ஆம் இடத்தை பிடித்துள்ளது. விடாமுயற்சி படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    9. பொட்டல முட்டாயே (pottala muttaye) படம் - தலைவன் தலைவி

    இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன், சுப்லாஷினி

    பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்

    பொட்டல முட்டாயே பாடல் 37,609,275 ஸ்ட்ரீம்களுடன் 9 ஆம் இடத்தை பிடித்துள்ளது. தலைவன் தலைவி படத்தில் இடம்பெற்ற இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. சந்தோஷ் நாராயணன், சுப்லாஷினி குரலில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடனத்தால் இந்த பாடல் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து இந்தாண்டின் பெரிய ஹிட் பாடல் வரிசையில் சேர்ந்தது.


    10. முத்த மழை ரெப்ரைஸ் (Muththa Mazhai Reprise) – தக் லைஃப்

    இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்

    பாடகர்கள்: சின்மயி

    சின்மயி குரலில் உருவான முத்த மழை பாடல் 34,686,401 ஸ்ட்ரீம்களுடன் 10 ஆம் இடத்தை பிடித்துள்ளது. ஏ.ஆர். ரகுமானின் மேஜிக்கல் இசை மற்றும் சின்மயியின் இனிமையான குரலுடன் உருவான இந்த ரொமான்டிக் பாடல் நம்மை மெய்மறக்க வைத்தது. குறிப்பாக சின்மயியின் குரலால் இந்த பாடலுக்கு உயிரோட்டம் ஏற்பட்டதாக ரசிகர்கள் இந்த பாடலை வியந்தோதி ரசித்தனர்.

    முடிவுரை:

    2025 ஆம் ஆண்டு தமிழ் இசை, ஸ்ட்ரீமிங் யுகத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டது. அனிருத் (3 பாடல்கள்), சந்தோஷ் (3), சாய் (2) ஆதிக்கம், புதிய ட்ரெண்ட்களை உருவாக்கின. இந்தப் பாடல்கள் தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை பிரகாசமாக்குகின்றன.

    • ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.
    • இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.

    பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படத்தின் முதல் பாடலான ப்ரேம வெல்லுவா பாடலை படக்குழு வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் நடிகர் கார்த்தி கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. டிரெய்லரில்  ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளது.

    படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும் இப்படம் குழந்தைகளுக்கும் இதய பலவீனமானவர்களுக்கு ஏற்ற படம் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் படத்தின் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

    • சேலம் அருகே ஆனங்கூர் ரெயில் நிலையத்துக்கும் காவேரி ஆர்.எஸ். க்கும் இடையே ரெயிலில் அடி பட்டு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த கிடந்தார்.
    • உடல் முழுவதும் சிதைந்த நிலையில் உள்ளதால் அடை யாளம் தெரியவில்லை.

    சேலம்:

    சேலம் அருகே ஆனங்கூர் ரெயில் நிலையத்துக்கும் காவேரி ஆர்.எஸ். க்கும் இடையே ரெயிலில் அடி பட்டு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த கிடந்தார். உடல் முழுவதும் சிதைந்த நிலையில் உள்ளதால் அடை யாளம் தெரியவில்லை.

    மாநிறத்தில் உள்ள அவர் கருப்பு கலர் லுங்கி, காப்பி கலரில் முழுக்கை சட்டை அணிந்து உள்ளார். வலது பக்க இடுப்பில் கருப்பு மச்சம், வலது மார்பு பகுதி யின் கீழே மச்சம் உள்ளன.

    அவர் இறந்து கிடந்த இடம் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும். எனவே இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் அருகே லோகூர்- டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்க ளுக்கிடையே உள்ள தண்டவாளத்தை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவத்தன்று கடக்க முயன்றார்.
    • அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.

    சேலம் அருகே லோகூர்- டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்க ளுக்கிடையே உள்ள தண்டவாளத்தை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவத்தன்று கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெயில்வே நிலைய அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சேலம் ஜங்சன் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் நீல நிற டிசர்ட், கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். ஆனால் அவரது பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார்.
    • அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவ ரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேசன் இன்று அதிகாலை 2 மணியளவில் பரிதாபமாக இறந்தார். சத்யமூர்த்தி லேசான காயத்துடன் தப்பினார். இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் முதுகில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து பொதுமக்கள் குட்ஷெட் நிலைய அதிகாரி பிரகாஷ்குமாரிடம் தெரிவித்தனர். அவர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் முதுகில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் தண்டவாளத்தை கடக்கும் போது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த வாலிபரின் மார்பில் கமலா எனவும் கையில் மணி எனவும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதையடுத்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் சின்னபுதூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவரை நாயை கிண்டல் செய்த விவகாரத்தில் வாலிபரை தாக்கினார்.
    • இது குறித்து சந்தோஷ்குமார் அளித்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் சின்னபுதூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 27).

    இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாயுடன் நடைப்பயிற்சி சென்றார். அப்போது அங்குள்ள டீக்கடையில் அமர்ந்திருந்த 5 பேர் 'இது பெண் நாய்' என கிண்டல் செய்தனர். இதனை சந்தோஷ்குமார் தட்டிக்கேட்டார்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அந்த வாலிபர்கள், சந்தோஷ்குமாரை தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து ஓட்டம் பிடித்த சந்தோஷ்குமார் அந்த பகுதியில் உள்ள ஓட்டலுக்குள் நுழைந்தார்.

    அவரை துரத்தி சென்ற அந்த 5 பேரும் ஓட்டலுக்குள் புகுந்து அங்கிருந்த தோசை கரண்டியால் சந்தோஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்த ெபாதுமக்கள், அவர்களை விலக்கி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து சந்தோஷ்குமார் அளித்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கொழும்புக்கு இன்று புறப்பட்ட விமானம் ஓடுதள விளக்கில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானத்தின் சக்கரம் பலத்த சேதமடைந்தது. #SrilankanAirlines
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியிலிருந்து இலங்கை கொழும்புக்கு 227 பயணிகளுடன் இன்று மாலை ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம் கிளம்பியது. ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் பயங்கரமாக மோதியது.

    இதனை அடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, பின்னர் நிலைமை சீரானதும் திறக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தின் சக்கரம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×