என் மலர்
நீங்கள் தேடியது "mob"
- சேலம் சின்னபுதூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவரை நாயை கிண்டல் செய்த விவகாரத்தில் வாலிபரை தாக்கினார்.
- இது குறித்து சந்தோஷ்குமார் அளித்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சேலம்:
சேலம் சின்னபுதூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 27).
இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாயுடன் நடைப்பயிற்சி சென்றார். அப்போது அங்குள்ள டீக்கடையில் அமர்ந்திருந்த 5 பேர் 'இது பெண் நாய்' என கிண்டல் செய்தனர். இதனை சந்தோஷ்குமார் தட்டிக்கேட்டார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அந்த வாலிபர்கள், சந்தோஷ்குமாரை தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து ஓட்டம் பிடித்த சந்தோஷ்குமார் அந்த பகுதியில் உள்ள ஓட்டலுக்குள் நுழைந்தார்.
அவரை துரத்தி சென்ற அந்த 5 பேரும் ஓட்டலுக்குள் புகுந்து அங்கிருந்த தோசை கரண்டியால் சந்தோஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்த ெபாதுமக்கள், அவர்களை விலக்கி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து சந்தோஷ்குமார் அளித்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
- சேலம் மாநகரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை கடத்தி வந்து விற்பனை செய்தனர்.
- இதையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரையும் நேற்று பெங்களூருவில் வைத்து தனிப்டை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் மாநகரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை கடத்தி வந்து விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து துணை கமிஷனர் லாவண்யா மேற்பார்வையில் அன்னதானப்பட்டி சரக உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்தவர்கள் குறித்த தகவல் அறிந்து தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது.
இதையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்கா ராம்ஜி மகன் கீமா ராம் (வயது 28), தாபா ராம் மகன் ராஜேஷ் குமார் (25), ராஜாராம் மகன் ஜலராம் (38) ஆகிய 3 பேரையும் நேற்று பெங்களூருவில் வைத்து தனிப்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 கார்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் சேலம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பலின் முக்கிய புள்ளியான பெங்களூரை சேர்ந்த ஜாய் இமானுவேல்(28) என்பவரை தேடி வந்தனர். நேற்று அவரையும், அவரது கூட்டாளிகளான கோவை உக்கடத்தை சேர்ந்த முகமது சிஹாப் (22), ஜூல்பிகர் அலி(24), முகமது அனாஸ்(24) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த கும்பல் பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளை திருடி, அதை குளுக்கோசில் கலந்து கோவை கொண்டு வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்றது தெரிய வந்தது. ஒரு ஊசியை ரூ.100-க்கு வாங்கி மாணவர்களிடம் ரூ.300-ல் இருந்து ரூ.1000 வரை விற்றுள்ளனர்.
இவர்கள் யார்-யாருக்கெல்லாம் போதை ஊசிகளை விற்பனை செய்தார்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.