என் மலர்
செய்திகள்

சூனியக்காரி என்ற சந்தேகத்தில் பெண்ணை அடித்துக் கொன்ற கும்பல்
பீகாரில் சூனியக்காரி என்ற சந்தேகத்தில் 65 வயது பெண்ணை பொதுமக்கள் ஒன்றுதிரண்டு அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நவடா:
பீகார் மாநிலம் நவடா மாவட்டம் ஹராலி கிராமத்தைச் சேர்ந்த பாச்சி தேவி (வயது 65) என்ற பெண் தன் வீட்டில் பல்வேறு பூஜைகள் செய்துள்ளார்.
இந்நிலையில், பாச்சிதேவி சூனியம் வைப்பதாகவும் அதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக பாச்சி தேவியிடம் நேற்று இரவு பொதுமக்கள் கும்பலாகச் சென்று பேசியபோது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த கும்பல் பாச்சி தேவியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளது.
இதில் பலத்த காயமடைந்த பாச்சி தேவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிசிச்சை பலனின்றி அவர் இறந்துபோனார். இந்த கொலை குறித்து பக்ரிபார்வா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். #tamilnews
Next Story