என் மலர்
நீங்கள் தேடியது "attacked"
- மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண்ணை, தொழிலாளி தாக்கினார்.
- பணம் தர மறுத்ததால் தாக்கியதாக கூறினார்.
மதுரை
மேலூரை அடுத்த கள்ளம்பட்டியை சேர்ந்த நேவான் மனைவி பழனி (வயது 58). இவர் நேற்று மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு ஒத்தக்கடை வவ்வால் தோட்டத்தை சேர்ந்த முருகன்(45) என்பவர் சாலையோரத்தில் விண்ணப்ப மனுக்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார். பழனி அவரிடம் மனு எழுத கொடுத்தார். அவரிடம் முருகன் ரூ.250 பணம் கேட்டதாக தெரிகிறது.
மூதாட்டி பணம் தர மறுத்தார். ஆத்திரமடைந்த முருகன் மூதாட்டியை தாக்கினார். இதுகுறித்து மூதாட்டி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வியாபாரி முருகனை கைது செய்தார்.
- ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அசோக்
- சோனியா காந்தி நகர் ஆதிகேசவன்
புதுச்சேரி:
வேலை தேடி வந்த வடமாநில வாலிபரை குடிபோதையில் தாக்கிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அசோக் (வயது22). இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலை தேடி புதுவை வந்தார். பின்னர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சோனியா காந்தி நகர் ஆதிகேசவன் தெரு ஒரு குடியிருப்பில் தங்கியிருக்கும் தனது ஊரை சேர்ந்தவர்களின் வீட்டில் இருந்து வந்தார்.
அசோக் தான் தங்கியிருந்த வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது குடிபோதையில் வந்த 4 பேர் கும்பல் அசோக்கிடம் ஏதோ கேட்டனர். ஆனால் அசோக்குக்கு பாஷை புரியவில்லை என்பதால் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அங்கு கிடந்த கருங்கற்களை எடுத்து அசோக்கின் தலையில் சரமாரியாக குத்தினர். இதில் ரத்த காயம் ஏற்பட்டு அசோக் அலறல் சத்தம் போடவே அவரது ஊர்காரர்கள் திரண்டு வந்தனர். இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.
இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம டைந்த அசோக் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முத்திரையர்பாளையம் செந்தில்நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி குணாவதி. கட்டிட தொழிலாளி. இவர் தான் புதிதாக கட்டி வரும் வீட்டில் மணல் கொட்டி நிரப்பியிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவர் தாயார் புஷ்பா அவரது வீட்டு பாத்திரங்களை எடுத்து வந்து குணாவதியின் வீட்டில் வைத்தார். இதையடுத்து குணாவதி தட்டிக்கேட்ட போது புஷ்பாவின் மகன் ராஜாமணி தகாத வார்த்தைகளால் திட்டி குணாவதியை கையால் தாக்கினார். உடனே அங்கிருந்தவர்கள் இதனை தடுக்கவே ராஜாமணி அங்கி ருந்து சென்று விட்டார்.
இதுகுறித்து குணாவதி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வில்லியனூர் அருகே சொத்து தகராறில் தாய்-தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
- இவருக்கு வசந்தி என்ற மனைவியும், கரம்சந்த், ஸ்ரீதர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே சொத்து தகராறில் தாய்-தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர் அருகே உருவையாறு லட்சுமி நரசிம்மர் நகரை சேர்ந்தவர் காந்தி (வயது62). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், கரம்சந்த், ஸ்ரீதர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கரம்சந்த் திருமணம் முடிந்து தனது மனைவி, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் மாடியில் வசித்து வருகிறார். இளையமகன் ஸ்ரீதர் தனது மனைவி, குழந்தைகளுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே கரம்சந்த் தனது பெற்றோரிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் வீட்டின் வாசலில் இருந்த அலங்கார விளக்கை கரம்சந்த் கழற்றிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாய் வசந்தி பார்த்து ஏன் அலங்கார விளக்குகளை கழற்றுகிறாய் என கேட்டார். அப்போது கரம்சந்த் தனது தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனை தட்டிக்கேட்ட அவரது தந்தை காந்தியை முகத்தில் குத்தினார். இதனை தடுக்க முயன்ற தாயையும் அவர் தாக்கினார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த காந்தி மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகியோர் கரிக்கலாம் பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் இதுகுறித்து காந்தி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- அம்மாபேட்டையில் போலீஸ்காரரை தாக்கிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.
- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் நாகராஜ் (35). லாரி டிரைவர்.
இவர் நேற்று மாலை அம்மாபேட்டை-மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் இரு சக்கர வாகன ஷோரூமில் தனது மோட்டார் சைக்கிளுக்கு என்ஜின் ஆயில் இலவசமாக மாற்றி தர வேண்டும் என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான் பொன்னையன் மற்றும் போலீஸ் ஏட்டு முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் நாக ராஜை எச்சரித்தனர்.
மேலும் நாகராஜ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நாகராஜ் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார்.
தொடர்ந்து நாகராஜ் போலீஸ் ஏட்டுவின் சட்டையை பிடித்து தாக்கி பேனாவால் குத்தினார். மேலும் அவரின் கை விரலை கடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் போலீஸ் ஏட்டு முருகன் அக்கம் பக்கம் இருந்தவர்களின் உதவியுடன் நாகராஜை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார்.
இது குறித்து போலீஸ் ஏட்டு அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் வளைகுடா பகுதியில் புஜைரா துறைமுகம் அமைந்துள்ளது. அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான இங்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த சரக்கு கப்பல்கள் வந்து செல்கின்றன. இந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது நேற்று முன்தினம் காலையில் நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்தது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட விதம், தாக்குதலுக்குள்ளான கப்பல்கள் எந்த நாடுகளை சேர்ந்தவை போன்ற கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. அதே சமயம் இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் நாட்டின் 2 சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் கப்பல்கள் சேதம் அடைந்ததாகவும் சவுதி அரேபியா நேற்று தெரிவித்தது.
இதுகுறித்து அந்நாட்டின் எரிசக்தித்துறை மந்திரி காலித் அல் பாலிக் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரத்யேக பொருளாதார மண்டலமான புஜைரா துறைமுகத்தில் சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு எடுத்து செல்லும் வழியில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது” என்றார்.
ஈரானை எச்சரிக்கும் விதமாக அமெரிக்கா போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி இருக்கும் சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துறைமுகத்தில் சவுதி அரேபியா உள்பட அயல்நாடுகளின் சரக்கு கப்பல்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் முகமது தாகிரிடம், புறம்போக்கு நிலம் தொடர்பாக சென்னை துரைப்பாக்கத்தில் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பிரச்சினை முற்றிய நிலையில், கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் முகமது தாகிரை சரமாரியாக தாக்கி உள்ளனர். அவரிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்களையும் பறித்துள்ளனர். இது தொடர்பாக முகமது தாகிர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களை தேடி வருகின்றனர்.
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்பின்னரும் அரகான் ராணுவம் என்ற கிளர்ச்சிக் குழுவானது, ராணுவம் மற்றும் காவல்துறையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. கடந்த வாரம் வியாழக்கிழமை மிராக் யு பகுதியிலும், வெள்ளிக்கிழமை கியாக்டாவ் பகுதியிலும் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு மிராக் யு நகருக்குள் ராணுவ வீரர்கள் வாகனங்களில் சென்றபோது, மீண்டும் தாக்குதல் நடத்தினர். அங்குள்ள வீடுகளுக்குள் பதுங்கியிருந்து கிளர்ச்சியாளர்கள் தாக்கினர். ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 6 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. #MyanmarAttack #RakhineState
ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் வெள்ளாடுகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து கால்நடை மற்றும் சுகாதாரத் துறையினர் அப்பகுதிகளில் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.
ஆம்பூர் அருகே மிட்டாளம், பைரப்பள்ளி, பந்தேரப்பள்ளி, வன்னிய நாதபுரம், ரகுநாதபுரம், மேக்கனாம்பல்லி, ராள்ளக்கொத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசு இலவசமாக வழங்கிய வெள்ளாடுகளையும் வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் இறந்தன.
இந்நிலையில் மிட்டாளம், பைரப்பள்ளி பகுதிகளுக்கு கால்நடைத்துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கால்நடைத்துறை நோய்கள் புலனாய்வு இணை இயக்குனர் டாக்டர் ஸ்ரீஹரி தலைமையில் கால்நடை டாக்டர்கள் ரமேஷ்குமார், பிரவீன்குமார் உள்ளிட்ட குழுவினரும், பொது சுகாதாரத்துறை வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் மாவட்ட பூச்சியியல் நிபுணர் காமராஜ், வட்டார சுகாதார அலுவலர் ரஷீத், சுகாதார ஆய்வாளர் பிரேம் உள்ளிட்ட குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து கால்நடை துறையின் நோய்கள் புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் ஸ்ரீஹரி கூறியதாவது:-
வழக்கத்தை காட்டிலும் அதிக பனிப்பொழிவே வெள்ளாடுகள் இறப்புக்கு காரணம். திறந்த வெளியில் உள்ள பட்டிகளில் வெள்ளாடுகளை அடைக்கக்கூடாது. கூரை மேய்ந்த கொட்டகைகளில் மட்டுமே ஆடுகளை அடைத்து பாதுகாக்க வேண்டும்.
ஆடுகளுக்கு நோய் தாக்குதல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். நோய் தாக்கி வெள்ளாடுகள் இறந்தால் அவற்றை குழி தோண்டி புதைக்க வேண்டும். உணவுக்காக சம்மந்தப்பட்ட வெள்ளாட்டின் இறைச்சியை பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், நோய் தாக்குதலுக்கு ஆளான வெள்ளாட்டு கொட்டகைகளை பார்வையிட்டனர். வெள்ளாடுகளின் சளி, சாணம் போன்றவற்றை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.
சென்னை போரூரை அடுத்த நூம்பல் மூவேந்தர் நகர் பகுதியில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று இரவு 8.30 மணியளவில் தனியார் ஏஜென்சி ஊழியர்களான தேவராஜ் (வயது 35), முரளி(30) ஆகியோர் இந்த ஏ.டி.எம்-மில் பணம் நிரப்ப காரில் வந்தனர்.
மொத்தம் ரூ.14 லட்சம் வைத்து இருந்தனர். அதில் ரூ.4 லட்சத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்து கொண்டு இருந்தனர். ஆனால் அவர்கள், ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை அடைக்காமல், திறந்து இருந்த நிலையிலேயே வைத்து இருந்தனர். அவர்களிடம் இருந்த பெட்டியில் மீதம் ரூ.10 லட்சம் இருந்தது.

ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மர்மநபர், கத்தியால் தேவராஜின் கையில் வெட்டினார். பின்னர் அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு, அங்கு தயாராக நின்ற தனது கூட்டாளியுடன் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜ், முரளி இருவரும் வெளியே ஓடிவந்து கூச்சலிட்டனர். இதுபற்றி மதுரவாயல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் ஜான்சுந்தர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். கொள்ளையன் கத்தியால் வெட்டியதில் காயம் அடைந்த தேவராஜூக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
அதில், தேவராஜ், முரளி இருவரும் நேற்று மதியம் முதல் ரூ.35 லட்சம் பணத்துடன் வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பினர். பின்னர் கடைசியாக ரூ.14 லட்சம் பணத்துடன் இரவு 8.30 மணியளவில்தான் நூம்பல் பகுதியில் உள்ள இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்து பணத்தை நிரப்பினர்.
கொள்ளையர்கள் இவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து வந்து, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் உருவம் மற்றும் அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் எண் பதிவாகி இருந்தது. அதை வைத்து கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொள்ளை சம்பவத்தில் தேவராஜ், முரளி ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
கொள்ளை நடந்த ஏ.டி.எம். மையம் அருகிலேயே போரூர் போலீஸ் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #ATM #MoneyRobbery