search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strap knife"

    • காரில் சென்ற என்ஜினீயரை கும்பல் பட்டா கத்தியால் தாக்கியது.
    • மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). மஸ்கட் நாட்டில் பொறியாளராக உள்ளார்.

    இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். செந்தில்குமார் ஆண்டுக்கு 2 முறை மதுரைக்கு வந்து செல்வது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு இவர் மதுரை வந்திருந்தார். மகனை பள்ளியில் விடுவதற்காக, செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் சர்வேயர் காலனிக்கு வந்தார். அதன் பிறகு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    பொன்விழா நகர், ஜூப்ளி டவுன் அருகே 2 பேர் கும்பல் பட்டாக்கத்திகளுடன் அவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்தவரை உறவினர்கள் மீட்டு, மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமார் கூறுகையில், "எனக்கும் சகோதரர் நவநீதகிருஷ்ணனுக்கும் முன் விரோதம் உள்ளது. அவர் என்னை ஆள் வைத்து தாக்கி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    இதன் அடிப்படையில் நவநீதகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் செந்தில்குமாருடன் தொடர்பு உடைய சிலரிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமாரின் மனைவி சிலரிடம் ரகசியமாக பேசி வருவது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×