என் மலர்
நீங்கள் தேடியது "teenager"
- திருமணம் செய்து வைக்க மறுத்ததால் சரமாரியாக தாக்கினார்
- பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 52 வயது பெண். கூலி வேலை செய்து வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து நான் எனது மகன் மற்றும் 14 வயது பேத்தியுடன் வசித்து வருகிறேன். எனது பேத்தி எங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் எங்கள் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் என்னிடம் வந்து உனது பேத்தியை மிகவும் பிடித்துள்ளது, நான் பெண் கேட்டு வருகிறேன். திருமணம் செய்து வை என மிரட்டல் தொனியில் கூறி விட்டுச் சென்றார். நான் பிரச்சினை எதுவும் செய்யக் கூடாது என அமைதியாக சென்று விட்டேன்.
சம்பவத்தன்று நான் வேலைக்கு புறப்பட்டு சென்றேன். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த வாலிபர் மீண்டும் என்னிடம் வந்து தகராறு செய்தார். அதற்கு நான் எனது பேத்தி பள்ளியில் படித்து கொண்டு இருக்கிறாள். எங்களை தொந்தரவு செய்யாதே என்றேன். ஆத்திரம் அடைந்த அவர் என்னை கன்னத்தில் தாக்கி கீழே தள்ளினார். பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி எனது பேத்தியை திருமணம் செய்து கொடுக்க வில்லை என்றால் என்னை கொன்று விட்டு திருமணம் செய்து கொள்வதாக மிரட்டி அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
எனவே என்னை பெண் என்று கூட பார்க்காமல் நடுரோட்டில் வைத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேத்தியை திருமணம் செய்து வைக்க மறுத்த பாட்டியை தாக்கிய வாலிபர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மதுரை தெப்பக்குளம் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடு சில நாட்களாக பூட்டிக்கிடப்பதாக தெரிவித்தனர்.
மதுரை
மதுரை தெப்பக்குளம் வெங்கடபதி ஐயங்கார் தெருவை சேர்ந்தவர் நாகூர் கனி (வயது 32). இவர் மிட்டாய் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பிரேமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துவிட்டு சென்ற நாகூர் கனி அதன் பின்னர் மீண்டும் குழந்தையை பார்க்க வரவில்லை. பிரேமா ஆஸ்பத்திரியில் இருந்து தாய் வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து கணவர் வராமல் இருந்ததால் பிரேமாவுக்கு சந்தேகம் வந்தது. அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளது. இதையடுத்து அருகில் வசிப்பவர்களிடம் பிரேமா விசாரித்தார். அப்போது கணவரின் வீடு சில நாட்களாக பூட்டிக்கிடப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அதிகமான நிலையில் கணவரின் வீட்டுக்கு சென்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு நாகூர் கனி தூங்கிய நிலையிலேயே இறந்து கிடந்தார்.
இது குறித்து தெப்பக் குளம் போலீசில் பிரேமா புகார் செய்தார். போலீசார் நாகூர் கனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நாகூர் கனி எப்படி இறந்தார்? அவர் சாவுக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தூத்துக்குடிக்கு அழைத்து சென்றது அம்பலம்
- மாயமான மகளை மீட்டு தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார்
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவர் கோவையில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 18-ந் தேதி மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரியில் இருந்து சுற்றுலா செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மாணவியின் செல்போனுக்கு அவரது பெற்றோர் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மாயமான தங்களது மகளை மீட்டு தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிக்கும், தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. வாலிபர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை தூத்துக்குடிக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. போலீசார் மாணவியை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
- பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் விபத்தில் பலியானார்.
- நண்பர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர்
சிவகாசி சித்துராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன்(வயது20). இவர் தனது பிறந்தநாளை கொண்டாட சிவகாசி சாட்சியாபுரம் பகுதியை சேர்ந்த ஹரி சங்கர், முனீஸ்வரன், பிரபாகரன், ராஜமுகமது, செல்வகுமரன், மணிகண்டன், முத்து மாரீஸ்வரன், சுந்தரமூர்த்தி ஆகிய நண்பர்களை அழைத்தார்.
இவர்கள் சித்துராஜபுரம் பகுதியில் உள்ள அட்டை மில் ஒன்றில்கார்த்தீஸ்வரன் பிறந்தநாளை கொண்டாடி னர். பின்னர் அவர்கள் காரில் சாத்தூர் புறப்பட்ட னர். காரை முனீஸ்வரன் ஓட்டினார். கோணம்பட்டி பகுதியில் உள்ள பாலி டெக்னிக் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் அனை வரும் காய மடைந்தனர். அங்கி ருந்தவர்கள் அவர்களை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் மேல்சிகிச்சைக் காக கார்த்தீஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும், முனீஸ்வரன், சுந்தரமூர்த்தி ஆகியோர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கார்த்தீஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாளில் வாலிபர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திடுக்கிடும் தகவல்கள்
- எதிர்தரப்பால் கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஊருக்குள் வராமல், மடுகரையில் உள்ள நண்பர் ராம்ஜி வீட் டில் தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலைநகரை சேர்ந்தவர் மணிமாறன் என்ற டூம் மணி (35). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, அடி தடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பிரபல ரவுடியான முத்தி யால்பேட்டை
அன்புரஜினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று இவர், சில மாதங் களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
இவர் எதிர்தரப்பால் கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஊருக்குள் வராமல், மடுகரையில் உள்ள நண்பர் ராம்ஜி வீட் டில் தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தார்.மணிமாறனின் பிறந்தநாளான மடுகரை காலனி பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அவரை நோட்டமிட்டு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மணிமாறனை வெட்டி படுகொலை செய்தனர். இதையடுத்து திருபுவனை இன்ஸ் பெக்டர் ராஜ்குமார், சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப் பட்டு, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரை நேற்று முன்தினம் இரவும், ஒருவரை நேற்றும் போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நெட் டப்பாக்கம் சூரமங்கலம் மேட்டுத்தெருவை சேர்ந்த சிவராஜ் (22), சூரமங்கலம் பேட் கல்யாண மண்டபம் வீதியை சேர்ந்த வினோ தன் (29), டி.நகர் ஜீவா னந்தபுரம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த தர்மதுரை (22), வாணரப் பேட்டை கஸ்தூரிபாய் வீதியை சேர்ந்த விஸ்டம், ரெயின்போ நகரை சேர்ந்த சங்கர் (28) என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்க ளிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட தில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
லாஸ்பேட்டை ரவுடி சோழன் தலை மையிலான கும்பல்தான் கடந்த 2019-ம் ஆண்டு அன்புரஜினியை கொலை செய்ததும், அவரது தம்பி ஜெரிக்கோ கொலையில் தொடர்புடையவர்களை பழிதீர்க்க முடிவு செய்து அன்புரஜினி கொலையில் தொடர்புடைய ஜெரோம் பிரபுவை கடந்த 2021-ம் ஆண்டு சென்னை நீலாங்க ரையில் கொலை செய்தும் கடந்த மே மாதம் அனிச் சக்குப்பத்தை சேர்ந்த விமல் (35) என்பவரை ஆரோவில் பொம்மையார் பாளையம் சாலையில் வெட்டி கொலை செய் தததும், தொடர்ச்சியாக, தற்போது மணிமாறனை கொலை செய்ததும் தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் பிரான்சில் வசிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மர் ஷல் என்பவர் அன்புரஜி னியின் தீவிர ஆதரவாளர் என்பதும் தற்போது அவருடன்தான் அன்புரஜினியின் தம்பி ஜெரிக்கோ வசித்து வருவதும் பிரான்சில் இருந்து கொண்டு அன்புரஜினி கொலையில் தொடர்பு டையவர்களை ஒவ்வொ ருவராக கொல்ல மர்ஷல் தான் நிதியுதவி அளித்து வந்துள்ளார்.
அவர் கொடுத்த நிதியுதவி மூலம் மணிமாறன் உட்பட 3 பேரையும் கூலிப்படையை ஏவி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, போலீ சார் இந்த கொலை வழக்கில் ஜெரிக்கோ, மர்ஷல் ஆகியோரையும் சேர்த்து வழக்குப்பதிவு செய்துள்ள னர். மேலும், பிரான்சில் இருந்து இருவரையும் புதுவை அழைத்து வரவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- தன்னை யாரோ கையில் வெட்டியதாக கூறி வரவழைத்து கொடூரம்
- கொலை வழக்கில் தொடர்பு பற்றி பேசியதால் குத்தியதாக வாக்குமூலம்
கோவை,
கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள அருளானந்தம் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று கடையில் இருந்த முருகனுக்கு ஆசிரியர் காலனியை சேர்ந்த மாதவன் (21) என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தன்னை யாரோ கையில் வெட்டி விட்டதாக கூறினார். முருகன் உடனடியாக மாதவன் அழைத்த இடத்துக்கு சென்றார்.
அங்கு தனியாக நின்று கொண்டு இருந்த அவர் நீ என்ன பெரிய ஆளா என கூறியபடி அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து முருகனின் வயிற்றில் குத்தினார். பின்னர் அங்கு இருந்த தப்பிச் சென்றார்.
கத்திக்குத்தில் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் முருகனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து சூலூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தலைமறைவாக இருந்த மாதவனை கைது செய்தனர்.
அவரிடம் கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்து விசாரித்தனர். விசாரணையில் மாதவன், ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். அந்த கொலை சம்பந்தமாக முருகன் பேசியதால் அவரை கத்தியால் குத்தியதாக கூறினார். இதனை தொடர்ந்து போலீசார் மாதவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- மோட்டார் சைக்கிளில் ஏற மறுத்ததால் காதலர் ஆத்திரம்
- பொள்ளாச்சி தாலுகா போலீசார் தீவிர விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது தாய் மற்றும் தந்தை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மாணவி அவரது தாத்தா பாட்டி பராமரிப்பில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெகதீஸ் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
சம்பவத்தன்று மாணவி பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஜெகதீஸ் தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வருமாறு அழைத்தார். ஆனால் மாணவி வர மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் மாணவியை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார். இதில் காயம் அடைந்த மாணவி நடந்த சம்பவத்தை தனது தாத்தாவிடம் கூறி னார். அவர் மாணவியை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசில் மாணவி புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
- கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பிரபாகர் காலனியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் விக்கி (வயது 26). சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் விக்கியை தனியாக பேச அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் விக்கியை கத்தியால் சரமாரியாக குத்தினர்.
இதில் அவர் படுகாயமடைந்தார். அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட விக்கி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு மருத்துவமனை அலுவலர்கள் தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ததோடு கொலைக்கான காரணம் என்னவென்று விசாரித்து வருகின்றனர். கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.
- திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வல்லுறவு
- வால்பாறை அனைத்து மகளிர் போலீசார் தொழிலாளியிடம் விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடுமலை அருகே உள்ள பூக்களத்தை சேர்ந்த 19 வயது கூலித் தொழிலாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
கடந்த 29-ந் தேதி சிறுமி தனது பெற்றோரிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். அப்போது அவரை அவரது காதலன் திருமண ஆசை காட்டி கடத்தி சென்றார். பின்னர் வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத் காரம் செய்தார்.
சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாலிபர் சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வாலிபருடன் தங்கி இருந்த சிறுமியை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு வால்பாறை அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. வால்பாறை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வந்தனர்.
- சூர்யாவை கைது செய்து அவரிடமிருந்து திருடிய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது47). இவர் சம்பவத்தன்று தனது விவசாய நிலத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியவர் திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு முஸ்லிம் தெருவை சேர்ந்தபழனி மகன் சூர்யா(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்பெஸ்க்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் அகரம்பள்ளிப்பட்டுக்கு விரைந்து சென்று சூர்யாவை கைது செய்து அவரிடமிருந்து திருடிய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.