காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர்

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததாக வாலிபர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. அவரது தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர்
Published on

திருமங்கலம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் கார்த்திகா(24). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதே நிறுவனத்தில் திருமங்கலம் பன்னிகுண்டு கிராமத்தை சேர்ந்த வீரனகுமார்(34) பணிபுரிந்தார்.

ஒரே நிறுவனத்தில் பணி புரிந்த இருவ ருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு வீரனகுமார் காதலி கார்த்திகாவுடன் சுற்றியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் வீரனகுமாருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இது குறித்து தாமதமாக தகவல் அறிந்த கார்த்திகா திருமங்கலம் பன்னிகுண்டு வந்து வீரனகுமாரிடம் கேட்கவே, அவரும் தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரும் சேர்ந்து அவதூறாக பேசி திட்டியுள்ளனர்.

விரக்தியடைந்த கார்த்திகா இது குறித்து சிந்துபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வீரனகுமார், அவரது தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com