என் மலர்

  நீங்கள் தேடியது "marry"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததாக வாலிபர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
  • அவரது தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருமங்கலம்

  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் கார்த்திகா(24). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதே நிறுவனத்தில் திருமங்கலம் பன்னிகுண்டு கிராமத்தை சேர்ந்த வீரனகுமார்(34) பணிபுரிந்தார்.

  ஒரே நிறுவனத்தில் பணி புரிந்த இருவ ருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு வீரனகுமார் காதலி கார்த்திகாவுடன் சுற்றியுள்ளார்.

  இந்த நிலையில் கடந்த மாதம் வீரனகுமாருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இது குறித்து தாமதமாக தகவல் அறிந்த கார்த்திகா திருமங்கலம் பன்னிகுண்டு வந்து வீரனகுமாரிடம் கேட்கவே, அவரும் தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரும் சேர்ந்து அவதூறாக பேசி திட்டியுள்ளனர்.

  விரக்தியடைந்த கார்த்திகா இது குறித்து சிந்துபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வீரனகுமார், அவரது தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்பகோணத்தில் காதலியிடம் தனிமையில் இருந்ததில் கர்ப்பம் அடைந்தார். தன்னை திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

  கும்பகோணம்:

  கும்பகோணம் அழகாபுத்தூர் அருகே அண்ணா நகர் சேர்ந்தவர் வீரமுத்து மகள் ஆஷா (வயது 17). அதே பகுதியை சேர்ந்த ராமன் (24) கூலி தொழிலாளி. இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். அடிக்கடி தனிமையில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

  இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஆஷாவுடன் பலமுறை ராமன் தனிமையில் இருந்து வந்தார். இதில் ஆஷா கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். 

  இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராமனை வலியுறுத்தினார். ஆனால் அவர் கேட்காமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து ஆஷா கும்பகோணம் அனைத்து பிரிவு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சியில் கணவரை இழந்த பெண்ணிடம் திருமணம் செய்ய வற்புறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  திருச்சி:

  திருச்சி கருமண்டபம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (36). இவரது உறவினர் ஒருவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரின் மனைவி தனியாக இருந்து வந்தார். இதனால் கந்தசாமி தனியாக இருந்த இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வந்துள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.

  இந்நிலையில் பெண்ணின் வீட்டிற்கு சென்ற கந்தசாமி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி தகராறு செய்துள்ளார். அதே நேரத்தில் அங்கு வந்த அவரின் உறவுப் பெண்கள் தேவி, பத்மாவதி ஆகியோர் கந்தசாமியை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் அவர்கள் இளம்பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. 

  இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர். மேலும் தேவி, பத்மாவதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  தேனி:

  தேனி அருகே காட்டு நாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகி 5 வயது குழந்தை உள்ளது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

  இந்த வி‌ஷயம் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்ததால் அவர் சண்டை போட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால் கார்த்திக் அடிக்கடி இளம்பெண் வீட்டுக்கு சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் அந்த பெண் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

  கணவர் பிரிந்து சென்று விட்டார். நான் கர்ப்பமாக உள்ளேன். எனவே என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் தன்னை சந்தித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து தேனி அனைத்து மகளிர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்ததால் ஆட்டோ டிரைவர் ‘பிரேக் ஆயில்’ குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  மதுரை:

  மதுரை மேலூர் அருகேயுள்ள கொட்டக்குடி கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த தெய்வேந்திரன் மகன் சரவணன் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் அந்தப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.

  இந்த நிலையில் சரவணன் தனது பெற்றோரிடம் ‘நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்று கேட்டார்.

  அதற்கு தெய்வேந்திரன் ‘அண்ணனுக்கே இன்னும் திருமணமாகவில்லை, உன் தங்கையும் திருமண வயதில் உள்ளார். எனவே 3 ஆண்டு காத்திரு’ என்று அறிவுரை கூறினார்.

  இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சரவணன் ‘பிரேக் ஆயில்’ குடித்து மயங்கி விழுந்தார்.

  உறவினர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார்.

  இது தொடர்பாக தெய்வேந்திரன் மேலூர் போலீ சில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் அழகர்சாமி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தன்னை காதலித்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு இளம் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  லால்குடி: 

  திருச்சி மாவட்டம், சமயபுரம் இனாம்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் வெங்கடேஷ்(வயது 28). இவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் உதவி என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். தஞ்சை மாவட்டம் திருவையாறு தேர்முட்டி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் கண்மணி(25). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

  கண்மணியின் அத்தை மகன் தர்மராஜுக்கு, வெங்கடேஷ் நண்பர் ஆவார். இதனால் டால்மியாவில் உள்ள தர்மராஜ் வீட்டுக்கு வெங்கடேஷ் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அத்தை வீட்டில் தங்கி படித்த கண்மணிக்கும், வெங்கடேசுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.

  கடந்த 9 ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர். கண்மணியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் பலமுறை வெங்கடேஷ் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வெங்கடேசை கண்மணி வற்புறுத்தினார். ஆனால் வெங்கடேஷ் மறுத்து விட்டார்.

  இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்மணி, கடந்த 2-ந் தேதி லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், புகார் கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் கவிதா மனு ரசீது பதிவு செய்தார்.

  இந்நிலையில் நேற்று காலை லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற கண்மணி, போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து, தன்னை காதலித்து ஏமாற்றிய வெங்கடேசுடன் திருமணம் செய்து வைக்க கோரி தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததையடுத்து, கண்மணி அங்கிருந்து சென்றார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவட்டார் அருகே திருமணத்துக்கு வற்புறுத்தி பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  திருவட்டார்:

  திருவட்டார் அருகே உள்ள ஏற்றக்கோடு வியன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிரிஜா (வயது 39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

  மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது அவரது மனைவி கிரிஜாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான ஜான்ரோஸ் (29) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

  இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த மணிகண்டன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். இங்கு அவர் திடீரென மரணம் அடைந்தார்.

  அதன் பிறகும் கிரிஜாவுக்கும், ஜான் ரோசுக்கும் இடையேயான கள்ளத்தொடர்பு நீடித்தது. கணவர் இறந்து விட்டதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிரிஜாவை ஜான்ரோஸ் வற்புறுத்தினார். ஆனால் தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதால் அவர்கள் நலனுக்காக தான் 2-வது திருமணம் செய்ய விரும்பவில்லை என கிரிஜா தெரிவித்தார்.

  ஆனால் ஜான்ரோஸ் திருமணத்துக்கு தொடர்ந்து வற்புறுத்தி கிரிஜாவிடம் தகராறில் ஈடுபட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஜான்ரோஸ், கிரிஜாவை சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பாக கிரிஜா திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் ஜான்ரோஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

  இந்த பிரச்சினைக்கு பிறகு சில காலம் கிரிஜாவை ஜான்ரோஸ் சந்திக்காமல் இருந்தார். கடந்த சில நாட்களாக மீண்டும் கிரிஜாவை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். கிரிஜா மீண்டும் மறுப்பு தெரிவிக்கவே அவர் மீது ஜான்ரோஸ் ஆத்திரம் கொண்டார்.

  நேற்று இரவு கிரிஜா தனது குழந்தைகளுடன் பக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது மறைந்திருந்த ஜான்ரோஸ், ரப்பர் பால் உறைய வைக்க பயன்படுத்தப்படும் ஆசிட்டை எடுத்து கிரிஜாவின் முகத்தில் வீசினார். இதில் கிரிஜாவின் முகம் கருகி வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். இதையடுத்து ஜான்ரோஸ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

  கிரிஜாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் கிரிஜாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆசிட் வீசியதில் கிரிஜாவின் 2 கண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இதுதொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிட் வீசிய ஜான்ரோசை தேடினர். அப்போது அவர் அங்குள்ள தோட்டம் ஒன்றில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்ரோஸ் இறந்தார். திருமணத்துக்கு வற்புறுத்தி பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. #NickJonas #PriyakaChopra #Marry #WesternCeremony #India
  ஜோத்பூர்:

  பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அவர்கள் இந்து முறைப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் திருமணம் செய்து கொள்கின்றனர்.  பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று புகழ்பெற்ற பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஜோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

  பிரியங்கா சோப்ரா இந்து மதத்தையும், நிக் ஜோனஸ் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுபவர் என்பதால் இரண்டு முறையிலும் திருமணம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில் டிசம்பர் 1 (நேற்று) மற்றும் 2-ந்தேதிகளில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி நேற்று ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. மணமக்கள் இருவரும் பாதிரியார் முன்னிலையில் மண ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். மிகவும் ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில் மணமக்களின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.

  அதன்படி பிரியங்கா சோப்ராவின் தாய் மது சோப்ரா, சகோதரர் சித்தார்த், உறவினர்களான பிரனிதி சோப்ரா, மன்னாரா சோப்ரா மற்றும் நிக் ஜோனசின் பெற்றோர் பால் கெவின் சீனியர், டெனிஸ், சகோதரர் கெவின், அவரது மனைவி டேனியல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  மேலும் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் சிலரும் பங்கேற்றனர்.  இந்த திருமணத்தையொட்டி அரண்மனை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததுடன், யாரும் புகைப்படம் எடுப்பதை தவிர்க்கும் வகையில் திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்களும் செல்போன் கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

  கிறிஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் முடிவடைந்த நிலையில், பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் ஜோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்து முறைப்படி மீண்டும் திருமணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. #NickJonas #PriyakaChopra #Marry #WesternCeremony #India
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வத்தலக்குண்டுவில் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பெண்ணை திருமணம் செய்ய வாலிபர் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  வத்தலக்குண்டு:

  வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்தவர் மனோஜ் (வயது25). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த தனலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

  அன்று முதல் மனோஜ் மற்றும் தனலட்சுமி செல்போனில் பேசி வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இருந்த போதும் தொடர்ந்து 3 மாதங்களாக 2 பேரும் செல்போனிலேயே பேசி வந்தனர்.

  வத்தலக்குண்டுவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. அப்போது மனோஜ் திடீரென தனலட்சுமியை தனக்கு பிடிக்க வில்லை என கூறி திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். சமரசம் செய்தபோதும் மனோஜ் திருமணம் செய்ய முன்வரவில்லை.

  இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 2 வீட்டாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதலித்த மாணவியை திருமணம் செய்ய மறுத்த டிரைவர் குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

  சங்கரன்கோவில்:

  சங்கரன்கோவில் அருகே உள்ள சிதம்பராபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சந்தனக்குமார் (வயது24). இவர் ஜே.சி.பி. டிரைவராக உள்ளார்.

  மாலதி கல்லூரிக்கு செல்லும் போது சந்தனக்குமார் அடிக்கடி பார்த்து பேசி வந்தார். அப்போது அவர்களிடையே காதல் ஏற்பட்டது. பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலமாக அவர்கள் தங்களது காதலை வளர்த்து வந்தனர். தனிமையிலும் சந்தித்து பேசி வந்தார்கள்.

  இந்த நிலையில் சந்தனக்குமாருக்கு அவரது வீட்டில் பெண் பார்த்தனர். இதை அறிந்த மாலதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்தனக்குமாரிடம் வலியுறுத்தினார். அதற்கு சந்தனக்குமார் மறுத்து விட்டாராம்.

  இதுபற்றி மாலதி தரப்பில் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனக்குமாரை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருக்கோவிலூரில் திருமணம் செய்யாவிட்டால் ஆசிட் வீசுவேன் என்று மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  திருக்கோவிலூர்:

  திருக்கோவிலூர் வடக்கு வீதி, கங்கையம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மனைவி கீதா (வயது45). இவர்களது மகள் பிரியதர்‌ஷனி.

  இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வருகின்றார். பிரியதர்ஷினி தினமும் கல்லூரிக்கு போகும் போதும், வீடு திரும்பும் போது திருக்கோவிலூர் வடக்கு மாடவீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வன் (வயது 39) என்பவர் அவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்தார்.

  அவ்வாறு தன்னை திருமணம் செய்து கொள்ளா விட்டால் முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் தமிழ்ச் செல்வன் கீதாவின் கடைக்கு சென்று அங்கிருந்த கீதா மற்றும் அவரது மகள் பிரியதர்ஷினி ஆகிய 2 பேரையும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டினார்.

  இது குறித்து கீதா திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் உடனே நடவடிக்கை எடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மகேஷ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வன் மீது வழக்குபதிவுசெய்து வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp