என் மலர்

  நீங்கள் தேடியது "young men"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அந்தோணியை 4 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டியது.
  • படுகாயம் அடைந்த அந்தோணியை அவரது உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

  நெல்லை:

  நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை பீட்டர் தெருவை சேர்ந்தவர் ரோசாரி. இவரது மகன் அந்தோணி (வயது 35).

  சரமாரி வெட்டு

  இவருக்கு ஷீலா (32) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். அந்தோணி மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று நள்ளிரவு அந்தோணி தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தோணியை சரமாரியாக வெட்டியது. பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

  இதில் படுகாயம் அடைந்த அந்தோணியை அவரது உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  காரணம் என்ன?

  அதில் கடந்த 2 நாட்களாக அந்தோணி ராஜ் தனது உறவினரின் மகன்களுடன் ஒன்றாக மீன் பிடிக்க சென்றதாகவும், பின்னர் எல்லோரும் மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

  அப்போது ஏற்பட்ட குடிபோதை தகராறில் முன் விரோதம் ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த வாலிபர் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்ட தொழிலாளியும் தற்கொலை செய்து கொண்டார்.

  நெல்லை:

  குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கருப்பசாமி(வயது 25). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்தும் அவருக்கு குணமாகவில்லை.

  இதனால் மனம் உடைந்து காணப்பட்ட கருப்பசாமி நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள பொன் நகரத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 46). கூலி தொழிலாளி. இவர் வயல்காடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பயிர்களுக்கு மருந்து அடித்து கொடுத்து வந்தார்.

  இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தீராத வயிற்றுவலி ஏற்பட்டு உள்ளது. இதற்கு சிகிச்சை பார்த்தும் அவருக்கு குணமாகாததால் மனம் உடைந்த சுரேஷ் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடனை திருப்பி தருவதாக பெண்ணை அழைத்து உல்லாசமாக இருந்து அதை புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  கொடைக்கானல்:

  கொடைக்கானல் ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் எதிரே எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருபவர் சசிகுமார் (வயது 30). அதே காம்ப்ளக்சில் உள்ள கவரிங் கடையில் அப்சர்வேட்டரியைச் சேர்ந்த மல்லிகா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

  மல்லிகாவிடம் சசிகுமார் கடன் வாங்கி இருந்தார். அந்த கடன் தொகையை பல முறை கேட்டு பார்த்தும் அவர் தரவில்லை. சம்பவத்தன்று சசிகுமாரின் கடை அடைக்கப்பட்டு இருந்ததால் மல்லிகா அவருக்கு போன் செய்தார். அப்போது தான் பணம் தயார் செய்து விட்டதாகவும் வத்தலக்குண்டுவில் இருப்பதாகவும சசிகுமார் கூறியுள்ளார்.

  மல்லிகாவிடம் வத்தலக்குண்டுவுக்கு வந்தால் பணத்தை வாங்கிச் செல்லலாம் என கூறியுள்ளார். அதனை நம்பி அவர் வத்தலக்குண்டு வந்துள்ளார். பின்னர் தனியார் லாட்ஜில் அவரை வரவழைத்து அங்கு மிரட்டி கற்பழித்தார்.
  அவருடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்துக் கொண்டார். இனிமேல் தன்னிடம் பணம் கேட்டால் இந்த படத்தை உனது கணவரிடமும், ஊரில் உள்ளவர்களிடமும் காட்டி விடுவதாக மிரட்டினார்.

  இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மல்லிகா கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஆபாச புகைப்படங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துபாயில் கொத்தடிமையாக இருந்த வாலிபர் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசால் மீட்கப்பட்டார்.
  ராமநாதபுரம்:

  ராமநாதபுரத்தை அடுத்துள்ள சத்திரக்குடி அருகே உள்ளது அரியகுடி புத்தூர் கிராமம். இந்த ஊரைச்சேர்ந்தவர் அய்யாக்கண்ணு என்பவரது மகன் தங்கவேலு(வயது26). இவர் துபாய் நாட்டில் அலுவலக உதவியாளர் பணி என்று கூறிய ஏஜெண்டின் பேச்சை நம்பி அதற்கான தொகையை செலுத்தி துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே கூறியபடி அலுவலக உதவியாளர் பணி வழங்காமல் கட்டுமான பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். இரும்பு கம்பிகளை சுமக்கும் கடினமான வேலையை கொடுத்து சம்பளம் வழங்காமலும், கெட்டுப்போன உணவை கொடுத்து சாப்பிட சொல்லி கொத்தடிமைபோல நடத்துவதாக பெற்றோருக்கு வாட்ஸ்-ஆப்பில் கண்ணீர் மல்க வீடியோ அனுப்பியிருந்தார்.

  இதனைக்கண்டு வேதனை அடைந்த பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மகனை மீட்டுத்தரக்கோரி தாய் ராமு அம்மாள் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர். உடனடியாக தன்னை மீட்காவிட்டால் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று தனது மகன் வீடியோவில் பேசி அனுப்பி இருப்பதாக ராமு அம்மாள் தெரிவித்தார்.

  இந்த மனு மீது உரிய விசாரணை நடத்திய கலெக்டர் வீரராகவராவ் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மத்திய அரசு மூலம் வாலிபர் தங்கவேலுவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அரசின் துரித நடவடிக்கையின் பயனாக துபாயில் கொத்தடிமையாக இருந்து அவதிப்பட்டு வந்த தங்கவேலு மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வாழ்வா? சாவா? என்று போராட்டம் நடத்தி வந்த வேளையில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுத்து தன்னை காப்பாற்றியதற்காக தங்கவேலு தனது குடும்பத்தினருடன் ராமநாதபுரம் வந்து கலெக்டர் வீரராகவராவை சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சியில் கணவரை இழந்த பெண்ணிடம் திருமணம் செய்ய வற்புறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  திருச்சி:

  திருச்சி கருமண்டபம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (36). இவரது உறவினர் ஒருவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரின் மனைவி தனியாக இருந்து வந்தார். இதனால் கந்தசாமி தனியாக இருந்த இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வந்துள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.

  இந்நிலையில் பெண்ணின் வீட்டிற்கு சென்ற கந்தசாமி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி தகராறு செய்துள்ளார். அதே நேரத்தில் அங்கு வந்த அவரின் உறவுப் பெண்கள் தேவி, பத்மாவதி ஆகியோர் கந்தசாமியை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் அவர்கள் இளம்பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. 

  இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர். மேலும் தேவி, பத்மாவதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகர்கோவிலில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் பழகி ஒருவரை ரகசிய திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  நாகர்கோவில்:

  பூதப்பாண்டியை அடுத்த கேசவன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரவின் ஜோஸ் (வயது 27). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பிரவின் ஜோஸ் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தினமும் வேலைக்கு வரும் போது பூதப்பாண்டியை அடுத்த சீதப்பால் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

  நாளடைவில் அந்த பெண்ணும், பிரவின் ஜோசும் காதலில் விழுந்தனர். அடிக்கடி தனியாக சந்தித்து காதலை வளர்த்தனர்.

  பிரவின் ஜோஸ், சீதப்பால் பெண்ணை திருமணம் செய்வதாக உறுதி கூறியிருந்தார். இதனால் அந்த பெண், பிரவின் ஜோஸ் தன்னை திருமணம் செய்வார் என்று உறுதியாக இருந்தார்.

  இந்த நிலையில் பிரவின் ஜோசை கடந்த சில நாட்களாக காணவில்லை. உறவினர்கள் அவரை தேடிய போது பிரவின் ஜோஸ், ஆரல்வாய்மொழியை சேர்ந்த இன்னொரு இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்தது.

  சீதப்பால் பெண்ணை காதலித்து வந்த போதே பிரவின் ஜோஸ் , ஆரல்வாய்மொழி பெண்ணுடனும் நட்பில் இருந்தது தெரியவந்தது. இருவரும் கடந்த 18-ந் தேதி நாகர்கோவிலில் இருந்து ஓசூருக்கு சென்று அங்கு தங்கியிருந்தனர்.

  உறவினர்கள் தேடுவதை அறிந்ததும் இருவரும் கடந்த 23-ந் தேதி நாகர்கோவில் வந்தனர். இங்கு பள்ளிவிளை பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். பிரவின் ஜோஸ், பள்ளிவிளை வீட்டில் இருந்து மீண்டும் வேலைக்கு சென்று வந்தார்.

  இதற்கிடையே 2 வாரங்களாக காதலனை பார்க்க முடியாமல் தவித்த சீதப்பால் பெண், பிரவின் ஜோசை தொடர்பு கொண்டு பேசினார். உடனடியாக ஊருக்கு வரும் படி அழைத்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.

  இதையடுத்து கடந்த 26-ந் தேதி அவர், பூதப்பாண்டியில் உள்ள பதிவு அலுவலகத்திற்கு சீதப்பால் பெண்ணை அழைத்து சென்றார். அங்கு சீதப்பால் பெண்ணை அவர் பதிவு திருமணம் செய்து கொண்டார்.

  பிரவின் ஜோஸ், சீதப்பால் பெண்ணை திருமணம் செய்த தகவல் பள்ளிவிளையில் தங்க வைக்கப்பட்ட ஆரல்வாய்மொழி பெண்ணுக்கு தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி தன் உறவினர்களுக்கு தெரிவித்தார்.

  சீதப்பால் பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்ட பிரவின் ஜோஸ், தன்னை ஏமாற்றி ஓசூர் அழைத்து சென்று கற்பழித்து விட்டதாக கூறி புலம்பினார். இது பற்றி தகவல் அறிந்த ஆரல்வாய் மொழி பெண்ணின் உறவினர்கள் பள்ளிவிளை வந்தனர்.

  சீதப்பால் பெண்ணை திருமணம் செய்த பின்பு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்த பிரவின் ஜோஸ், பள்ளிவிளையில் குடிவைத்த ஆரல்வாய்மொழி பெண்ணை சந்திக்க வந்தார்.

  ஏற்கனவே இந்த விபரம் தெரிந்து அங்கு வந்திருந்த ஆரல்வாய்மொழி பெண்ணின் உறவினர்கள், பிரவின் ஜோசை பிடித்து கொண்டனர். அவர் சீதப்பால் பெண்ணை திருமணம் செய்தது உண்மை தானா? என்று கேட்டனர். குட்டு உடைந்து விட்டதால் அதிர்ந்து போன பிரவின் ஜோஸ் ஏதும் பேசாமல் தலை கவிழ்ந்து நின்றார்.

  இதையடுத்து ஆரல்வாய்மொழி பெண்ணின் உறவினர்கள் இது பற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தனர். இதையடுத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சீதப்பால், ஆரல்வாய்மொழி பெண்களின் உறவினர்கள் திரண்டு வந்தனர்.

  நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடிவிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி பெண், பிரவின் ஜோஸ் மீது முறைப்படி புகார் கொடுத்தார்

  ஆரல்வாய்மொழி பெண் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் மகளிர் போலீசார் பிரவின் ஜோஸ் மீது இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

  பின்னர் பிரவின் ஜோசை கைது செய்த போலீசார் அவரை ஜெயிலில் அடைத்தனர். ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் பழகி ஒருவரை ரகசிய திருமணம் செய்ததால் சிக்கி கொண்ட பிரவின் ஜோஸ் இப்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆலங்குளத்தில் முன்விரோத தகராறில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

  ஆலங்குளம்:

  ஆலங்குளம் புரட்சி நகரை சேர்ந்தவர் ஐசக்ராஜன் (வயது27). சம்பவத்தன்று இவருக்கும், சியோன் நகரை சேர்ந்த தொழிலாளி இமானு வேல்ராஜன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இமானுவேல்ராஜன், ஐசக் ராஜனை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

  இதுபற்றி ஐசக்ராஜன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டுக்கு தீவைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  சேதராப்பட்டு:

  புதுவையை அடுத்த தமிழக பகுதியான இரும்பை காலனியை சேர்ந்தவர் பாபு (வயது33), எலக்ட்ரிசீயன். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

  மதுகுடிக்கும் பழக்கம் உள்ள பாபு அடிக்கடி மதுகுடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வார். அதுபோல் சம்பவத்தன்றும் பாபு மதுகுடித்துவிட்டு வீட்டில் மனைவி கலைவாணியிடம் தகராறு செய்தார். இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு கலைவாணி குழந்தைகளை திருச்சிற்றம்பலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி விட்டு அவரும் அவரது அண்ணன் ஆனந்து வீட்டுக்கு சென்று விட்டார்.

  மனைவி கோபித்து சென்றதால் ஆத்திரம் அடைந்த பாபு, மனைவியின் ஆடையை எடுத்து தீவைத்து கொளுத்தி தனது கூரை வீட்டில் வீசிவிட்டு ஓடிவிட்டார். இதில் வீடு தீப்பிடித்து எரிந்ததுடன் தீ மளமளவென பரவி அருகில் உள்ள பாபுவின் மாமியார் செல்வராணி வீடு மற்றும் சுப்பராயன் வீட்டிலும் பரவி எரிந்தது.

  இதுபற்றி தகவல் அறிந்ததும் வானூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் 3 வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் செல்வராணி வீடு மற்றும் சுப்புராயன் வீடுகளில் வைத்திருந்த நகை-பணம் தீயில் கருகி போனது.

  இதுபற்றிய புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாத்ரூம் கண்ணாடி வழியாக பெண் குளிப்பதை ரகசியமாக எட்டிப்பார்த்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

  புதுச்சேரி:

  புதுவை மேரி உழவர் கரையில் சாலையோரமாக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டின் குளியல் அறை சாலையையொட்டி அமைந்து இருக்கிறது.

  இன்று காலை 5 மணி அளவில் அதன் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதன் மேல் ஏறி குளியல் அறை ஜன்னல் வழியாக வாலிபர் ஒருவர் எட்டிப் பார்த்து கொண்டு இருந்தார்.

  குளியல் அறையில் அந்த வீட்டின் பெண் குளித்ததை அவர் ரகசியமாக பார்த்ததாக தெரிகிறது. ஜன்னல் கண்ணாடி வழியாக யாரும் பார்க்க கூடாது என்பதற்காக அதில் பேப்பரை ஒட்டி வைத்திருந்தனர். அதை கிழித்து விட்டு ரகசியமாக பார்த்தார்.

  அப்போது அந்த வழியாக வந்தவர்கள் இதை பார்த்து விட்டு கூச்சலிட்டனர். உடனே அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு ஓடி விட்டார்.

  ஆனால், அவரது மோட் டார் சைக்கிளில் போதிய பெட்ரோல் இல்லை. எனவே நடுவழியில் நின்று விட்டது. மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு அவர் சென்று விட்டார். இந்த வி‌ஷயம் யாருக்கும் தெரியாது.

  சில மணி நேரம் கழித்து ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கிகொண்டு மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக அங்கு வந்தார். பெட்ரோலை மோட்டார் சைக்கிள் டேங்கரில் ஊற்றி விட்டு ஸ்டார்ட் செய்வதற்கு முயற்சி செய்தார்.

  அப்போது குளியல் அறையை எட்டிப்பார்த்தது அந்த வாலிபர்தான் என்பதை அடையாளம் கண்டு கொண்டனர்.

  எனவே, பொது மக்கள் திரண்டு வந்து அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர் ரெட்டியார் பாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

  அந்த வாலிபர் யார்? என்ற விவரத்தை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நன்னிலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

  திருவாரூர்:

  திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவுப்படி நேற்று இரவு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  சன்னாநல்லூர் பகுதியில் நன்னிலம் சப்-இன்ஸ் பெக்டர் சுகன்யா, தலைமை ஏட்டு மணிகண்டன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் நாகை மாவட்டம் திருப்புகலூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 38) என்பவர் வேகமாக வந்து கொண்டிருந்தார். அவரை போலீசார் வழி மறித்து நிறுத்தி வாகனத்துக்குரிய ஆவணங்களை காண்பிக்குமாறு கூறினர்.

  இதனால் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா மற்றும் ஏட்டு மணிகண்டனை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

  இது குறித்து சப்-இனஸ்பெக்டர் சுகன்யா நன்னிலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாலசுப்பிரமணியனை கைது செய்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சூளகிரி அருகே குடிபோதை தகராறில் நண்பரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  வேப்பனஅள்ளி:

  கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த அத்திமுகம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. இவரது மகன் ரமேஷ் (23). நண்பர். இவர் சம்பவத்தன்று தனது நண்பர் நாகராஜ் உள்பட 5பேருடன் அதேபகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் மது குடித்தனர். அப்போது அவர்களுக்கு போதை தலைகேறியது.

  இதில் ரமேசும், நாகராஜும் தனியாக சென்று தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ் மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியை எடுத்து ரமேசின் வயிற்றில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்து கிடந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

  இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீசார் வழக்குபதிவு செய்து நாகராஜியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print