search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beating"

    • கடனை திருப்பி கேட்ட தம்பதிக்கு அடி-உதை விழுந்தது.
    • விருதுநகர் மேற்கு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை சேர்ந்தவர் சரண்யா (வயது33). இவரது கணவர் ரத்தினராஜின் தாய் மற்றும் அண்ணன் கிருஷ்ணன் குடும்பத்தினர் விருதுநகரில் உள்ளனர். அவர்களது தேவைக்காக ரத்தின ராஜிடம் ரூ.41 லட்சம் கடன் வாங்கி யுள்ளனர். நீண்ட நாட்களா கியும் பணத்தை திருப்பித்தர வில்லை.

    இந்தநிலையில் திருப்போரூரில் ரத்தினராஜ் சொந்தமாக வீடு கட்டத் தொடங்கி யுள்ளார். அதற்கு பணம் தேவைப்பட்டதால் அண்ணனிடம் கடனை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் ஊருக்கு வருமாறு கூறினார்.

    ரத்தினராஜூம் ஊருக்கு சென்று பேசியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் பணம் கிடைக்கவில்லை.

    இதையடுத்து விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரத்தினராஜ் புகார் கொடுத்தார். இதையடுத்து மீண்டும் கிருஷ்ணன் குடும்பத்தினர், ரத்தினராஜை ஊருக்கு வருமாறு அழைத்தனர். ரத்தினராஜ் தனது மனைவியுடன் ஊருக்கு வந்தார். கிருஷ்ணன் வெளியே சென்றிருந்த போது அவரது தாயார் நிர்மலா, மகன்கள் யோகவேல்ராஜ், கார்த்திக்ராஜ் மற்றும் சிலர் சேர்ந்து பணம் கேட்டு வரக்கூடாது என்று கூறி ரத்தினராஜையும், சரண்யாவையும் தாக்கியுள்ளனர். மேலும் மீண்டும் பணத்தை கேட்டு வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி யுள்ளனர்.

    இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் ரத்தினவேல் புகார் கொடுத்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமக்குடியில் கார் டிரைவர் அடித்துக்கொலை செய்த விவகாரத்தில் தென்காசி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார்.
    • இந்த தனிப்படை போலீசார் கொலையில் தொடர்புடைய கோவிந்தராஜ், முனீஸ்வரியை கைது செய்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் தேவராஜ் (வயது29).

    இவர் சென்னை மேட்டுகுப்பம் பகுதியில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் தனது உறவினரான பன்னீர் என்பவருக்கு ரூ. 3 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். அதனை அவர் திருப்பி கொடுக்காததால் பன்னீர் வைத்திருந்த காரை, தேவராஜ் சென்னைக்கு எடுத்துச்சென்று விட்டார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் ஆஜராக தேவராஜ் பரமக்குடி வந்தார். பின்னர் ராமநாத புரம் கோர்ட்டில் ஆஜராகி விட்டு பரமக்குடி வந்தார். இதுபற்றி அறிந்த பன்னீர், தமிழ், வினித், கோவிந்தராஜ், முனீஸ்வரி ஆகிய 5 பேர் தேவராஜை சந்தித்து அவர் எடுத்துச் சென்ற காரை திருப்பித்தரும்படி கேட்ட னர். அப்போது பணத்தை தந்தால் காரை தருவதாக தேவராஜ் கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பன்னீர் உள்பட 5 பேரும் தேவராஜை அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலை யாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. வசந்தகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிகண் ணன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொலையில் தொடர்புடைய கோவிந்தராஜ், முனீஸ்வ ரியை கைது செய்தனர்.

    இந்தநிலையில் கொலை யாளி வினித் தென்காசி கோர்ட்டில் சரணடைந் துள்ளார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வடசேரி பஸ் நிலையத்தில் இன்று பெண் ஊழியரை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரியில் பஸ் நிலையத்தையொட்டி பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இன்று பகல் 12 மணி அளவில் இந்த நிறுவனத்திற்கு வாலிபர் ஒருவர் சென்றார்.

    அந்த வாலிபருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் அங்கு பணிபுரிந்த பெண் ஒருவரின் அருகில் சென்றார். அந்த ஊழியரிடம் சிறிது நேரம் பேச்சு கொடுத்தார்.

    சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கும், வாலிபருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அந்த பெண், வாலிபரை திட்டியபடி அவரை பிடிக்க நிறுவனத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

    இதை கண்டதும் அந்த வாலிபர், வடசேரி பஸ் நிலைய பகுதிக்குள் ஓடினார். அந்த பெண்ணும் விடாமல் துரத்தினார்.

    ஒரு வாலிபரை பெண் ஒருவர் துரத்தி செல்வதை கண்டதும் பஸ் நிலையத்தில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த வாலிபரை திருடன் என நினைத்து மடக்கி பிடித்தனர்.

    வாலிபர் பிடிபட்டதும், அந்த பெண்ணும் அங்கு வந்து விட்டார். அவர் அந்த வாலிபர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பயணிகளிடம் கூறினார். மேலும் அவர் பணம் தருவதாக கூறி தன்னை உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் கூறி அழுதார்.

    பெண் கூறியதை கேட்டதும் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். பிடிபட்ட வாலிபருக்கு அவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.

    மேலும் இச்சம்பவம் பற்றி அவர்கள் வடசேரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்ததும், அவர்களிடம் வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக வடசேரி பஸ் நிலையத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

    திருவட்டார் அருகே இளம்பெண்ணை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு கட்டையால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே உள்ள அன்புவிளை குட்டக்குழி பகுதியைச் சேர்ந்தவர் உண்ணி கிருஷ்ணன். இவரது மனைவி ஜினி(வயது29).

    அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி தொழிற்சாலையில் ஜினி வேலை செய்து வருகிறார். தினமும் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

    நேற்று மாலையும் வழக்கம் போல முந்திரி தொழிற் சாலையில் வேலை முடிந்து ஜினி வீட்டுக்கு நடந்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார்(21) என்ற வாலிபர் அங்கு வந்து அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

    அவரை ஜினி கண்டித்ததால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் கட்டையால் ஜினியை தாக்கி உள்ளார். இதற்கு அவரது தந்தை கபிரியேல் உடந்தையாக இருந்து உள்ளார். இதில் காயம் அடைந்த ஜினி திருவட்டாரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தன்னை தாக்கியது பற்றி ஜெயக்குமார் மற்றும் கபிரியேல் மீது திருவட்டார் போலீசிலும் புகார் செய்தார்.

    இது பற்றி 6 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரது தந்தை கபிரியேலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பாத்ரூம் கண்ணாடி வழியாக பெண் குளிப்பதை ரகசியமாக எட்டிப்பார்த்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மேரி உழவர் கரையில் சாலையோரமாக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டின் குளியல் அறை சாலையையொட்டி அமைந்து இருக்கிறது.

    இன்று காலை 5 மணி அளவில் அதன் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதன் மேல் ஏறி குளியல் அறை ஜன்னல் வழியாக வாலிபர் ஒருவர் எட்டிப் பார்த்து கொண்டு இருந்தார்.

    குளியல் அறையில் அந்த வீட்டின் பெண் குளித்ததை அவர் ரகசியமாக பார்த்ததாக தெரிகிறது. ஜன்னல் கண்ணாடி வழியாக யாரும் பார்க்க கூடாது என்பதற்காக அதில் பேப்பரை ஒட்டி வைத்திருந்தனர். அதை கிழித்து விட்டு ரகசியமாக பார்த்தார்.

    அப்போது அந்த வழியாக வந்தவர்கள் இதை பார்த்து விட்டு கூச்சலிட்டனர். உடனே அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு ஓடி விட்டார்.

    ஆனால், அவரது மோட் டார் சைக்கிளில் போதிய பெட்ரோல் இல்லை. எனவே நடுவழியில் நின்று விட்டது. மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு அவர் சென்று விட்டார். இந்த வி‌ஷயம் யாருக்கும் தெரியாது.

    சில மணி நேரம் கழித்து ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கிகொண்டு மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக அங்கு வந்தார். பெட்ரோலை மோட்டார் சைக்கிள் டேங்கரில் ஊற்றி விட்டு ஸ்டார்ட் செய்வதற்கு முயற்சி செய்தார்.

    அப்போது குளியல் அறையை எட்டிப்பார்த்தது அந்த வாலிபர்தான் என்பதை அடையாளம் கண்டு கொண்டனர்.

    எனவே, பொது மக்கள் திரண்டு வந்து அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர் ரெட்டியார் பாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    அந்த வாலிபர் யார்? என்ற விவரத்தை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

    காட்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (47), ஆட்டோ மெக்கானிக். இவரது தங்கை பக்கத்து வீட்டில் கணவர், 5 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

    நேற்று மாலை 5 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். கந்தசாமி சிறுமியை வீட்டுக்குள் அழைத்தார். மாமா என்று பாசத்தோடு குழந்தை ஓடிச் சென்றது. அவளை வீட்டுக்குள் தூக்கி சென்ற கந்தசாமி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் சிறுமி அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சிறுமியை மீட்ட அவர்கள் கந்தசாமியை அடித்து உதைத்தனர். பின்னர், காட்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர்.

    செங்கோட்டை அருகே ஆட்டோவில் ஏற வந்த பயணிகள் பஸ்சில் ஏறிய தகராறில் பஸ் டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    நெல்லை:

    செங்கோட்டையில் இருந்து கடையநல்லூருக்கு நேற்று ஒரு அரசு டவுன் பஸ் சென்றது. பஸ்சை சங்கரன் கோவில் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த டிரைவர் சாமிநாதன் (வயது 46) ஓட்டினார். அந்த பஸ் அச்சன்புதூர் அருகே உள்ள பொய்கை ஊரணி அருகே வந்த போது, ஆட்டோவில் ஏற முயன்ற பயணிகள் பஸ்சில் ஏறிவிட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வடகரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மைதீன் அப்துல் காதர் (30), அரசு பஸ் டிரைவரை அவதூறாக பேசி சரமாரி அடித்து உதைத்தார்.

    இதுகுறித்து பஸ் டிரைவர் சாமிநாதன், அச்சன்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மைதீன் அப்துல் காதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலூர் தோட்டப்பாளையத்தில் நள்ளிரவில் வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்த வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து சுற்றிவளைத்து தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் தோட்டபாளையம் சோளாபுரி அம்மன் கோவில் பகுதியில் சுமார் 35 வயதுடைய வாலிபர் ஒருவர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்தார்.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர் மீது சந்தேகம் அடைந்தனர். அவரை பிடித்து யார்? என்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அந்த நபர் சரியாக பதில் கூறவில்லை. அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் சில இரும்பு கம்பி துண்டுகள் இருந்தன. பூட்டிய வீடுகளின் பூட்டை திறக்க இவற்றை பயன்படுத்த வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது.

    சரியாக பதில் கூறாததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பிடிபட்ட நபர் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று வரவே திருட்டு முயற்சியில் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நாங்கள் பிடித்தோம். உடனே போலீசாருக்கும் தகவல் அளித்தோம். ஆனால் உடனடியாக போலீசார் வரவில்லை. அவர்கள் 1 மணி நேரத்திற்கு பின்னர் தான் வந்தனர். பிடிபட்ட நபர் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். நாங்கள் தமிழில் பேசுவது அவனுக்கு புரிகிறது. ஆனால் புரியாதது போல நடிக்கிறார். பல இடங்களில் இதேபோன்று அடி வாங்கி உள்ளதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. ஏற்கனவே வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.

    எனவே எங்கள் பகுதியில் போலீசார் இரவு ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

    ×