கடனை திருப்பி கேட்ட தம்பதிக்கு அடி-உதை

கடனை திருப்பி கேட்ட தம்பதிக்கு அடி-உதை விழுந்தது.விருதுநகர் மேற்கு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடனை திருப்பி கேட்ட தம்பதிக்கு அடி-உதை
Published on

விருதுநகர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை சேர்ந்தவர் சரண்யா (வயது33). இவரது கணவர் ரத்தினராஜின் தாய் மற்றும் அண்ணன் கிருஷ்ணன் குடும்பத்தினர் விருதுநகரில் உள்ளனர். அவர்களது தேவைக்காக ரத்தின ராஜிடம் ரூ.41 லட்சம் கடன் வாங்கி யுள்ளனர். நீண்ட நாட்களா கியும் பணத்தை திருப்பித்தர வில்லை.

இந்தநிலையில் திருப்போரூரில் ரத்தினராஜ் சொந்தமாக வீடு கட்டத் தொடங்கி யுள்ளார். அதற்கு பணம் தேவைப்பட்டதால் அண்ணனிடம் கடனை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் ஊருக்கு வருமாறு கூறினார்.

ரத்தினராஜூம் ஊருக்கு சென்று பேசியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் பணம் கிடைக்கவில்லை.

இதையடுத்து விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரத்தினராஜ் புகார் கொடுத்தார். இதையடுத்து மீண்டும் கிருஷ்ணன் குடும்பத்தினர், ரத்தினராஜை ஊருக்கு வருமாறு அழைத்தனர். ரத்தினராஜ் தனது மனைவியுடன் ஊருக்கு வந்தார். கிருஷ்ணன் வெளியே சென்றிருந்த போது அவரது தாயார் நிர்மலா, மகன்கள் யோகவேல்ராஜ், கார்த்திக்ராஜ் மற்றும் சிலர் சேர்ந்து பணம் கேட்டு வரக்கூடாது என்று கூறி ரத்தினராஜையும், சரண்யாவையும் தாக்கியுள்ளனர். மேலும் மீண்டும் பணத்தை கேட்டு வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி யுள்ளனர்.

இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் ரத்தினவேல் புகார் கொடுத்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com