search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girl"

    • இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் ஜஸ்பிரித் பும்ரா.
    • இவரது ஆக்சனில் பந்து வீசுவதை சிறுவர்கள் ஆர்வமாக கொண்டுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் கடந்த மாதம் இறுதியில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்காக சிறப்பாக செயலாற்றி இருந்தார். தொடர் முழுதும் தனது மிரட்டலான பவுலிங்கை வெளிப்படுத்தி இருந்த அவர் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடரின் நாயகன்விருதைப் பெற்று அசத்தினார். தற்போது பும்ரா ஓய்வில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில், இவரது ஆக்சனில் பந்து வீசுவதை சிறுவர்கள் ஆர்வமாக கொண்டுள்ளனர். நிறைய சிறுவர்கள் பும்ரா பவுலிங் ஆக்சன் மூலம் டிரெண்டாகி உள்ளனர். அந்த வகையில் தற்போது ஒரு சிறுமி பும்ரா ஆக்சனில் பந்து வீசி அசத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    மேலும் பலர் இந்த வீடியோவை பதிவிட்டு, இந்த சிறுமிக்கு வழிகாட்ட வேண்டும் என பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் பும்ரா ஆக்சனில் பந்து வீசுவது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    • ஸ்மார்ட்போன் பார்ப்பதை தியாகம் செய்ய வேண்டும்.
    • கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கடினமாக உழைத்தேன்.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள ஒரு தெருவில் தள்ளுவண்டி கடை மூலம் வடா பாவ் விற்பனை செய்யும் சந்திரிகா தீக்சித் என்ற பெண் தினமும் ரூ.40 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார். இது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர் பிக்பாஸ் ஓடிடி 3 நிகழ்ச்சியில் பங்கேற்று நாடு முழுவதும் பிரபலமாகியுள்ளார்.

    நன்றாக படித்துள்ள சந்திரிகாவுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது. ஆனால் அவருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. இதையடுத்து அவர் தள்ளுவண்டியில் வடா பாவ் விற்க முடிவு செய்தார்.அவர் டெல்லியில் உள்ள தெருவில் தள்ளுவண்டியில் விற்கும் வடா பாவ் உணவை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். இதனை சுவையாக தயார் செய்வதால் சந்திரிகாவுக்கு பொதுமக்கள் வடா பாவ் கேர்ள் என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளனர்.

    இதுகுறித்து சந்திரிகா தீக்சித் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- நான் வடா பாவ் விற்று கடினமாக உழைப்பதன் மூலம் தினமும் ரூ.40 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். அனைவரும் இதேபோன்று சம்பாதிக்கலாம்.

    ஆனால் அதற்கு ஸ்மார்ட்போன் பார்ப்பதை தியாகம் செய்ய வேண்டும். 2 வருடங்களுக்கு முன்பு தெருவோரத்தில் தள்ளுவண்டியில் சாதாரணமாகத்தான் தொழிலை ஆரம்பித்தேன். ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கடினமாக உழைத்தேன். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு எனது மகனுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.

    • இளம்பெண் அரை நிர்வாணமாகவும், உடலில் காயங்களுடனும் சடலமாக மீட்பு.
    • சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    ஆக்ராவின் தாஜ்மகால் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாஜ்மகால் அருகே உள்ள மசூதிக்குள் முகம் நசுக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

    இளம்பெண் அரை நிர்வாணமாகவும், உடலில் காயங்களுடனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

    சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் இது கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    • ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார்.
    • அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் எல்.பி. நகரில், அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கண்டக்டர் கங்காதரன் பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.

    தில்சுக் நகர் செல்வதற்காக, அந்த பஸ்சில் இளம் பெண் ஒருவர் ஏறினார்.

    கண்டக்டர் கங்காதரனிடம், அந்த பெண் இலவச பயண டிக்கெட் கேட்டார்.

    உடனே கண்டக்டர், ஆதார் அட்டையை காண்பிக்கும்படி கேட்டார்.

    இதைக் கேட்டதுமே அந்த பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. யாரை பார்த்து ஆதார் அட்டை கேட்கிறாய்? என்று கேள்வி கேட்டு, கண்டக்டரை சரமாரியாக திட்டினார்.

    இதனால், திடுக்கிட்ட கண்டக்டர், அடையாள அட்டை இல்லாமல், பஸ்சில் பயணிக்க முடியாது, ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கண்டக்டரை எட்டி உதைத்து தாக்க தொடங்கினார். அப்போதுதான் அந்த பெண், குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

    பிறகு, அந்த பெண், திடீரென ரூ.500 நோட்டை கண்டக்டரிடம் தந்து டிக்கெட் கேட்டார்.

    500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று கண்டக்டர் கூறினார்.

    இதைக் கேட்டதும், அந்த பெண்ணுக்கு மீண்டும் கோபம் அதிகமாகிவிட்டது. அதனால், கண்டக்டரை எட்டி காலால் உதைத்தார். பிறகு, அவரது முகத்திலேயே எச்சிலை துப்பினார்.

    சினிமாவில் வரும் சண்டை காட்சி போல கண்டக்டரை காலால் உதைத்து புரட்டி எடுத்தார்.

    இதனை பார்த்து, பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ந்து போனார்கள் யாருமே அந்த பெண்ணிடம் நெருங்கவில்லை. ஒரு பெண் இதனை தடுக்க அருகில் வந்தார்.

    அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.

    பஸ்சை அருகில் உள்ள போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இது குறித்து கண்டக்டர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போதையில் கண்டக்டர் மற்றும் பெண்ணை தாக்கியது தொடர்பாக இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேண்ட் சட்டை அணிந்து இளம்பெண் பஸ்சில் கண்டக்டரை தாக்கும் காட்சிகளை பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர் .

    அது தெலுங்கானாவில் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • வீட்டைவிட்டு வெளியே சென்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள பங்காளபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு ராஜேஸ்வரி (வயது27) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி பழனியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு மாயமானார்.

    இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • வனிதா பி.காம் பட்டப்படிப்பை முடித்து விட்டு 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • மாலை 4.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் தேனீர் வைக்க வனிதா சென்றபோது திடீரென சத்தமிட்டுள்ளார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சின்னாக்கவுண்டனூர் கிராமம் கோபாலனூர் கருவறையான் காட்டை சேர்ந்தவர் சீனிவாசன், விவசாயி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், பிரபு (27) என்ற மகனும், வனிதா (23) என்ற மகளும் உள்ளனர்.

    வனிதா பி.காம் பட்டப்படிப்பை முடித்து விட்டு 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் தேனீர் வைக்க வனிதா சென்றபோது திடீரென சத்தமிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் வனிதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சங்ககிரி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, நிலைய அலுவலர் அருள்மணி மற்றும் மீட்பு படையினர் சமையல் அறையில் தண்ணீர் அடித்து கருகிய நிலையில் இருந்த வனிதாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வனிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வனிதா சமைத்தபோது கியாஸ் கசிவினால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தாரமங்கலம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி
    • அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள தேவியின் தாய் சரோஜா தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி (25). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    குடிப்பழக்கம் உள்ள முருகன் வீட்டில் தேவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தேவி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள தேவியின் தாய் சரோஜா (50) தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேவிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.Salem District News, இளம்பெண், தற்கொலை, ஆர்.டி.ஓ., விசாரணை, Young girl, suicide, RDO, Investigation

    உறவினர் மற்றும் நண்பர்க ளின் வீடுகளில் அபர்ணா வை தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழ் கவரப் பட்டை சேர்ந்த வர் சுப்பிர மணி யன். இவரது மகள் அபர்ணா (வயது 22). இவர் கடந்த 14-ந் தேதி இரவு 7.30 மணி அளவில் வீட்டிலிருந்து தோட் டத்திற்கு சென்றவர் வெகு நேரமாகி யும் வீடு திரும்ப வில்லை.

    அவரது பெற் றோர் உறவினர் மற்றும் நண்பர்க ளின் வீடுகளில் அபர்ணா வை தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.இது குறித்து அபர்ணா வின் பெற்றோர் பண்ருட்டி போலீசில் புகார் செய்த னர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன இளம் பெண்ணை தேடிவருகின்றனர்.

    • வடிவேல்-மதிஷாவுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
    • மதிஷாவை வடிவேல் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து தகவல் எதுவும் கிடைக்க வில்லை.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள சேசையாபுரம், வடக்குத்தெருவை சேர்ந்தவர் வடிவேல். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மதிஷா (23). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் மதிஷா கடந்த 11-ந் தேதி வள்ளியூர் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் பல்வேறு இடங்களில் தேடியும் மதிஷா குறித்து தகவல் எதுவும் கிடைக்க வில்லை. இதையடுத்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்ம ராஜ் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி மாயமான மதிஷாவை தேடி வரு கின்றனர்.

    • தீபா அடிக்கடி வரும் தலைவலியால் அவதிபட்டு வந்தார்.
    • எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் குழந்தையம்மாள் வீதியை சேர்ந்த செந்தில் மகள் தீபா (21). இவரது பெற்றோர் இறந்து விட்டதால் தாத்தா மருதமுத்து, பாட்டி அங்கம்மாளுடன் வசித்து வந்தார். தீபா அடிக்கடி வரும் தலைவலியால் அவதிபட்டு வந்தார்.

    இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து ம் குணமாகததால் சம்பவத்தன்று இரவு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த தீபாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சை க்காக ஈரோடு அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்ப ட்டார். அப்போது டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தீபா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • குடும்ப பிரச்சினையில் மனமுடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம் சுப்பிரமணியர் கோவில் தெரு தாத்தப்பன்குளத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). டிரைவர் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது அத்தை மகளான சிவக்கனி (23) என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

    இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுைடந்த சிவக்கனி தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுதா வீட்டில் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.
    • பல்வேறு இடங்களில் தேடியும் சுதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    களக்காடு:

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சுருளையை சேர்ந்தவர் வேலாயுதம் மகள் சுதா (வயது 21). பிளஸ்-2 படித்துள்ள சுதா வீட்டில் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.

    கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்த சுதா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சுதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை வேலாயுதம் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சுதாவை தேடி வருகின்றனர்.

    ×