என் மலர்
நீங்கள் தேடியது "stab"
- தூத்துக்குடி தாளமுத்து நகர் பூப்பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் அழகுமுத்து ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
- தாளமுத்து நகர் பகுதியில் உள்ள மதுபான கடை அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்து நகர் பூப்பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் அழகுமுத்து (வயது 40). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர்அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான பெயிண்டர் மணிகண்டன் (38) தூத்துக்குடி மாநகராட்சி துப்புரவு பணி ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வரும் முருகன் (35) ஆகியோருடன் தாளமுத்து நகர் பகுதியில் உள்ள மதுபான கடை அருகே ஒன்றாய் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த லாரி டிரைவர் தாழையப்பனும் அவர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.
கத்திக்குத்து
அனைவரும் மது போதையில் இருந்த சமயத்தில் அழகுமுத்து தரவேண்டிய பணத்தை தாழையப்பன் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தாழையப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அழகு முத்துவை குத்தியுள்ளார்.
இதனை தடுத்த மணிகண்டன் மற்றும் முருகன் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காயம்பட்ட மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் பழனி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (37) பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரேம் (24) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் பிரகாஷ் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். பச்சாப்பாளையம் மகாளியம்மன் கோவில் வீதியில் வந்த போது பிரேம் ரோட்டின் குறுக்கே நின்றுள்ளார்.
அவரை தள்ளி நிற்கும் படி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பிரேம் தனது நண்பர் மனோஜூக்கு தெரிவித்துள்ளார். அவரும் அங்கு விரைந்து வந்துள்ளார்.
அவர்கள் பிரகாசை கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பிரகாஷ் பல்லடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பிரேம், மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை அருகே உள்ள காஞ்சரம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45) என்பவரின் மகள் அகிலேஸ்வரி என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு அகிலேஸ்வரி தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.
சம்பவத்தன்று தனது மனைவியை பார்ப்பதற்காக கண்ணன், மாமனார் வீட்டுக்குச் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனார் கண்ணன், இவரது மனைவி செல்வி (39), உறவினர்கள் பஞ்சு (50), சத்யா (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே குமணன் தொழுவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது54). அதேபகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் தகராறு செய்து கொண்டிருந்தார். அதை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டு ராஜசேகரை கத்தியால் குத்திவிட்டு லட்சுமணன் தப்பி ஓடிவிட்டார்.
படுகாயமடைந்த ராஜசேகர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மயிலாடும் பாறை போலீசார் வழக்குபதிவு செய்து லட்சுமணனை தேடி வந்தனர். இதனிடையே மயிலாடும் பாறையை சேர்ந்த பால்பாண்டி என்பவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த லட்சுமணன் நான் போலீசையே கத்தியால் குத்தியவன், எனவே பணம் கொடு என கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் அவரிடமிருந்து ரூ.650ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடமுயன்றார். பால்பாண்டி சத்தம்போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடினர். அவர்கள் லட்சுமணனை விரட்டி பிடித்து மயிலாடும்பாறை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
விழுப்புரம் அருகே வெள்ளையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது35). இவர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பாகூரை சேர்ந்த வெங்கடேச பெருமாள் (41) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இதற்கிடையே வெங்கடேச பெருமாளுக்கும், சாந்திக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். சாந்தி சோரியாங்குப்பத்தில் உள்ள தனது அக்கா சாத்தகி வீட்டில் தங்கி போலீஸ் வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையே வெங்கடேசப்பெருமாள் மனைவியிடம் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் வெங்கடேசப்பெருமாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். இதனை அறிந்த சாந்தி நேற்று தனது அக்காள் சாத்தகி மற்றும் அக்காள் கணவர் சிவானந்தம் ஆகியோருடன் பாகூரில் உள்ள வெங்கடேசபெருமாள் வீட்டுக்கு வந்தார். அங்கு வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் எப்படி 2-வது திருமணம் செய்யலாம் என்று அவர்கள் வெங்கடேச பெருமாளிடம் தட்டிக்கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் மாறிமாறிக் தாக்கி கொண்டனர். வெங்கடேச பெருமாளுக்கு ஆதரவாக அவரது தங்கை புவனேஸ்வரி மற்றும் உறவினர்கள் குமாரவேலு, ராம்கி, இந்திரா ஆகியோர் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் வெங்கடேசபெருமாள் தரப்பினர் ஆத்திரம் அடைந்து சாந்தி, அவரது அக்காள் சாத்தகி மற்றும் அவரது கணவர் சிவானந்தம் ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அதுபோல சாந்தி தரப்பினர் தாக்கியதில் வெங்கடேசப்பெருமாள், குமாரவேலு, புவனேஸ்வரி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து இருதரப்பினரும் பாகூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் வீரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி ஆகியோர் விசாரணை நடத்தி இருதரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்தனர். மேலும் வெங்கடேசபெருமாள் தரப்பை சேர்ந்த குமாரவேலு, ராம்கி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே மோதலில் பெண் போலீஸ் சாந்திக்கு கத்திக்குத்தில் காயம் அடைந்ததால் கடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் இந்த சம்பவம் காரணமான இருதரப்பையும் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பாகூர் போலீஸ் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்:
ஆவடியை அடுத்த அயப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் வேணு. கூலி தொழிலாளி. இவரது மகன் பாபு(14). அம்பத்தூர் அத்திப்பட்டில் உள்ள அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் வீட்டின் மொட்டை மாடியில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல் பாபுவை கத்தியால் சரமாரியாக குத்தினர். வயிறு, முதுகு, முகம் என 10-க்கும் மேற்பட்ட இடத்தில் அவருக்கு கத்தி குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்ததும் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாபுவை மீட்டு மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளியில் சக மாணவர்களுடன் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்ததா? என்பது குறித்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ராயபுரம்:
விழுப்புரத்தை சேர்ந்தவர் அஸ்லாம் (25). இவர் சென்னையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். பின்னர் அவர் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள நண்பரை பார்க்க வந்தார்.
இருவரும் ஒரு கடையின் அருகே நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது அஸ்லாம் புகை பிடித்தார். அந்த புகை அருகே நின்ற அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் முகத்தில் பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சசிகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஸ்லாமை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
முதுகு, இடுப்பில் பலத்த காயம் அடைந்த அஸ்லாமுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிது.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.