என் மலர்
நீங்கள் தேடியது "மோமோஸ்"
- ஒருநாள் சிறுவனின் அத்தை வீட்டிற்கு வந்து நகை அலமாரியை திறந்து பார்த்துள்ளார்.
- அலமாரி காலியாக இருந்ததை தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்ததில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்து, கடந்த 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பதிவானது.
அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக சரிந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், 14 வயது சிறுவன் ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி மோமோஸ் சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் மோமோஸ் மீது தீரா காதல் கொண்ட சிறுவனிடம் வீட்டில் உள்ள நகைகளை திருடி கொண்டுவந்து கொடுத்தால் மோமோஸ் வாங்கி தருவதாக மோமோஸ் கடைக்காரர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த சிறுவன் மெல்ல மெல்ல தனது வீட்டில் உள்ள நகைகளை திருடி அவர்க்ளிடம் கொடுத்து மோமோஸ் சாப்பிட்டு வந்துள்ளான்.
ஒருநாள் சிறுவனின் அத்தை வீட்டிற்கு வந்து நகை அலமாரியை திறந்து பார்த்துள்ளார். அப்போது அலமாரி காலியாக இருந்ததை தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்ததில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிறுவனின் தந்தை போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.
- ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ்.
- மோமோசில் பல வகை இருக்கிறது.
மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ். உணவு பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு. மோமோஸ் செய்யப்படும் ரெஸ்டாரன்ட் மற்றும் சாட் கடைகளில் மாலை நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிவதை நம்மால் காண முடியும். மோமோசில் பல வகை இருக்கிறது. அதில் சிக்கன் மோமோஸ், பீஃப் மோமோஸ், வெஜிடபிள் மோமோஸ், சீஸ் மோமோஸ், மற்றும் பால் உருண்டை மற்றும் சர்க்கரையை கொண்டு செய்யப்படும் கோவா மோமோஸ் பிரபலமானவை.
தேவையான பொருட்கள்
மைதா மாவு- ஒரு கப்
வெங்காயம்- 1 (நறுக்கியது)
குடை மிளகாய்- 1
கேரட்- 1
பீன்ஸ்- 5-6
முட்டைகோஸ்- (சின்னது)
பூண்டு- 2 பல்
இஞ்சி- ஒரு துண்டு
மிளகு தூள்- ஒரு ஸ்பூன்
வினிகர்- ஒரு ஸ்பூன்
சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், குடை மிளகாய், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை பொடியா நறுக்கி தயார் செய்து வைத்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு பவுலில் மைதா மாவு, கால் மேஜைக்கரண்டி அளவு உப்பு, 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய், மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் வைத்து இறுக்கமாக மூடி போட்டு அதை சுமார் 40-ல் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை அதை வதக்கவும்.
இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாய், கேரட், முட்டைகோஸ், மற்றும் பீன்சை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வதக்கவும். அதில் மிளகாய் தூள், வினிகர், சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும். பின்னர் அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி அதை சிறிது நேரம் ஆற விடவும்.
அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
இப்பொழுது சப்பாத்தி கல்லில் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நாம் செய்து வைத்திருக்கும் ஸ்டஃப்பிங்கை வைக்கவும். ஸ்டஃப்பிங்கை வைத்த பின் அவரவருக்கு பிடித்தமான வடிவில் மோமோசை மடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
பின்னர் இட்லி தட்டை எடுத்து அதில் எண்ணெய்யை தடவி இந்த மோமோசை அதில் வைக்கவும். அடுத்து இட்லி அவிக்கும் பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சுமார் 8-ல் இருந்து 10 நிமிடம் வரை அதை வேக விடவும்.10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து மோமோசை எடுத்து சுட சுட பரிமாறவும்.
- சந்தீப் கூடுதலாக சட்னி கேட்டபோது விகாஸ் மறுத்ததாக தெரிகிறது.
- முகத்தில் காயங்களுடன் சந்தீப் மருத்துவமனையில் அனுமதி.
டெல்லியில் உள்ள ஷஹ்தரா விஸ்வாஸ் நகர் பகுதியில் மோமோவுக்கு கூடுதலாக சட்னி கேட்ட சந்தீப் என்பவரை கடையின் உரிமையாளர் விகாஸ் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சந்தீப் கூடுதலாக சட்னி கேட்டபோது விகாஸ் மறுத்ததாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாய் சண்டை தீவிரமடைந்த நிலையில், அங்கு இருவருக்குள்ளும் ரகளை ஏற்பட்டுள்ளது. இதில், கடையின் உரிமையாளர் சந்தீபை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளார்.
இந்த மோதலில், சந்தீப்பின் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, முகத்தில் காயங்களுடன் சந்தீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தீப் மீது தாக்குதல் நடத்திய விகாஸ் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவானார். இந்நிலையில், விகாஸை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- உணவகத்தில் மோமோஸ் தயாரிக்க மாவு பிசையும் இயந்திரத்தை சிறுமி இயக்கியுள்ளார்
- கடந்த 3 வருடங்களாக சிறுமி அந்த உணவகத்தில் சமையல் வேலை செய்து வந்துள்ளார்.
டெல்லியில் மாவு பிசையும் இயந்திரத்தில் மாட்டி 15 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியின் பேகம்பூரில் உள்ள ஹனுமான் சவுக் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
உணவகத்தில் மோமோஸ் மற்றும் ஸ்ப்ரிங் ரோல்ஸ் தயாரிப்பதற்காக சிறிய அளவிலான மாவு பிசையும் இயந்திரத்தை இயக்கிய சிறுமியின் கை உள்ளே மாட்டிக்கொள்ளவே அவர் தலையோடு இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டார் . இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் பின்னர் அறிவித்தனர். கடந்த 3 வருடங்களாக சிறுமி அந்த உணவகத்தில் சமையல் வேலை உதவியாளராக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சிறுமியை வேலைக்கு வைத்த ராஜேஷ் குமார் என்பவர் மீது போலீசார் குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மர்ம நபர்கள் சோஹைல் ஷா மீது பெவிக்விக் வீசி சென்றுள்ளனர்.
- பெவிகுவிக் தாக்குதலால் அவரின் கண்கள் மற்றும் வாயில் பெவிக்விக் ஒட்டியது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் மோமோஸ் விற்பனை செய்யும் நபர் மீது பெவிகுவிக் வீசி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவாலியர் நகரில் சோஹைல் ஷா (21) என்ற இளைஞர் தனது மனைவியுடன் சேர்ந்து சாலை ஓரமாக மோமோஸ் கடை ஒன்றை நடத்து வருகிறார்.
இந்நிலையில், நவம்பர் 15 அன்று இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சோஹைல் ஷா மீது பெவிகுவிக் வீசி சென்றுள்ளனர். இந்த தாக்குதலால் அவரின் கண்கள் மற்றும் வாயில் பெவிகுவிக் ஒட்டியது.
இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சோஹைலின் மனைவியின் புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






