என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோமோஸ் கடை"

    • அறிவிப்பு பற்றிய புகைப்படம் எக்ஸ் தளத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.
    • ஒரு சில பயனர்கள், சில ஐ.டி. கம்பெனிகளில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைவிட இது அதிகமாக இருப்பதாக பதிவிட்டனர்.

    வட மாநிலங்களில் தெருவோர உணவகங்களில் விற்பனை செய்யப்பட்ட மோமோஸ் தின்பண்டங்கள் தற்போது நாட்டின் பல நகரங்களிலும் தயாரிக்கப்படுகின்றன.

    இந்நிலையில் இணையத்தில் ஒரு மோமோஸ் கடை வைரலாகி வருகிறது. அந்த கடையில் உதவியாளர் பணிக்கு பணியாளர் தேவை என வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில் சம்பளம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என கூறப்பட்டிருப்பது தான் அதற்கு முக்கிய காரணம் ஆகும்.

    இந்த அறிவிப்பு பற்றிய புகைப்படம் எக்ஸ் தளத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். அதில் ஒரு பயனர், நான் இப்போதே விண்ணப்பிக்கிறேன். தினமும் இலவசமாக மோமோஸ் சாப்பிடலாம் என பதிவிட்டார். மற்றொரு பயனர், இந்த கடை எங்கே அமைந்துள்ளது? என கேள்வி எழுப்பி இருந்தார்.

    ஒரு சில பயனர்கள், சில ஐ.டி. கம்பெனிகளில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைவிட இது அதிகமாக இருப்பதாக பதிவிட்டனர். இதுபோன்று பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட, இந்த அறிவிப்பு பேசுபொருளாகி உள்ளது.

    • மர்ம நபர்கள் சோஹைல் ஷா மீது பெவிக்விக் வீசி சென்றுள்ளனர்.
    • பெவிகுவிக் தாக்குதலால் அவரின் கண்கள் மற்றும் வாயில் பெவிக்விக் ஒட்டியது.

    மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் மோமோஸ் விற்பனை செய்யும் நபர் மீது பெவிகுவிக் வீசி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குவாலியர் நகரில் சோஹைல் ஷா (21) என்ற இளைஞர் தனது மனைவியுடன் சேர்ந்து சாலை ஓரமாக மோமோஸ் கடை ஒன்றை நடத்து வருகிறார்.

    இந்நிலையில், நவம்பர் 15 அன்று இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சோஹைல் ஷா மீது பெவிகுவிக் வீசி சென்றுள்ளனர். இந்த தாக்குதலால் அவரின் கண்கள் மற்றும் வாயில் பெவிகுவிக் ஒட்டியது.

    இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆனால் இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சோஹைலின் மனைவியின் புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×