search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடத்தையில் சந்தேகம்:  மனைவியை கத்தியால் குத்தி  கொன்ற  கணவர் கைது
    X

    நடத்தையில் சந்தேகம்: மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர் கைது

    • விஜயா (வயது 20) இவருக்கும் முருகன் (25) என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.3 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயா தனது தாய் வீட்டிற்கு சென்றார்
    • அவரது கணவர் முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவை சரமாரியாக குத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே மோ. வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 20) இவருக்கும் தியாகதுருகம் அருகே பல்லக்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (25) என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் ஆன 3 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயா மோ. வன்னஞ்சூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார் இதனை யடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு விஜயாவை பலமுறை முருகன் அழைத்துள்ளார். அதற்கு விஜயா முருகனுடன் சேர்ந்து வாழ மறுத்துள்ளார். மேலும் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் விஜயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் இதனை முருகன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயாவை மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு முருகன் அழைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தால் நேற்று மாலை கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து மோ. வன்னஞ்சூர் கிராமத்திற்கு தனியார் மினி பஸ்சில் விஜயா சென்றார்.

    அப்போது மழை பெய்ததால் பஸ்சிலிருந்து இறங்கி விஜயா அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஒரு கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகன் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவை சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விஜயா துடித்துடித்து உயிரிழந்தார். மேலும் விஜயாவை கத்தியால் குத்தி விட்டு தப்ப முயன்ற முருகனை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலனையும் முருகன் கத்தியால் குத்தினார். பின்னர் முருகனை போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கொலை செய்ததை முருகன் ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தியதோடு விசாரிக்கச் சென்ற சப் இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்திய முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×