என் மலர்
நீங்கள் தேடியது "tuticorin"
- தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அப்போது, மொய்தீன் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், முனியசாமி, தனிப்பிரிவு தலைமை காவலர் முருகேசன் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தூத்துக்குடி கோமாஸ்புரம், ராஜீவ்காந்தி ஹவுசிங் போர்டு குவாட்டர்ஸ் பகுதியில், அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் (வயது 40) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மொய்தீனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த 33 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொய்தீன் புகையிலை பொருட்களை எங்கிருந்து கொண்டு வந்தார்? எங்கு கொண்டு செல்கிறார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கில் இருந்து செட்டிக்குளம் இடையே சுமார் 1 கி.மீ தூரமுள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் இதுகுறித்து முறையிட்டனர்.
இதையடுத்து அவர் பரிந்துரையின்படி பன்னம்பாறை விலக்கில் இருந்து செட்டிக்குளம் இடையே சேதமான சுமார் 1400 மீட்டர் தொலைவில் சாலை அமைக்க ரூ.1கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. சாத்தான்குளம் நெடுஞ்சாலை உதவி பொறியாளர் விக்ரமசிங் தலைமை தாங்கினார்.
யூனியன் தலைவர் ஜெயபதி, மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் ஜோசப், கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி, பன்னம்பாறை ஊராட்சித் தலைவர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை ஆய்வாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன், நகர தலைவர் வேணுகோபால், வட்டார தலைவர்கள் லூர்துமணி, சக்திவேல்முருகன், கோதாண்டராமன், நகர துணைத் தலைவர் கதிர்வேல், நகர மகிளா காங்கிரஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை ஆய்வாளர் முருகன் நன்றி கூறினார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-
தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இப்போது 1552 படுக்கை களுடன் தேவையான மருத்துவப் பொருட்கள் மற்றும் தேவையான ஒவ்வொரு திறமையையும் கற்று பயிற்சி செய்வதற்கான வழிகள் இருப்பதால், நிஜ உலகத்தை எதிர்கொள்ளும் போதுமான அறிவும், அனுபவமும் உங்கள் அனைவருக்கும் இருப்பதாக நான் நம்புகிறேன்.
கொரோனா தடுப்பு பிரசாரங்களில் மருத்துவ மாணவர்களின் ஈடுபாடு பாராட்டுக்குரியது. மருத்துவ மாணவர் என்ற நிலையில் இருந்து மருத்துவராக இன்று மாறியுள்ளீர்கள். பெற்றோரின் கனவை நிறைவேற்றியுள்ளீர்கள். என்னுடைய பட்டமளிப்பு விழாவில் பேசியது எனக்கு நினைவில்லை.
மருத்துவக்கல்லூரி முதல்வர் மிகச் சிறந்த பேச்சாளர் அவருடைய பேச்சை நான் ரசிப்பேன். நீங்கள் எங்கு உட்காருகிறீர்கள் என்பது முக்கியமல்ல. எதனை அடைகிறீர்கள் என்பது தான் முக்கியம். கொரோனா வால் 3 ஆண்டுகள் கழித்து இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது. நீங்கள் கஷ்டமான காலத்தில் படித்துள்ளீர்கள்.
உங்கள் வாழ்க்கை, எதிர்காலம் சிறந்ததாக அமையும். கொரோனா காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. அதற்கு முக்கிய காரணம் மாணவர்கள்தான். டாக்டர் ஆவது மிகப்பெரிய கனவாக உள்ளது. நிறைய பள்ளிகளில் குழந்தைகளை கேட்டால் டாக்டர் ஆக வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.
சிறு, சிறு தவறுகள் நடந்தா லும் கல்லூரி முதல்வர் மன்னித்து விடுவார். அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு போகப் போகிறீர்கள். போட்டி நிறைந்த உலகமாக உள்ளது. உங்களுடைய கைகள் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்ட கைகள் என்று முதல்வர் கூறினார். அது உண்மையும் கூட.
உலகம் முழுவதும் மருத்துவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். உங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களே உங்களது பெற்றோருக்கு இணையாக வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
நீங்கள் இங்கிருந்து சென்று பெரிய மருத்துவர்களாகி மீண்டும் இந்த கல்லூரிக்கு வந்து பெருமைகள் சேர்க்க வேண்டும். உங்களுக்கும், உங்களுடைய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, துணை முதல்வர் கலைவாணி, கண்காணிப்பாளர் சைலேஸ், மருத்துவ அலுவலர் குமரன், குமாரசாமி, பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில 4 மண்டலம் 60 வார்டுகள் உள்ளது.மாநகர தெருக்களில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
நேற்று நள்ளிரவில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதியில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்களை நாய்கள் விரட்டி சென்றது. இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் போடவே விரட்டி சென்ற நாய்கள் திரும்பிச் சென்றது.
இதுபோல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் செல்லும் பொதுமக்கள் குழந்தைகளை விரட்டி விரட்டி சென்று தெரு நாய்கள் கடித்து வருகிறது என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
இந்நிலையில் தெரு விளக்குகள் எரியவில்லை என்று பொதுமக்கள் கூறிய புகாரை சரி செய்வதற்காக தெருக்களில் நடந்து சென்று எரியாத தெருவிளக்குகளை பார்வையிடச் சென்ற தி.மு.க. கவுன்சிலர் ஒருவரையும் தெருநாய்கள் விரட்டி கடித்து குதறியது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மாநகர சுகாதாரத் துறையினர் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி தெரு நாய் தொல்லைகளில் இருந்து பொது மக்களை காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.