என் மலர்
உள்ளூர் செய்திகள்

பதக்கம் வென்ற சிறுமியை போலீஸ் எஸ்.பி. பாலாஜி சரவணன் வாழ்த்திய போது எடுத்த படம்.
21 நிமிடத்தில் 100 நாடுகளின் தேசிய கொடியை அடையாளம் காட்டும் தூத்துக்குடி சிறுமிக்கு எஸ்.பி. பாராட்டு
- முத்தையாபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் - பவதாரினி என்ற தம்பதியின் மகள் தியாஷிகா
- 100 நாடுகளின் தேசிய கொடிகளை சரியாக அடையாளம் கண்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பாக பதக்கம் பெற்றார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார், இவரது மனைவி பவதாரினி இவர்களது மகள் தியாஷிகா (வயது 2 ½). 21 நிமிடங்களில் 100 நாடுகளின் தேசிய கொடிகளை சரியாக அடையாளம் கண்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பாக பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார்.
பதக்கம் மற்றும் சான்றிதழுடன் அவரது பெற்றோர் தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது குழந்தை தியாஷிகாவை பாராட்டி மென்மேலும் சாதனைகள் புரிய எஸ்.பி. பாலாஜி சரவணன் வாழ்த்தினார்.
Next Story






