என் மலர்
நீங்கள் தேடியது "Varahi amman"
- ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.
- பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.
நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த எழுமிச்சம்பழங்களை வாங்கி அவைகளை இரண்டாக குறுக்கு வசத்தில் அறுத்து சாறு பிழிந்துவிட்டு குப்புறக் கவிழ்த்து கிண்ணம்போல் செய்து கொள்ள வேண்டும்.
அதில் நெய் ஊற்றி திரிபோட்டு, அத்துடன் அர்ச்சனைப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அம்மனை அர்ச்சனை செய்ய கொண்டு வந்திருக்கும் பூ, பழம், கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி,
எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனை பூஜை செய்யும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.
துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சூட்ட விருப்பம் உள்ள பக்தர்கள் எலுமிச்சம்பழத்தை மாலையாகத் தொடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்மாலையை அம்மனுக்கு சாத்துவார்.
அதன்பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழக் கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும்.
ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.
பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று, நூற்றி ஒன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம்.
திருமணம் ஆகவேண்டிய பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.
எலுமிச்சம் பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் அந்த ஒளியில் துர்க்காதேவியின் திருமுகத்தை உற்றுப்பாருங்கள்.
தன்னை மறந்து அன்னையின் மீது உங்கள் மனதை ஐக்கியப்படுத்துங்கள்.
மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள். உங்களது குறைகள் என்னவாக இருந்தாலும் தீர்த்து வைப்பாள்.
அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வு பெறுவீர்கள்.
அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டு சொல்லுங்கள்.
பக்தி பரவசத்துடன் பாமாலைப் பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள்.
தீபாராதனை முடித்து அர்ச்சகர் அர்ச்சனைத் தட்டை தரும்போது அம்மனின் பிரசாதமாக குங்குமம், பூ தருவார்.
அதனால் அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும்.
பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு,
அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கிவிட்டு வர வேண்டும்.
- பூஜை செய்யும் அறையில் முதலில் சக்தி மாகோலமிட வேண்டும்.
- அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.
துர்க்கை அன்னையை வீட்டிலேயே தீப பூஜை செய்ய விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் முறையில் அனுசரித்து வழிபட வேண்டும்.
பூஜை செய்யும் அறையை முதலில் சுத்தமாக கழுவிவிட்டு, அங்கே சக்தி மாகோலமிட வேண்டும்.
அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.
வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் நடுவில் ஐந்துமுக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
மஞ்சள் நிறமுடைய பத்து எலுமிச்சம் பழங்களை வாங்கி, பழங்களை இரண்டு துண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
அந்த இருபது துண்டுகளில் இரண்டு துண்டுகளை மட்டும் எடுத்து சாறு பிழிந்து விட்டு பிழிந்த முடிகளை உள்பக்கம் வெளிப்பக்கம் வருமாறு திருப்பி குழிவான கிண்ணம் போல் செய்து கொள்ள வேண்டும்.
அந்த எலுமிச்சம்பழக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட துர்க்கா தேவியின் படத்தின் முன்போ, அல்லது சிலையின் முன்போ வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
துர்க்கா தேவிக்கு நிவேதனைப் பொருளாக தயிர் சாதம், உளுத்துவடை, அவல், பாயாசம், எலுமிச்சம் பழச்சாதம் படைக்கலாம்.
- துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.
- தோஷம் அகல மாலை நேரம் அம்மனை வழிபட வேண்டும்.
துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகல விதமான சம்பத்துகளும் வந்துசேரும்.
குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும்.
எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள்.
தோஷம் அகல உகந்த நேரம் மாலை நேரம் என்பதினால் அந்நேரத்தில் அம்மனை வழிபட வேண்டும்.
துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும்.
இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்குரிய சிறப்பான நேரமாகும்.
அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்கு பூச்சூடி,
நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்கா தேவியை வழிபட கோவிலுக்கு செல்லவேண்டும்.
துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.
அந்த பூக்களை உதிரியாகவோ அல்லது மாலையாகவோ வாங்கி கொள்ளலாம்.
- கறுப்பு நிறத்துடன் காணப்படும் இவளது முகம் பன்றியை ஒத்திருக்கும்.
- தண்டநாத வாராகி பொன் நிறம் உடையவள்.
வாராகி என்பவள் வாரகமூர்த்தியின் சக்தி ஆவாள்.
கறுப்பு நிறத்துடன் காணப்படும் இவளது முகம் பன்றியை ஒத்திருக்கும்.
இவளுக்கு மொத்தம் 6 கைகள் உண்டு.
வலது கரத்தில் வரத முத்திரையும், இடது கரத்தில் அபய முத்திரையும் கொண்டிருக்கிறாள்.
இவள் எருமையை வாகனமாக கொண்டிருப்பதாக ஸ்ரீதத்துவநிதி சொல்கிறது.
வாராகி அம்சத்தில் தண்டநாத வாராகி, சுவப்ன வாராகி, சுத்த வாராகி என்று மேலும் 3 வகை வாராகிகள் உள்ளனர்.
தண்டநாத வாராகி பொன் நிறம் உடையவள்.
பன்றி முகத்துடன் காட்சி அளிக்கும் இவள் கைகளில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் ஆகியவற்றை ஏந்தி உள்ளாள்.
சுவப்ன வாராகி மேகம் போன்ற நிறம் கொண்டவள்.
இவளுக்கு 3 கண்கள் உண்டு. தலையில் பிறைச்சந்திரனை சூடி இருப்பாள்.
கைகளில் வாள், கேடயம், அரிவாள் ஆகியவற்றை ஏந்தி இருப்பாள்.
சுத்தவாராகி என்பவள் நீலநிறமாக இருப்பாள்.
இவளது பன்றி முகத்தில் இருந்து வெள்ளை நிற கோர பற்கள் வெளியே நீண்டு கொண்டிருக்கும்.
இவள் தலையில் பிறச்சந்திரனை சூடி இருப்பாள்.
இவள் தன் கைகளில் சூலம், உடுக்கை, நாகம் போன்றவற்றை ஏந்தி இருப்பாள்.
- ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி
- ஓம் அகிலத்தின் காப்பே போற்றி
ஓம் அறிவினுக்கறிவே போற்றி
ஓம் ஞானதீபமே போற்றி
ஓம் அருமறைப் பொருளே போற்றி
ஓம் ஆதிமூலமாய் நின்றவளே போற்றி
ஓம் புகழ்தரும் புண்ணியளே போற்றி
ஓம் நறும்பாகின் சுவையே போற்றி
ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி
ஓம் பரமனின் சக்தியே போற்றி
ஓம் பாபங்கள் களைவாய் போற்றி
ஓம் அன்பெனும் முகத்தவளே போற்றி
ஓம் அகிலத்தின் காப்பே போற்றி
ஓம் செம்மேனியளே போற்றி
ஓம் செபத்தின் விளக்கமே போற்றி
ஓம் தானியந் தருவாய் போற்றி
ஓம் கல்யாணியம்மையே போற்றி
- மிளகு சாதம், பால் பாயாசம், காராமணி சுண்டல் வைத்து பூஜை செய்யலாம்.
- அன்னையை பலவாறாக மயக்க எண்ணி பல வடிவங்களெடுத்து போரிடுகிறான்.
தூம்ரலோசனன், சும்பன், நிசும்பன் என்று தூதுவர்களை அனுப்பி அவர்களும் பராசக்தியுடன் போரிட்டு மாண்டதும் தானே போருக்குக் கிளம்பி வருகிறாள்.
அன்னையை பலவாறாக மயக்க எண்ணி பல வடிவங்களெடுத்து போரிடுகிறான்.
தன்னை மணக்கும்படி வேறு கூறுகிறான்.
இறுதியில் பராசக்தி அவனைத் தன் காலடியில் போட்டு, தன் வாளால் வெட்டி வீழ்த்தினாள்.
அசுரனாக இருந்தாலும் அவனும் மோட்சம் என்ற நற்கதியை அடைய அவன் தலை மீதே தன் திருப்பாதங்களை வைத்து அருள் பாலிக்கும் நிலையில் சூலம் ஏந்திய துர்கையாக வராகி வடிவத்தில் காட்சியளிக்கிறாள்.
மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பூஜை செய்து தீபம் ஏற்றுவது சிறந்தது.
தேவியின் பாடல்களை காம்போதி ராகத்தில் பாடுவது சிறப்பானது.
மிளகு சாதம், பால் பாயாசம், காராமணி சுண்டல் வைத்து பூஜை செய்யலாம்.
மரிக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால் கோர்க்கப்பட்ட மாலையை அணிவிக்கலாம்.
இந்த மலர்களால் அர்ச்சனையும் செய்யலாம்.
- சம்பங்கியும் மரிக்கொழுந்தும் கல்யாணி தேவியின் விருப்ப மலர்கள்.
- சர்க்கரைப் பொங்கல் சமைத்து, நைவேத்தியம் செய்யுங்கள்.
நவராத்திரி 3ம் நாள் மகிஷாசூரனை வதம் புரிந்து, சூலமும் கையுமாய், மகிஷனின் தலைமீது வீற்றிருக்கும் தாயை மனதில் நினைத்துக் கும்பிடுவார்கள்.
இவளை, இந்த நிலையில் "கல்யாணி" என்று அழைப்பார்கள்.
சம்பங்கியும் மரிக்கொழுந்தும் கல்யாணி தேவியின் விருப்ப மலர்கள்.
மனதில் உள்ள பக்தியை எல்லாம், சர்க்கரைப் பொங்கலாய் சமைத்து, நைவேத்தியம் செய்யுங்கள்.
வெற்றியையே உகந்தளிக்கும் செல்விக்கு இனிப்பையே படைப்போம்.
மகிஷாசுரனை வதம் செய்த தேவி வராகியாகவும் அம்பிகை காட்சி தருகிறாள்.
- ஞாயிற்றுக்கிழமை கன்னிமார் பூஜை, அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
- 28-ந்தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவுபெறுகிறது.
திண்டுக்கல்லை அடுத்த கம்பிளியம்பட்டி அருகே சின்னாம்பட்டியில் வராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கடந்த 18-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்து வருகிறது.
அதன்படி நேற்று சிம்ஹாரூடா வராஹி ஹோமம் மற்றும் அலங்கார ஆராதனைகள் மகா பூர்ணாகுதி ஆகியவை கோவிலில் நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) உன்மத்த பைரவி ஹோமம் நடைபெறுகிறது. மாதுளை அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். இதேபோல் நாளை (சனிக்கிழமை) விளக்குபூஜை, காய்கறிகளால் அம்மனுக்கு அலங்காரம் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கன்னிமார் பூஜை, மாவிளக்கு எடுத்தல், அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 26-ந்தேதி சுமங்கலி பூஜையும், 27-ந்தேதியன்று தம்பதியினர் பூஜை, பொங்கல் வைத்தல், மகா வரசித்தி வராகி மூல மந்திர ஹோமம், பட்டுப்புடவை அம்மனுக்கு சமர்ப்பித்தல், மகா கலசாபிஷேகம், இரவில் அம்மன் ரத உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 28-ந்தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கம்பிளியம்பட்டி, சின்னாம்பட்டி, வாராகிபுரம் ஊர் பொதுமக்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வரசித்தி வாராகி பக்தர்கள் செய்து வருகின்றனர்.
- சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் சிவாச்சாரியார் செய்தார்.
- திரளான பெண்கள் கலந்து கொண்டு சிம்ஹாருட வராஹி அம்மனை வழிபட்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனி கோவில் கொண்டு சிம்ஹாருட வராஹி அம்மன் அருள் பாலிக்கிறார்.
ஆஷாட நவராத்திரியையொட்டி நேற்று காலை சிம்ஹாருடவராஹி அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு வெண்ணைக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் சிவாச்சாரியார் செய்தார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சிம்ஹாருட வராஹி அம்மனை வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் எஸ். நாகராஜ சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- அல்லல்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பாள் தேவி.
- வராஹி தேவியை செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவோம்.
ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி, அன்னை வராஹி விரத வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. இந்த நாளில் செய்யும் வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே ஸித்திக்கும் என்கிறது பிரமாண்ட புராணம்.
வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி என்னும் இந்த நான்கு நவராத்திரிகளில் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. ஆஷாட மாதம் என்பது சந்திரனை அடிப்படையாகக்கொண்ட மாதங்களில் ஒன்று. இந்த மாதம் ஆனிமாத அமாவாசையோடு தொடங்கி ஆடி மாத அமாவாசை முன் தினத்தோடு முடிவடையும். ஆனிமாத அமாவாசைக்கு மறுதினம் தொடங்கி அடுத்த ஒன்பது நாள்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நவராத்திரிக்கு உரிய தேவி வராஹி அம்மன்.
வராஹி அம்மன் சப்த மாதர்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர். கிராமங்கள் தோறும் அனைத்துக் கோயில்களிலும் சப்த மாதர்களுக்கு என வழிபாட்டுமுறை இருக்கும். காரணம் சப்த மாதர்களும் மனித வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அருள்பவர்கள் என்பது நம்பிக்கை. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு இந்த நாள்களில் நவதானிய அலங்காரம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்கும அலங்காரம் எனத் தினமும் ஒரு பொருளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.
வராஹியை விரதம் இருந்து வழிபட உகந்த திதி பஞ்சமி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை என இருகாலங்களிலும் வராஹியை வழிபட வேண்டும் என்றாலும் ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வராஹிக்குரிய அர்ச்சனை மந்திரங்களில், `ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாயை நமஹ' என்று ஒரு வரி வரும். ஆஷாட மாத பஞ்சமியில் செய்யப்படும் பூஜையைப் பிரியமுடன் ஏற்பவள் அன்னை என்பது இதன் பொருள். நவராத்திரியில் பஞ்சமி திதி நடு நாயகமான தினம். அதனாலேயே அவளுக்குப் பஞ்சமி வழிபாடும் ஏற்பட்டது. அன்னைக்கே பஞ்சமி என்ற திருநாமம் உண்டு. அதற்குப் பஞ்சமி திதிக்கு உரியவள் என்றும் பஞ்சம் போக்குபவள் என்றும் பொருள்கொள்ளலாம்.
வராஹி தேவிக்கு தானியக் கோலமிட்டு வழிபடுவது சிறப்பு. வீட்டில் பஞ்சமி அன்று பூஜை அறையில் விளக்கேற்றி சிறு கோலமிட்டு அதை தானியங்கள் கொண்டு அலங்கரித்து அன்னை வராஹியை விரதம் இருந்து வழிபட்டால் வீட்டில் எப்போதும் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
வராஹியை வழிபடுபவர்கள் சகல வித்தைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.
துன்பம் தீர்க்கும் துவாதச நாமங்கள்
பிரமாண்ட புராணம் வராஹி தேவியின் மகிமைகளை விளக்குகிறது. பண்டாசுர வதத்துக்கு லலிதாம்பிகை புறப்படும்போது தேவி வராஹியும் தன் கிரி சக்கரத்தில் எழுந்தருளினாள். அப்போது சுற்றியிருந்த தேவதைகள் வராஹியை துவாதச நாமங்கள் சொல்லித் துதித்தனர். துவாதசம் என்றால் பன்னிரண்டு. இந்தப் பன்னிரண்டு நாமங்களைச் சொல்லித் துதித்து அன்னையை வழிபட்டால் சகல காரியங்களும் ஸித்தியடையும் என்கிறது பிரமாண்டபுராணம்.
1. பஞ்சமி,
2. தண்டநாதா,
3. சங்கேதா,
4. சமயேஸ்வரி,
5 சமய சங்கேதா,
6. வராஹி,
7. போத்ரினி,
8. சிவா,
9. வார்த்தாளி,
10. மகா சேனா,
11. ஆக்ஞா சக்ரேஸ்வரி,
12. அரிக்ஞை என்பன அந்த நாமங்கள்.
இந்தப் பன்னிரண்டு நாமங்களையும் ஒவ்வொரு பஞ்சமி அன்றும் அன்னையின் சந்நிதியில் அல்லது வீட்டில் அம்பிகையின் படத்துக்கு முன் நின்று சொல்லி வணங்க, தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்னைகள் இருந்தால் கட்டாயம் வழிபட வேண்டிய தெய்வம் அன்னை வராஹி. அன்னையை பஞ்சமி தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் பூமி தொடர்பான வழக்குகள் அனைத்தும் சாதகமாகும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீவராஹிதேவிக்கு சில நிவேதனங்கள் விசேஷம். பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, தயிர்சாதம், சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கருப்பு எள் உருண்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தேன் இவை அனைத்தும் அன்னைக்குப் பிரியமானவை. இவற்றில் ஏதேனும் ஒன்றையோ, இயன்றால் இவையனைத்தையுமோ படைத்து, மற்றவர்களுக்கும் விநியோகித்து வராஹியை வழிபட்டால் வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.
ஆஷாட நவராத்திரி காலத்தில்.... விரதம் இருந்து பஞ்சமி திதியில் உக்கிரமான பெண் தெய்வங்களை தரிசிப்பதும், வழிபடுவதும், எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கிவிடும். காரியத்தடைகளையெல்லாம் நீக்கி அருளுவாள் தேவி என்று சாக்த உபாஸகர்கள் போற்றுகின்றனர்.
இன்று 23.6.2020 பஞ்சமி திதி வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்து அனைவரும் வீட்டில் விளக்கேற்றி அன்னைக்குப் பிரியமான பன்னிரு நாமங்களைச் சொல்லி வராஹி தேவியை வழிபடுவோம். உக்கிர பெண் தெய்வங்களையும் தரிசித்து வேண்டுவோம்.
வராஹி தேவியை செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவோம். வீட்டில் இருந்தபடியே வராஹிதேவியின் காயத்ரியையும் மூலமந்திரத்தையும் 108 முறை ஜபித்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம். நம்மைப் பிடித்திருக்கும் துன்பங்கள் எல்லாம் நீங்கி இன்பங்கள் பெருகட்டும் என்று மனமார வேண்டிக்கொள்வோம்.
ஸ்ரீமகாவராஹியை வணங்குபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தீய மந்திரங்களாலும் செய்வினைகளாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.