என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நவராத்திரி"
- தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிதியைக் கொடுக்க மறுத்து வரும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்.
- பூண்டு, வெங்காயம் இல்லாத உணவு மட்டுமே வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற உணவகத்தின் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் தலைவர் கி.வீரமணி தலைமையில் பெரியார் திடலில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழின சமுதாயத்தில் மிகப்பெரிய எழுச்சியையும், மாற்றத்தையும், வெற்றியையும் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை நவம்பர் 26-ந்தேதி அன்று ஈரோட்டில் சிறப்புடன் நடத்துவது. தமிழின மீனவர்களின் மீதான துயரம் தொடராமல் இருக்க, உறுதியான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
இப்பிரச்சனைக்குச் சட்ட ரீதியான முடிவினை ஏற்படுத்திட, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தி, உரிய முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டம் ஒருமனதாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
'புதிய கல்விக்கொள்கையின் அங்கமான பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க முடியும்' எனத் தெரிவித்து தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிதியைக் கொடுக்க மறுத்து வரும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்.
'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் ஒன்றிய அரசு திணிக்கும் குலக்கல்வித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிராகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. இத்திட்டத்தை கைவிடவேண்டும் என்று ஒன்றிய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
ஒன்றியத்தில் ஆளும் மைனாரிட்டி பா.ஜ.க. அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில், வரும் அக்டோபர் 7 முதல் 11 வரை பல்வேறு போட்டிகளை நடத்த ஒன்றிய அரசு சுற்றறிக்கை விடுத்து உள்ளது.
அதில், விவாதப் போட்டிக்கு அளிக்கப்பட்டு உள்ள "ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்ஷ்த் பாரத்" ஆகிய தலைப்புகள் சர்ச்சைக்குரியவை.
மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் இந்த முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. மக்கள் செலுத்தும் வரிப் பணத்தை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தர மறுக்கும் இதே பாஜக, தன்னுடைய ஆபத்தான கொள்கைத் திட்டங்களை கொண்டு செல்ல பள்ளிகளை பயன்படுத்துவது மாணவர் விரோதப் போக்காகும், வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இந்த முடிவை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை திராவிடர் கழக தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது.
'நவராத்திரி விழா' என்கிற பெயரில் ஒன்பது நாட்களுக்கு உச்சநீதிமன்ற உணவகத்தில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்றும், அது மட்டுமின்றி பூண்டு, வெங்காயம் இல்லாத உணவு மட்டுமே வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற உணவகத்தின் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இது தவறான முன்னுதாரணமாகி விடும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்குரைஞர்களின் கருத்துக்கு உரிய மதிப்பு அளித்து, உணவு கட்டுப்பாடு விதிக்கும் செயலை தடுத்து நிறுத்துமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ராம்லீலா நாடக நிகழ்ச்சியில் சுசில் கௌசிக் என்ற 45 வயது நபர் உயிரோட்டத்தோடு நடித்துக்கொண்டிருந்தார்.
- மேடையில் முட்டிபோட்டு அமர்ந்த அவர் கைகளை விரித்தவாறு இருந்தார்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு டெல்லியில் நடந்த ராம்லீலா நாடக நிகழ்ச்சியில் ராமர் வேடத்தில் நடித்தவர் மேடையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியில் விஸ்வகர்மா நகரில் ஷாதரா [Shahdara] பகுதியில் நடந்த ராம்லீலா நாடக நிகழ்ச்சியில் சுசில் கௌசிக் என்ற 45 வயது நபர் உயிரோட்டத்தோடு நடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது மேடையில் முட்டிபோட்டு அமர்ந்த அவர் கைகளை விரித்தவாறு இருந்தார். பின்னர் எழுந்து மேடையில் இரண்டு அடி முன்னே நகர்ந்த அவர் திடீரென மார்பை கையால் பிடித்துக்கொண்டு மேடைக்கு பின்புறம் சென்ற நிலையில் சுயநினைவை இழந்தார் சரிந்து விழுந்தார்.
உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ராம்லீலா என்பது புராண கதையான ராமாயணத்தை மையப்படுத்தி அரங்கேற்றமாகும் மேடை நாடகமாகும்.
बहुत दुःखद ह्रदय विदारक ???#दिल्ली के शाहदरा में रामलीला कलाकार ,राम का किरदार निभा रहे सुशील कौशिक को मंच पर अचानक से आए हार्ट अटैक से मृत्यु हो गयी l प्रभु राम उनको अपने चरणों में स्थान दे l ???ॐ शांति ????#Delhi #Ramleela #HeartAttack #ViralVideo pic.twitter.com/TJmgglfGsB
— Lata Agarwal (@_LataAga1) October 6, 2024
- உச்ச நீதிமன்ற கேண்டீனில் வெங்காயம், பூண்டு சேர்க்காத சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும்.
- இந்த அறிவிப்புக்கு வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்து உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலுக்கு கடிதம்
நவராத்திரி தொடங்கியதால் உச்ச நீதிமன்ற கேண்டீனில் இறைச்சி உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெங்காயம், பூண்டு சேர்க்காத சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்து உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் நவராத்திரி பண்டிகையை ஒட்டி காலம் காலமாக விரதம் கடைப்பிடித்து வருகின்றனர். வழக்கமாக, 9 நாட்களுக்கு விரதம் கடைப்பிடிக்கும் வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்தே உணவு எடுத்து வரும் நிலையில், முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் இந்நடைமுறையைப் பின்பற்றுவது தவறான முன்னுதாரணம் என அதிருப்தி தெரிவித்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
- உண்மையான இந்து இதை மறுக்க மாட்டார்கள்.
- பந்தலுக்குள் நுழையும் முன் நிச்சயம் கோமியம் குடிப்பார்கள்.
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி, நவராத்திரி பண்டிகையின் போது கர்பா நடன கொண்டாட்டத்தில் அனுமதிக்கும் முன் இந்துக்களுக்கு கோமியம் கொடுக்க வேண்டும் என்று அமைப்பாளர்களை வலியுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோமியம் குடிக்க செய்யும் முறை "ஆச்மான்" என்று அழைக்கப்படுகிறது. இந்த நடைமுறையை அறிவித்த பாஜக மாவட்டத் தலைவர் சிந்து வர்மா செய்தியாளர்களிடம் பேசும் போது, "சனாதன கலாச்சாரத்தில் ஆச்மன் நடைமுறைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. இதனால் அமைப்பாளர்களிடம் கர்பா பந்தல் கொண்டாட்டத்திற்கு அனுமதிக்கும் முன் பக்தர்களுக்கு கோமியம் கொடுக்க அமைப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.
மேலும், "ஆதார் கார்டை எடிட் செய்யலாம். எனினும், ஒருவர் இந்து என்றால், அவர் கர்பா நடன பந்தலுக்குள் நுழையும் முன் நிச்சயம் கோமியம் குடிப்பார்கள். உண்மையான இந்து இதை மறுக்க மாட்டார்கள்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பசுக் காப்பகங்களின் அவலநிலை குறித்து பாஜக தலைவர்கள் மௌனம் சாதிப்பதாகவும், இந்த விவகாரத்தை அரசியலாக்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீலப் சுக்லா குற்றம் சாட்டியுள்ளார்.
"கோமியம் ஆச்சர்ய கோரிக்கையை எழுப்புவதன் மூலம் பா.ஜ.க. பிளவுப்படுத்தும் அரசியல் செய்வதற்கு புதிய தந்திரமாக கையில் எடுத்துள்ளது," என்று அவர் கூறியுள்ளார். மேலும் பா.ஜ.க. தலைவர்கள் பந்தல்களுக்குள் நுழைவதற்கு முன்பு கோமியத்தை உறிஞ்சி சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
- புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.
- அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியான காரணமும் உண்டு.
நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர்.
இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார்.
புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.
அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.
இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள்.
புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர்.
(சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு)கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம்.
அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.
- வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள்.
- இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் விழா எடுக்கிறோம்.
இதற்கு காரணம் உண்டு. வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம்.
பணமிருந்தால் போதுமா? அதைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமே! அதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம்.
பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா! அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டுமே! அதற்குத்தான் கல்வி.
ஆக, காரண காரியங்க ளுடன் வகுக்கப்பட்டது நவராத்திரி பூஜை முறை.
- மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது.
- பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். திருடர்களால் பயமில்லை.
நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடியும்.
இதில் குறிப்பாக அஷ்டமி (நவராத்திரியின் எட்டாம் நாள்) நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை.
மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது.
பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். திருடர்களால் பயமில்லை.
நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் இருந்தால் ஓடிப்போய் விடும். அம்மை நோய் வராது என்பது மிகவும் முக்கியம்.
நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை நீங்கள் வாசிக்கலாம்.
- நிஜத்தில், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே.
- ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நிஜத்தில், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே. ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.
பிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா
மகேஸ்வரி- சிவன்
கவுமாரி- குமரன் (முருகன்)
வைஷ்ணவி- விஷ்ணு
வராஹி- ஹரி (வராக அவதாரம்)
நரசிம்மி- நரசிம்மர்
இந்திராணி- இந்திரன்.
இதிலிருந்து, நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.
- நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும்,
- அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.
தேவியரின் வாகனம்
இந்திராணி - யானை
வைஷ்ணவி - கருடன்
மகேஸ்வரி - ரிஷபம்
கவுமாரி - மயில்
வராகி - எருமை
அபிராமி - அன்னம்
நரசிம்மி - சிங்கம்
சாமுண்டி - பூதம்
அம்பாளை வணங்குவதன் பலன்
அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.
இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன.
இந்தப் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்
ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்
ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.
ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம்
விலகும், போரில் வெற்றி கிடைக்கும்,
மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.
ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்
ஜெய் ரோகிணி- நோய் தீரும்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.
கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.
- நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான்.
- அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.
உயிரைக் காக்கும் நவராத்திரி
நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான்.
அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.
அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.
இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு.
இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும். இந்த மாதங்களில் உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும். அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும்.
இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும், என்றார்.
இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.
வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி.
கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது.
இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.
மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.
- ஏனென்றால் தட்சனின் யாகத்தை அழித்த பத்ரகாளி அஷ்டமி தினத்தன்று தோன்றினார்.
- எனவே அன்று பூஜைகளை விசேஷமாகச் செய்ய வேண்டும்.
ஒருவருக்கு நவராத்திரி நாட்களில் பூஜை நடத்துவதற்குப் போதிய வசதி இல்லாமலிருந்தால் அவர் நவராத்திரி எட்டாவது தினமான அஷ்டமி தினம் அவசியம் பூஜிக்க வேண்டும்.
ஏனென்றால் தட்சனின் யாகத்தை அழித்த பத்ரகாளி அஷ்டமி தினத்தன்று தோன்றினார்.
எனவே அன்று பூஜைகளை விசேஷமாகச் செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்ல கம்சனை அழிக்க கிருஷ்ணன் அவதரித்த அதே அஷ்டமி தினத்தன்று தான் மகா மாயையான துர்க்கையும் நந்தகோபாலன் இல்லத்தில் அவதரித்தாள்.
ஆகவே துர்க்காஷ்டமி மிகுந்த விசேஷமுடையது.
சக்தியற்றவர்களாக இருப்போர் நவராத்திரி விரதத்தில் பூஜை செய்வதற்கு மிகவும் முக்கியமான நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும்.
இந்த மூன்று நாட்களும் விரதத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும்.
நவராத்திரி விரதம் இருப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நல்ல பயன் அடைவார்கள்.
- ஏழு நகரங்களில் மக்களுடன், விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து, நவராத்திரி கொண்டாட்ட விழாவைக் கொண்டாடியுள்ளனர்.
- 2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக இந்த விழா நடந்துள்ளது.
முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி, நவராத்திரி விழாவைப் புதுமையான முறையில் தமிழக மக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளது. தமிழ்நாடு எங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன், விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து, நவராத்திரி கொண்டாட்ட விழாவைக் கொண்டாடியுள்ளனர். 2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக இந்த விழா நடந்துள்ளது.
பொதுமக்கள் கலந்துகொள்ள திருவிளக்கு பூஜை, சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப்பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் என பல்வேறு நிகழ்வுகள் மூலம் அசத்தியுள்ளது விஜய் டிவி.
தமிழ் நாட்டில், காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடினர். இவர்களுடன் ஸ்டார் விஜய் முன்னணி பிரபலங்கள் பலரும் இவ்விழாவினில் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்