என் மலர்
நீங்கள் தேடியது "Slogam"
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் எட்டாம் நாளான மகாகௌரி வணங்கப்படுகிறது. துர்கா தேவியின் எட்டாவது அம்சமான மகாகௌரி தேவியை தியானிக்கவும், அவளுடைய நற்கருணையைப் பெறவும் உதவுகிறது.
மந்திரம்:
*ஸ்வேத விருஷப சமாருத ஷ்வேதாம்பர தாரா ஷுச்சின் மகாகௌரி சுபம் தத்யான் மகாதேவ பிரமோததா.
இந்த மந்திரத்தை உச்சரிப்பது, எதிர்மறைகளை நீக்கி, உள் அமைதியைப்பெறவும், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி போன்ற நன்மைகளைப் பெறவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் ஏழாம் நாளான இன்று, துர்கா தேவியின் காலராத்திரி தேவி வடிவத்தை வழிபடும் நாளாகும்.
காலராத்திரி தேவிக்கு உரிய மந்திரம்:
"ஓம் மஹா மந்த்ராய வித்மஹே வராஹி மனோகராய தீமஹி தன்னோ உன்மத்தபைரவ ப்ரசோதயாத்"
கலாரத்ரா மந்திரம் என்பது கால பைரவர் அல்லது சிவனின் காலாதீத ரூபத்தைப் போற்றும் மந்திரமாகும். இந்த மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் வாழ்வில் பல நன்மைகளைப் பெறலாம்.
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் நான்காம் நாள், துர்கா தேவியின் கூஷ்மாண்டா வடிவத்தை வழிபடும் நாளாகும்.
கூஷ்மாண்டா தேவிக்கான முக்கிய மந்திரம்:
ஸ்ரீ தேவி கூஷ்மாண்டாயை நமஹ.
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்தால் சக்தி, படைப்பாற்றல் மற்றும் நிறைவான வாழ்வு கிட்டும் என்று நம்பப்படுகிறது.
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
அதன்படி, நவராத்திரியின் 3ம் நாளான இன்று சந்திரகாந்தா தேவியை வழிப்படுகிறது.
சந்திரகாந்தா மந்திரம் என்பது நவதுர்கைகளில் மூன்றாவதான சந்திரகாந்தா தேவியை துதிக்கும் சக்திவாய்ந்த மந்திரங்களாகும்.
சந்திரகாந்தா தேவிக்கு உகந்த மந்திரங்கள் குறித்து பார்க்கலாம்..
மந்திரங்கள்:
*ஓம் தேவி சந்திரகாந்தாயை நமஹ.
* பிண்டஜ ப்ரவராரூடா சண்டகோபாஸ்த்ரகைர்யுதா பிரசாதம் தனுதே மஹ்யம் சந்திரகந்தேதி விஸ்ருதா
* யா தேவி சர்வபூதேஷு மாம் சந்திரகண்ட ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
விளக்கம்:
இந்த மந்திரம், துர்காதேவியின் ஒரு வடிவமான சந்திரகாந்தா தேவியை சரணடைவதாகவும், அவளுடைய அருள், தைரியம், பாதுகாப்பு, மற்றும் தடைகளை நீக்கும் வலிமையைக் கோருவதாகவும் பொருள்படும்.
இந்த மந்திரங்கள் தேவியின் அருளைப் பெறவும், தடைகளை நீக்கவும், ஞானம் மற்றும் பலத்தை பெறவும் உச்சரிக்கப்படுகின்றன.
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- துர்கையின் இரண்டாம் வடிவமான பிரம்மசாரிணி தேவியை வணங்குவதாகும்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபடப்படுகிறது.
இதில், நவராத்திரியின் இரண்டாம் நாளில் துர்கையின் இரண்டாம் வடிவமான பிரம்மசாரிணி தேவியை வணங்குவதாகும்.
பிரம்மசாரிணி தேவிக்கு உரிய மந்திரம்:
ஓம் தேவி பிரம்மச்சாரிணியை நமஹ.
விளக்கம்: ஓம் பிரம்மசாரிணி தேவிக்கு வணக்கம்.
இந்த மந்திரத்தின் மூலம் ஒழுக்கம், மன உறுதி மற்றும் பக்தியை வளர்த்துக் கொள்ளலாம்.
- உபதேசம் செய்தவரும் சாதாரணமானவர் அல்ல.
- உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல.
அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்.
இதை உபதேசித்தவர்-கயக்ரீவர். உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர்.
உபதேசம் செய்தவரும் சாதாரணமானவர் அல்ல.
உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல.
பிரம்மதேவரிவம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு
ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். ஞானத்தின் வடிவமே கயக்ரீவர்.
அப்படிப்பட்டவர், லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார்.
உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள்.
அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது.
அப்போது சிவபெருமான் அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்ப, பூமி சமநிலை பெற்றது.
இந்தக் கதை அனைவருக்குமே தெரிந்தது தான்.
ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான் முதல் தேவர்கள் வரை அனைவரும் ஒரு பக்கம் இருக்க அகஸ்தியர் மட்டும் தென்திசை போனார்.
அதனால் பூமி சமநிலை ஆனது என்றால் என்ன பொருள்? அந்தப் பக்கம் இருந்த அவ்வளவு பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் என்பதுதானே இதன் பொருள்?
அதாவது, அனைத்து தெய்வங்களுக்கும் சமமானவர் அகத்தியர்.
அப்படிப்பட்ட மகாபுருஷர் லலிதா சகஸ்ர நாமத்தை உபதேசம் பெற்றிருக்கிறார்.
ஞானத்தின் வடிவமான கயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகஸ்தியர்
கேட்டிருக்கிறார் என்றால், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக மேன்மையானதாக இருக்க வேண்டும்.
பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், சரிதமும் கூறப் படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா சகஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது.
கயக்ரீவர் என்ற மகரிஷி (விஷ்ணு அவதாரமாகக் கூறப் படுவதும் உண்டு) அகஸ்திய மகரிஷிக்கு உபதேசம்
செய்வதாக 183 சுலோகங்கள் அடங்கிய இந்த நூல் அமைக்கப் பட்டுள்ளது. அகத்தியரும், அவரது மனைவி
லோபாமுத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப் படுபவர்கள்.
- தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி.
- நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள்.
தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி.
நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள்.
இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா சகஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வந்து விடுகிறது.
சிதக்ஞுனிகுண்டஞு சம்பூ தா அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவள்,
ராகஞுஸ்வரூப பாசா'ட்யா ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவள்,
க்ரோதாகார அங்குசோ'ஜ்வலா தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிர்பவள்,
மனோரூப இட கோதண்டாஞு மனமாகிய கரும்புவில்லை உடையவள், பஞ்சதன்மாத்ர சாயகா ஐந்து புலன்களாலும்
உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும்,
ஐந்து மலர்க்கணைகளாக கொண்டவள்.
பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளும், பின் தனது அங்குசத்தால் அதனை வெட்டி எறிபவளும் அவளே.
மனமாகிய வில்லில் ஐம்புலன்களாகிய மலர்க்கணைகளைப் பொருத்தி தேவி பிரபஞ்ச விளையாட்டு விளையாடுகிறாள்.
- தத்துவங்களின் பெருவொளியாக லலிதா சகஸ்ரநாமம் இருக்கிறது.
- மொழியின் சாத்தியங்களை மீறி ஒரு ஆன்மிகப் பெருவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.
ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் தூய அத்வைத நிலையில் இருந்தே பாடப் பட்டது என்பது இந்த நாமங்களின் பெருங்கடலின்
ஒரு துளியை அள்ளிப் பருகினாலே தெரிய வரும் விஷயம்.
நிர்த்ஞுவைதா த்வைதம் எனப்படும் இருமை நோக்கை நீக்குபவள், த்ஞுவைத-வர்ஜிதா இயல்பாகவே இருமை நிலை
இல்லாதவள், சாமரஸ்ய பராயணா - சமரசத்தில் நிலைபெற்றவள் என்பனவும் அன்னையின் திருநாமங்களே.
இந்த அடிப்படையான சமரச பாவத்துடனேயே ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தை நாம் பாராயணம் செய்யவும், தியானம் செய்யவும் வேண்டும்.
அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும்
தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் எல்லாம் அன்னையின்
உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்.
தத்துவங்களே அன்னையின் இருக்கைகளாகவும் (தத்வாஸனா), காற்சிலம்பின் மணிகளாகவும், கையில் ஏந்தி
விளையாடும் பூக்களாகவும், மகா காளிக் கோலத்தில் அவள் அணியும் மண்டையோட்டு மாலைகளாகவும் ஆகிவிடுகின்றன!
அதுவே லலிதா சகஸ்ரநாமம் அளிக்கும் பரவச அனுபவம்.
இந்த துதியைப் பொருள் உணர்ந்து படிக்கும் போதும், தியானிக்கும் போதும் தர்க்க மனத்தின் எல்லைகளுக்கு அப்பால் அது சுழன்றடித்துச் செல்கிறது.
பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதோவொரு நாமம் நம் மனதில் ரீங்கரித்து
மொழியின் சாத்தியங்களை மீறி ஒரு ஆன்மிகப் பெருவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.
தத்துவங்களின் பெருவொளியாக லலிதா சகஸ்ரநாமம் இருக்கிறது.
- பவுர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும்.
- இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள்.
பவுர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும்.
பூத பிசாச உபாதைகள் விலகும்.
இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள்.
எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள்.
அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.
இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.
ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.
கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும்.
தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது" என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில்
ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.
லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்
அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.
எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள்,
எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.
- அன்றாடம் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்வதால் எல்லா நலன்களையும் அடையலாம்.
- சகல ஐஸ்வர்யத்தின் நிலையான இருப்பிடமாகவே எப்போதும் விளங்குகிறாள்.
ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தை அன்றாடம் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்வதால் எல்லா நலன்களையும் அடையலாம்.
லலிதா என்பதற்கு மென்மையான என்று பொருள். லலிதா என்றால் மென்மையானவள் என்றும் சுலப மானவள் என்றும் அர்த்தம்.
ஸ்ரீ ஐஸ்வர்யத்தின் அறிகுறி.
ஆகவே ஸ்ரீ லலிதா என்று அழைக்கப்படும்.
அந்த தெய்வம் மென்மையானவள் என்பதுடன் சகல ஐஸ்வர்யத்தின் நிலையான இருப்பிடமாகவே எப்போதும் விளங்குகிறாள்.
- நோய்களை அகற்றி ஆயுளைத் தரும் என்று கல்பங்கள் கூறுகின்றன.
- கலசதீர்த்தத்தில் ஜபித்து அதை அபிஷேகம் செய்தால் கிரஹ பீடைகளும், ஆபசார தோஷங்களும் நீங்கும்.
லலிதா சகஸ்ரநாமத்தை தினமும் சொல்லி வந்தால் ஆத்ம ஞானம் பெறலாம் என்று ஹயக்ரீவர் கூறியுள்ளார்.
அகத்தியருக்கு லலிதா சகரஸ் நாமத்தை சொல்லும் போது அவர் இந்த தகவலை கூறினார். அவர் கூறி இருப்பதாவது:
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் தேவிக்கு மிகப் பிரியமானது.
காலைக்கடன் முடித்து, ஸ்ரீசக்ரத்தைப் பூஜித்து, மூல மந்திரத்தை ஜபித்துத் தினந்தோறும் ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வது எல்லா நன்மைகளையும் அளிக்கும்.
நோய்களை அகற்றி ஆயுளைத் தரும் என்று கல்பங்கள் கூறுகின்றன.
ஜ்வரம் உள்ளவன் தலையைத் தொட்டுப் பாராயணம் செய்தால் ஜ்வரம் அகலும். விபூதியை ஜபித்து இட்டால் நோய்கள் நீங்கும்.
கலசதீர்த்தத்தில் ஜபித்து அதை அபிஷேகம் செய்தால் கிரஹ பீடைகளும், ஆபசார தோஷங்களும் நீங்கும்.
ஸ்ரீவித்தைக்குச் சமமான மந்திரமும், ஸ்ரீ லலிதாவிற்குச் சமமான தேவதையும், ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்திற்குச் சமமான ஸஹஸ்ர நாமமும் கிடையாது.
ஸ்ரீ சக்கரத்தை ஆயிரம் நாமங்களால் தாமரை, துளசிப்பூ, செங்கழுநீர்ப்பூ, கதம்பம், சம்பகம், ஜாதி, மல்லிகை, அலரி, நெய்தல், பில்வம், முல்லை, குங்குமப்பூ, பாடலி, தாழை, வாஸந்தி முதலிய புஷ்பங்களாலும், பில்வ பத்திரத்தாலும், ஒன்றாலோ, பலவற்றாலோ அர்ச்சிக்க வேண்டும்.
நவராத்திரி மஹா நவமியிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஆசையுடன் அர்ச்சிப்பவர் அம்பிகையின் அருளை
விரைவில் பெற்று ஆசைகளின் பூர்த்தி எய்துவர். ஆசையின்றிப் பாராயணம் செய்பவர் ஆத்ம ஞானம் பெற்றுப் பேரின்பமடைவர்.
- அகத்தியருடைய குருவான ஹயக்ரீவர் லலிதா சகஸ்ரத்தை யாருக்கும் சொல்லலாம் எனக் கூறி உள்ளார்.
- தேவியிடம் பக்தியில்லாதவனுக்கு இந்த தோத்திரத்தை சொல்லக்கூடாது.
அகத்தியருடைய குருவான ஹயக்ரீவர் லலிதா சகஸ்ரத்தை யாருக்கும் சொல்லலாம் எனக் கூறி உள்ளார்.
தேவியிடம் பக்தியில்லாதவனுக்கு இந்த தோத்திரத்தை சொல்லக்கூடாது.
குருவை மிஞ்சியவனாக தலைக்கனத்துடன் பேசுபவன், குரு சொல்லும் போதே எல்லாம் எனக்கு
முன்பே தெரியும் என்பவன், இதை இன்னும் நன்கு விளக்கி இருக்கலாம், நீர் சொல்வது எதுவுமே எனக்குப் புரியவில்லை
என்று இப்படிச் சொல்வது சீடனுக்கு உபதேசிப்பது, மகா பாவம்.
இவர்களுக்குச் சொல்ல வேண்டாம் என்ற ஹயக்ரீவர் கூறியுள்ளார்.