search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Navarathri Festival"

  • உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்.
  • நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம்.

  நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம்.

  உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்.

  தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே,

  அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது.

  நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி

  சிவசக்தியாக ஐக்கிய ரூபிணியாக அர்த்த நாரீசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.

  இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும்.

  முதல் மூன்று நாட்கள் மகேஸ்வரி கவுமாரி, வராஹி என துர்காதேவியாகவும், அடுத்த மூன்று நாட்களில் மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என லட்சுமி தேவியாகவும்,

  நிறைவுறும் மூன்று தினங்களில் சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து வணங்குவது நல்லது.

  இந்த நாட்களில் நைவேத்யங்களைப் படைத்து கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை

  பாடி, ஆடி பரவசமுடன் வணங்குவோருக்கு கேட்ட வரத்தை சக்தியானவள் கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.


  • அரசலாறு ஆற்றங்கரையில் சரஸ்வதிக்கு கோவில் உள்ளது.
  • தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

  திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊர் அருகே கூத்தனூர் என்னும் கிராமத்தில்

  அரசலாறு ஆற்றங்கரையில் சரஸ்வதிக்கு கோவில் உள்ளது.

  இந்த ஆலயத்தில் சரஸ்வதி தேவி நான்கு திருக்கரங்களுடனும், அருள் ஞானமுத்திரை ஆகியவற்றுடனும்

  தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

  இங்கு சரஸ்வதி பூஜை நாளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

  அந்நாளில் பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

  கூத்தனூரில் ஆரம்பித்து ருத்ர கங்கை வரையிலான சுமார் இரண்டரை கிலோ மீட்டர் வரை வியாபித்துள்ள

  அரசலாற்றுக் கரையில் தர்ப்பணம் மற்றும் பித்ரு காரியங்கள் செய்வது மிகச் சிறப்பானதாகும்.

  இங்கு தர்ப்பணம் செய்யவும், குழந்தைகள் கல்வி மேன்மைக்கு வழிபாடு செய்யவும்,

  அவரவர் பாப கர்ம வினையிலிருந்து விடுபடவும் திரிவேணி சங்கம நீராடலுக்கும்,

  கணவன் மனைவி பிரிவிலிருந்து மீளவும் இது மிகச்சிறந்த பிராத்தனைத்தலம் என்று தலபுராணம் கூறுகிறது.

  மேலும் கம்பர் காலத்தில் அவைப்புலவர்களில் ஒருவராக இருந்த ஒட்டக்கூத்தர் கட்டிய கோவில் இது எனவும்

  இக்காரணம் தொட்டே இது கூத்தனுர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுவதுண்டு.

  இங்கு குடியிருக்கும் சரஸ்வதி தேவி பேச முடியாதவரையும் பேச வைக்கும் அருள் உள்ளம் கொண்டவள்.

  வாக்கு வன்மை யும் காவியம் இயற்றும், புலமையும் தருபவள்.

  நவராத்திரியின் போது பக்தர்கள் அம்மனைத் தொட்டு மலர்களால் அர்ச்சனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

  • சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
  • செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும்.

  சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.

  அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபாடு செய்ய இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.

  சந்தனம், தெளித்து குங்குமம் இட வேண்டும்.

  சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இட்டும்,

  படத்திற்கு பூக்கள் வைத்தும் அலங்கரிக்க வேண்டும்.

  அன்னையின் திருவுருவின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழை இலை விரித்து

  அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும்.

  சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைக்கலாம்.

  வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும்.

  செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும்.

  இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும்.

  எதற்கும் விநாயகரே முழு முதலானவர், எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து,

  "சுக்லாம் பரதரம் விஷ்ணும் சஸிவர்ணம் சதுர்புஜம்! ப்ரசந்த வதனம் தீயாயேத் சர்வ விக்நோப சாந்தயே"

  என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.

  சரஸ்வதி பூஜையின் போது "துர்க்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம" என்று கூறி பூஜையை ஆரம்பிப்பது நன்று.

  பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம்.

  கலசம் வைத்து அம்பிகையை முறைப்படி எழுந்தருள செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.

  பூஜையின் போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம்.

  சகலகலாவல்லி மாலை பாடல்களை பாராயணம் செய்யலாம்.

  நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள்

  சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும்.

  • பாராயணம் துதிகளில் மங்கள சண்டிகை துதி மகிமை வாய்ந்தது.
  • இதனை நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமி நாளில் படிப்பது மிகவும் சிறப்பு.

  பாராயணம் துதிகளில் மங்கள சண்டிகை துதி மகிமை வாய்ந்தது.

  இதனை நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமி நாளில் படிப்பது மிகவும் சிறப்பு.

  செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், பவுர்ணமி நாளிலும் கூட இதைப் பாராயணம் செய்வதால் நன்மை உண்டாகும்.

  அம்பிகையிடம் ஏதாவது கோரிக்கை வைத்து, அது நிறைவேற தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை படிப்பதும் வழக்கம்

  மிகவும் சிறப்பு வாய்ந்த அந்த மங்கள சண்டிகை துதி வருமாறு:

  ரட்ச ரட்ச ஜகன் மாதா

  சர்வ சக்தி ஜெய துர்கா

  ரட்ச ரட்ச ஜகன் மாதா

  சர்வ சக்தி ஜெய துர்கா

  மங்கள வாரம் சொல்லிட வேண்டும்.

  மங்கள கன்னிகை ஸ்லோகம்

  இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும்.

  படைப்பவள் அவளே

  காப்பவள் அவளே

  அழிப்பவள் அவளே சக்தி

  அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே

  அடைக்கலம் அவளே சக்தி

  ஜயஜயசங்கரி கவுரி மனோகரி

  அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி

  சிவ சிவ சங்கரி சக்தி மகேஸ்வரி

  திருவருள் தருவாள் தேவி

  கருணையில் கங்கை

  கண்ணனின் கங்கை

  கடைக்கண் திறந்தால் போதும்

  வருவினை தீரும், பழவினை ஓடும்

  அருள் மழை பொழிபவள் நாளும்

  நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்

  காளி எனத் திரிசூலம் எடுத்தவள்

  பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள்

  நாமம் சொன்னால் நன்மை தருபவள்!

  நாமம் சொன்னால் நன்மை தருபவள்!!

  • அன்று முதல், கணக்கை எழுதிய சிவன் “எழுத்தறிநாதர்“ என்ற பெயர் பெற்றார்.
  • பேரேட்டில் எழுதி இருந்த எழுத்துக்கள் யாவும் முத்து முத்தாக இருந்தன.

  விஜயதசமியைக் கல்வித் திருவிழாவாக கொண்டாடுகிறோம்.

  பல குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக இருக்கவும், கையெழுத்து திருந்தவும்

  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவிலுக்கு அழைத்து செல்லலாம்.

  இப்பகுதியை ஆட்சி செய்த ஒரு அரசர் தனது கணக்கு பிள்ளையை கோவில் கணக்குகளை எடுத்து வருமாறு பணித்தார்.

  அந்நேரத்தில் அவர் கணக்கை சரிவர எழுதி முடிக்கவில்லை.

  எப்படி கணக்கை முடித்துக் கொடுப்பது என்று தெரியாமல் விழித்தபடியே சன்னதியில் இருக்கும் சிவபெருமானை வழிபட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பிச் சென்றார்.

  ஆனால் மறுநாள் காலையில் அரசர் கணக்கு பிள்ளையை அரண்மனைக்கு அழைத்து பாராட்டினார்.

  கணக்கு பிள்ளைக்கோ எதுவும் புரியவில்லை.

  இதுவரை பார்த்த கோவில் கணக்குகளிலேயே நீங்கள் சமர்ப்பித்த கணக்குதான் மிகச் சரியாக இருந்தது என்று சொன்னார் அரசர்.

  கணக்குப்பிள்ளை கணக்குப் பேரேட்டை வாங்கிப் பார்த்தார்.

  பேரேட்டில் எழுதி இருந்த எழுத்துக்கள் யாவும் முத்து முத்தாக இருந்தன.

  சிவபெருமானே தன்னைப் போல அரசரிடம் வந்து கணக்கை காட்டிய உண்மையை உணர்ந்தார் கணக்கர்.

  இந்த உண்மையை அரசரிடம் தெரிவித்ததோடு கோவிலுக்கு சென்று சிவனை வணங்கி நின்றார்.

  அன்று முதல், கணக்கை எழுதிய சிவன் "எழுத்தறிநாதர்" என்ற பெயர் பெற்றார்.

  ஆரம்ப பள்ளிகளுக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு நாக்கில் நெல்லாலும், படிக்கிற குழந்தைகளுக்கு பூவாலும் நாக்கில் எழுதுகிறார்கள்.

  தினமும் இந்த வழிபாடு இக்கோவிலில் நடக்கிறது.

  பேச்சு சரியாக வராத குழந்தைகளுக்கும், பேசத் தயங்கும் குழந்தைகளுக்கும் இங்கு அர்ச்சனை செய்தால் நன்கு பேசும் திறன் உண்டாகிறது.

  • ஆறாம் நாள்: செம்பருத்தி மற்றும் சிவந்த நிறமுள்ள மலர்கள்.
  • ஒன்பதாம் நாள்: செந்தாமரை மற்றும் வெண்தாமரை மலர்கள்.

  ஒவ்வொரு அம்பிகைக்கும் உகந்த மலர்கள் உள்ளன.

  அவற்றைத் தேர்ந்தெடுத்து பூஜித்தல் அவசியம்.

  முதல் நாள்: வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை மலர்களால் மகேஸ்வரியை அர்ச்சிக்க வேண்டும்.

  இரண்டாம் நாள்: மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்வது நலம் பயக்கும்.

  மூன்றாம் நாள்: மருக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

  நான்காம் நாள்: ஜாதிமல்லி மற்றும் மணமுள்ள மலர்களால் அர்ச்சனை செய்யவும்.

  ஐந்தாம் நாள்: முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது உகந்தது.

  ஆறாம் நாள்: செம்பருத்தி மற்றும் சிவந்த நிறமுள்ள மலர்கள்.

  ஏழாம் நாள்: மல்லிகை, முல்லை போன்ற சுகந்த மணமுள்ள மலர்களால் அர்ச்சிப்பது விசேஷம்.

  எட்டாம் நாள்: ரோஜா போன்ற சுகந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.

  ஒன்பதாம் நாள்: செந்தாமரை மற்றும் வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் வளம் பெருகும்.

  • பல குழந்தைகளின் வித்யாரம்பம் இன்று தான் ஆரம்பம்.
  • இன்று தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம்.

  ஒன்பது நாள்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள்.

  இந்நாளே விஜயதசமி வெற்றி தருகிற பத்தாம் நாள்.

  பல குழந்தைகளின் வித்யாரம்பம் இன்று தான் ஆரம்பம்.

  இன்று தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம்.

  நவராத்திரி பத்து நாட்களும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் சப்தமி, மகா அஷ்டமி, மகா நவமி ஆகிய

  மூன்று நாட்களில் மட்டுமாவது (7, 8, 9) தேவி வழிபாடு செய்யலாம்.

  அதுவும் முடியாதவர்கள் மகா அஷ்டமி 8ம் நாள் அன்று நிச்சயம் தேவி வழிபாடு செய்ய வேண்டும்.

  • சரஸ்வதியை “ஆற்றங்கரை சொற்கிழத்தி” என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன
  • அமைதிப்பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரமபிரியை.

  சரஸ்வதி வைரத்தின் அழகு.

  அமைதிப்பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரமபிரியை.

  ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள்.

  சரஸ்வதியை "ஆற்றங்கரை சொற்கிழத்தி" என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.

  இவளுக்குத் தனிக் கோவில் இருக்கும் ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள கூத்தனூர்.

  அஷ்ட சரஸ்வதிகள்

  1. வாகீஸ்வரி, 2. சித்ரேஸ்வரி, 3. துளஜா, 4, கீர்த்தீஸ்வரி, 5. அந்தரிட்ச சரஸ்வதி, 6. கட சரஸ்வதி, 7. நீல சரஸ்வதி, 8. கினி சரஸ்வதி.

  கடைசி மூன்று நாள் நிவேதன வினியோகம்:

  7. எலுமிச்சை சாதம், 8. பாயாசம், 9. அக்கார அடிசில்.

  • லட்சுமி மலரின் அழகு. அருள்பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.
  • முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.

  லட்சுமி மலரின் அழகு. அருள்பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.

  செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி என்றும் அழைப்பதுண்டு.

  லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள்; பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள்.

  இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகின்றன.

  முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.

  இவளுக்குத் தனிக்கோயில் இருக்குமிடம் திருப்பதியில் உள்ள திருச்சானூர்.

  அஷ்ட லட்சுமிகள்

  1. ஆதிலட்சுமி, 2, மகாலட்சுமி, 3. தனலட்சுமி, 4. தானியலட்சுமி, 5. சந்தானலட்சுமி, 6. வீரலட்சுமி, 7. விஜயலட்சுமி, 8. கஜலட்சுமி இவர்கள் லட்சுமியின் அம்சங்கள்.

  இடை மூன்று நாள் நிவேதன வினியோகம்.

  4. கதம்ப அன்னம், 5. தயிர் சாதம், 6. தேங்காய் சாதம்.

  • வீரத்தின் தெய்வம், சிவ பிரியை, இச்சா சக்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள்.
  • வீரர்களின் போரின் தொடக்கத்திலும், முடிவிலும் துர்க்கையை வழிபடுவார்கள்.

  துர்க்கை நெருப்பின் அழகு.

  ஆவேசப்பார்வையுடன் அழகாகத் திகழ்கிறாள்.

  வீரத்தின் தெய்வம், சிவ பிரியை, இச்சா சக்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள்.

  இவளைக் "கொற்றவை" என்றும், "காளி" என்றும் குறிப்பிடுவார்கள்.

  வீரர்களின் போரின் தொடக்கத்திலும், முடிவிலும் துர்க்கையை வழிபடுவார்கள்.

  மகிஷன் என்ற எருது வடிவம் கொண்ட அசுரனுடன் துர்க்கை ஒன்பது இரவுகள் போரிட்டாள்.

  இவையே "நவராத்திரி" எனப்படுகின்றன.

  அவனை வதைத்த பத்தாம் நாள் "விஜயதசமி"

  மகிஷனை வதைத்தவள் "மகிஷாசுரமர்த்தினி"

  மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில் சிற்ப வடிவத்தில் இருக்கிறது.

  நவ துர்க்கை

  1. வன துர்க்கை, 2. சூலினி துர்க்கை, 3. ஜாதவேதோ துர்க்கை, 4. ஜ்வாலா துர்க்கை, 5. சாந்தி துர்க்கை, 6. சபரி துர்க்கை, 7. தீப துர்க்கை, 8. ஆசுரி துர்க்கை, 9. லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

  முதல் மூன்று நாள் நிவேதன வினியோகம் :

  1. வெண் பொங்கல், 2. புளியோதரை, 3. சர்க்கரை பொங்கல்.

  • உலகில் அனைத்தையும் இயக்குவது ஆதிசக்தியே என்று வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன.
  • வித விதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும்.

  நவராத்திரியில் சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து,

  அவர்களை தேவியாகவே கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திற்கு

  தேவையான பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப அளித்து மகிழலாம்.

  இந்த நாட்களில் கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன்

  வித விதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும்.

  பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும்.

  பெண்கள், சிறுவர் , சிறுமிகளின் கோலாட்டம், கும்மியடித்து நடனமாடுதல் போன்றவை

  நவராத்திரி பண்டிகைக்கே உரிய சிறப்பாகும்.

  இந்த உலகில் அனைத்தையும் இயக்குவது ஆதிசக்தியே என்று வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன.

  அதன் அடிப்படையிலேயே பராசக்தியை நவராத்திரி நாட்களில் வழிபடுகிறோம்.

  தவிர, உ