search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நவராத்திரி திருவிழா
    X

    நவராத்திரி திருவிழா

    • உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்கையாகத் தோன்றினாள்.
    • பின்னர் துர்க்கா தேவி தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள்.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மகிஷாசுரன் என்னும் கொடூரமான அரக்கன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

    அவன் பராசக்தியை நோக்கி தவம் இருந்து அன்னையிடம் ஆற்றல்மிகு பல வரங்களைப் பெற்றான்.

    மகிஷாசுரன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமை செய்தான்.

    தேவர்களும் & முனிவர்களும் பார்வதியை நோக்கி தவம் புரிந்தனர்.

    பார்வதி தேவியும் அவர்களுக்கு காட்சி அளித்தாள்.

    அவர்களின் குறைகளைக் களைய கருணை உள்ளம் கொண்டாள்.

    தகுதியற்ற ஒரு அரக்கனுக்கு தேவையற்ற வரங்களை வழங்கிவிட்டோம் என்று வருந்தினாள்.

    ஒரு முறை வழங்கி விட்ட வரங்களைத் திருப்பிப் பெறுதல் மரபன்று.

    இருப்பினும் தர்மத்தின் பொருட்டு தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தாள்.

    உடனே பார்வதிதேவி, லலிதை என்னும் காமேஸ்வரியாக அவதாரம் எடுத்து ஈஸ்வரனைத் திருமணம் புரிந்து கொண்டாள்.

    ஈசனிடம் அஸ்திரங்களைப் பெற்று மகிஷாசுரனை எதிர்த்து போருக்கு புறப்பட்டாள்.

    மகிஷாசுரன் இதனை அறிந்து அன்னையை எதிர்க்க தனது தம்பிமார்களான விசக்கனையும், விஷக்கரனையும் ஏவினான்.

    உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்கையாகத் தோன்றினாள்.

    அந்த இரு அசுரர்களையும் விழுங்கினாள்.

    பின்னர் துர்க்கா தேவி தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள்.

    மகிஷாசுரன் எவ்வளவோ சாமர்த்தியமாக மாயா ஜாலத்துடன் போர் புரிந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    இதனால் அதிர்ச்சியில் உறைந்தான்.

    ஆக்ரோஷத்துடன் எழுந்த துர்க்காதேவி மகிஷாசுரனின் தலையைத் துண்டித்து வதம் செய்தாள்.

    இதனைக் கண்ட தேவர்களும் & முனிவர்களும் மகிஷாசுரமர்த்தினி என்று துர்க்கையை வாயார போற்றி துதித்தனர்.

    இதனைக் குறிப்பது தான் நவராத்திரி என்பதாகும்.

    Next Story
    ×