என் மலர்
நீங்கள் தேடியது "நவராத்திரி பூஜை"
- அக்கார வடிசல் நிவேதனம் செய்ய வேண்டும்.
- சாமுண்டி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் கேது.
நவராத்திரியின் ஒன்பதாம் நாளன்று அன்னை பராசக்தி சாமுண்டியாக வழிபாடு செய்யப்படுகிறாள். முண்டன் என்ற அசுரனை வதம் செய்ததால் சாமுண்டி என்று அழைக்கப்படுகிறாள். தர்மத்தை நிலைநாட்டுபவள். நம்மை காத்து அருளக்கூடியவள்.
சாமுண்டியை வழிபட கலர் கோலமாவினால் ஆயுதம் கோலம் போட வேண்டும். 77 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். பஞ்சு திரி 56 போட்டு எள் எண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் தீபங்கள் ஏற்றலாம். அக்கார வடிசல் நிவேதனம் செய்ய வேண்டும். தாமரை மல்லிகை பூக்கள் மற்றும் மரிக்கொழுந்து கொண்டு பூஜிக்க வேண்டும்.
"கௌரி அன்னை மேனியிலே கருவாகி மலர்ந்தவளே! நவராத்திரி ஒன்பதாம் நாள் நலம் கூட்டும் கலைமகளே தாயே நீ அன்பு வைத்தால் பார்முழுதும் எனைப்புகழும் ஏழிசையும் என்பாட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்."
என பாடி துதிக்க வேண்டும்.
சாமுண்டி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் கேது. எனவே சாமுண்டியை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் நிவர்த்தியாகும். உள்ளுணர்வு மேம்படும், மன தைரியத்துடன் பணிகளை மேற்கொள்ளும் திறன் கிடைக்கும். பேச்சுக்கலை மேம்படும். எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் உறுதியான சக்தி தருவாள். மக்களை கவரும் ஆற்றலைத் தருவாள்.
- இது பெரும்பாலும் தெரிந்தோ தெரியாமலோ தவறுகளுக்கு வழிவகுக்கிறது.
- வீட்டிற்கு வரும் பெண்கள் முழு உணவை சாப்பிடவில்லை என்றால் அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.
அம்பாளுக்கு மிகவும் பிடித்தமான நவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. நவராத்திரியின் போது பெண் குழந்தைகளை வழிபடுவது அவசியம் என்று நம்பப்படுகிறது. பெண் குழந்தைகளை வழிபடாமல் நவராத்திரி முழுமையடையாது என்றும் கூறப்படுகிறது. பெண் குழந்தைகளை வழிபடுவது என்பது துர்கா தேவியின் ஆசிகளை நேரடியாகப் பெறுவதாகும்.
ஒவ்வொரு நவராத்திரியின் அஷ்டமி மற்றும் நவமி பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை. சிலர் அஷ்டமி அன்று கன்னியா பூஜை செய்கிறார்கள், மற்றவர்கள் அதை நவமி அன்று செய்கிறார்கள். இந்த வருடம், அஷ்டமி இன்றும், நவமி நாளை என வருகின்றன.
கன்னியா பூஜையின் போது பல நேரங்களில், மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறுகளைச் செய்கிறார்கள். இதனால் ஒன்பது நாள் விரதம் தோல்வியடைகிறது. இதனால் நாம் செய்யும் தவறுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்...
கன்னியா பூஜையின் போது என்ன தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்...
1. கன்னியா பூஜை யின் போது வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நீங்கள் என்ன பரிசு கொடுத்தாலும், கருப்பு நிறத்தைத் தவிர்க்க வேண்டும். கருப்பு நிறப் பொருட்களைப் பரிசளிப்பது அபசகுணமாகக் கருதப்படுகிறது. பரிசுகளை வழங்கும்போது நாம் பெரும்பாலும் இதை கவனிக்காமல் விடுகிறோம். இது பெரும்பாலும் தெரிந்தோ தெரியாமலோ தவறுகளுக்கு வழிவகுக்கிறது.
2. கன்னியா பூஜைக்குப் பிறகு மக்கள் பெரும்பாலும் எஃகு கிண்ணங்கள் அல்லது தட்டுகளை பரிசளிப்பார்கள். மத நம்பிக்கைகளின்படி இதுவும் பொருத்தமானதல்ல. நீங்கள் பரிசளிக்க வேண்டியிருந்தால், எஃகுக்குப் பதிலாக மற்ற உலோகங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களை வழங்க வேண்டும்.
3. இரும்புப் பொருட்களைப் பரிசாகக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கன்னியா பூஜையின் போது அவ்வாறு செய்வது சனி தோஷத்தைத் தரும். பரிசுகளை வாங்கும்போது இதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.
4. கன்னியா பூஜைக்குப் பிறகு பரிசுகளை வழங்கும்போது, தவறுதலாக கூட, தோல் கொண்ட எந்தப் பொருளையும் கொடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5. வீட்டிற்கு வரும் பெண்கள் முழு உணவை சாப்பிடவில்லை என்றால் அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.
- வாழ்வில் முழுமை நிலையை பெறுவதுடன், போதும் என்ற நிறைவான நிம்மதியான மனதையும் இந்த அம்பிகை வழங்குகிறாள்.
- தாமரை மலர் கொண்டும், மரிக்கொழுந்து இலை கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.
நவராத்திரி விழாவில் தேவியை ஒன்பதாவது நாளில் நாம் சித்திதாத்ரி என்ற பெயரில் வழிபடுகிறோம். சித்தி என்றால் வெற்றி என்று பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். தாத்ரி என்றால் தருபவள் என்று பொருள். சித்திதாத்ரி என்றால் அனைத்திலும் வெற்றியை தருபவள் என பொருள்.
நவராத்திரியின் 9 ஆம் நாளில் அம்பிகையை மகேஸ்வரி என்ற ரூபத்திலும், நவதுர்க்கை வழிபாட்டில் சித்திதாத்ரி என்ற பெயரிலும் வழிபடுகிறோம். இன்று தாமரை வகை கோலமிட்டு அம்பிகையை வழிபடலாம். தாமரை மலர் கொண்டும், மரிக்கொழுந்து இலை கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.
சித்திதாத்ரி தேவியை வழிபடுவதால் வாழ்வில் முழுமை நிலையை பெறுவதுடன், போதும் என்ற நிறைவான நிம்மதியான மனதையும் இந்த அம்பிகை வழங்குகிறாள். வாழ்க்கையில் எல்லாம் கிடைத்து விட்டது என்றால், அதற்கு பிறகு ஒவ்வொரு மனிதனும் வேண்டுவது மன நிம்மதியை தான். அந்த நிறைவான நிம்மதியை இந்த அம்பிகை நமக்கு அருள்வாள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் பக்தர்கள் இளஞ்சிவப்பு நிறத்திலான ஆடை அணிய வேண்டும். இளஞ்சிவப்பு நிறம் அன்றைய நாளில் நம்பிக்கை, எழுச்சி மற்றும் அன்பு மற்றும் நல்லிணக்கத்தை வரையறுக்கிறது. நவராத்திரி கொண்டாட்டத்தின் போது இளஞ்சிவப்பு நிறத்தை அணிவது உங்களை வசீகரமாகவும் அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது. அதே நேரத்தில் உலகளாவிய அன்பின் அருளையும் உங்களுக்கு வழங்குகிறது.
- நரசிம்மியை பன்னீர் ரோஜா, செவ்வரளி பூக்கள் மற்றும் பன்னீர் இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
- நரசிம்மி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் ராகு.
நவராத்திரியின் எட்டாம் நாளன்று அன்னை பராசக்தி, நரசிம்மியாக வழிபாடு செய்யப்படுகிறாள். நரசிம்மரின் சக்தியாக விளங்கக்கூடியவள். நரசிம்மி மனித உடலும், சிங்க முகமும் கொண்டவள். சிங்க வாகனத்தில் அமர்ந்து இருப்பவள். எதிரிகளை அழித்து நம்மை காத்து அருளக்கூடியவள்.
நரசிம்மியை வழிபட காசு கொண்டு தாமரை கோலம் போட வேண்டும். 18 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். எள் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம். பாயாசம் நிவேதனம் செய்ய வேண்டும். பன்னீர் ரோஜா, செவ்வரளி பூக்கள் மற்றும் பன்னீர் இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
"நாமகளே சரஸ்வதியே நான்முகனின் நாயகியே!
நாடி வந்தோம் சந்நிதியே நம்பி வந்தோம் அம்பிகையே! அம்புடன் வில் சங்கு சக்கரம் மணிசூலம் உடையவளே சும்பன் வதம் புரிந்தவளே சுடர்விழியே மலர்மகளே."
என பாடி துதித்தால் வேண்டும் வரம் தருவாள்.
நரசிம்மி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் ராகு. எனவே நரசிம்மியை வழிபடுவதன் மூலம் ராகு தோஷம் நிவர்த்தியாகும். வெளிநாடு அல்லது வெளிநாட்டுத் துறைகளில் இருந்து தொழில் மற்றும் வியாபார வாய்ப்புகளை வழங்குவாள். மனதில் உற்சாகம் பிறக்கும், அரசு வழியில் ஆதரவு கிடைக்கும், எதிர்பாராத திடீர் செல்வத்தையும், புகழையும் தருவாள்.
- மகாகௌரி நவதுர்க்கைகளில் எட்டாவது அவதாரமான துர்க்கையின் வடிவமாவார்.
- மகாகௌரி வெண்மை நிற மேனியைக் கொண்டவர்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் - பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.
இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
நவராத்திரியின் 8-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'மகாகௌரி'. மகாகௌரி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.
மகாகௌரி என்பவர் நவதுர்க்கைகளில் எட்டாவது அவதாரமான துர்க்கையின் வடிவமாவார். இவர் நவராத்திரியின் எட்டாம் நாளில் வழிபடப்படும் சக்தி வாய்ந்த தெய்வமாகும். மகாகௌரி தூய்மை, அமைதி, அழகு, கருணை ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.
நவராத்திரி பண்டிகையின் எட்டாம் நாளில் வழிபடப்படும் மகாகௌரி வெண்மை நிற மேனியைக் கொண்டவர். மகாகௌரி என்றால் "வெண்மை" என்று பொருள்படும். மகாகௌரி தனது பக்தர்களின் பாவங்களை நீக்கி, மனதில் அமைதியையும், விருப்பங்களையும் நிறைவேற்றுபவர்.
"மகா" - பெரிய, "கௌரி" - பிரகாசம்.
மிகச் சுத்தமான பளிங்கு போன்ற பொன்னிற-வெண்மையான உடல் கொண்டவள். மகாகௌரியின் வாகனம் வெள்ளை காளை (நந்தி). அவரது ஆடை வெண்மை நிறம்.
சிவ மகாபுராணத்தில் மஹாகௌரி தேவி வரலாறு:
பார்வதி தேவி சிறுவயதிலிருந்தே சிவபெருமானையே தனது கணவனாக அடைய விரும்பினாள். அவரது விருப்பத்தை கண்டு, நாரதர் அவருக்கு கடுமையான தவம் செய்ய அறிவுரை கூறினார்.
இமயமலையின் காட்டில் பார்வதி தேவி பல வருடங்கள் கடுமையான தவம் செய்தாள். இதனால், அவளது உடல் மிகவும் வாடி, கருமையான நிறமடைந்தது.
அப்போது, அவளது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அவளை அருளால் ஏற்றுக்கொண்டார். அவரது கருமை நிறம் நீங்குவதற்காக சிவபெருமான், பார்வதியை கங்கை நதியில் நீராடச் செய்தார்.
நீராடிய பின்னர் பார்வதியின் உடல் பளிங்கு போன்ற வெண்மையுடன் மிளிர்ந்தது. அவள் மிகச் சுத்தமான, ஒளிவீசும் வடிவில் தோன்றினாள். அந்த உருவமே மஹாகௌரி என்று அழைக்கப்பட்டது.
வெள்ளை நிறம், அவளது முழுமையான சுத்தத்தின் அடையாளமாகக் கூறப்படுகிறது. சிவனின் சக்தியாக, அனைத்து பாவங்களையும் அழித்து, பக்தர்களுக்கு புதிய வாழ்வு, அமைதி, முக்தி தருகிறாள்.
நல்லவர்களைப் பாதுகாப்பதும், தீய செயல்களைச் செய்பவர்களைத் தண்டிப்பதும் மகாகௌரியின் நோக்கம். மகாகௌரி தேவி தனது பக்தர்களின் வாழ்க்கையில் உள்ள அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி, அனைத்து துன்பங்களையும் நீக்கும் சக்தி கொண்டவள்.
ஸ்லோகம்:
'ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் மஹாகௌர்யை நம' என்று ஜபிக்க வேண்டும்.
மகாகௌரியை வழிபட்டால் பாவங்கள் நீங்கும். குடும்பத்தில் சாந்தி நிலைக்கும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் ஏற்படும்.
- ஒவ்வொரு நாளுக்கு உகந்த தேவியை மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.
- முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை.
இந்து மதத்தில் பற்பல பண்டிகைகள் இருந்தாலும் பெண்களுக்குத் தனி கவுரவம் அளித்துப் பெண்களைப் போற்றும் பண்டிகைகளில் தலையாயது நவராத்திரி. மற்ற பல பண்டிகைகள் ஒருநாள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி மட்டும் விமரிசையாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்பாளுக்கு உகந்த பண்டிகை என்பதால் பெண்கள் பய பக்தியுடன் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளுக்கு உகந்த தேவியை மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.
இந்த நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை. ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும்.
அப்படியான நவராத்திரியின் எட்டாம் நாளில் மகாகவுரி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால் மயில் பச்சை நிறத்திலான ஆடையே பக்தர்கள் அணிந்து வழிபட வேண்டும். நீலம் மற்றும் பச்சை கலவையானது தனித்துவத்தை குறிக்கும் நிறமாகுகிறது.
- பிரம்ம தேவரின் அம்சமாகவும், சரஸ்வதி தேவியின் உருவமும் கொண்டவள் பிராம்மி.
- தாழம்பூ, தும்பை மற்றும் மஞ்சள் நிற பூக்கள் கொண்டு பூஜிக்க வேண்டும்.
நவராத்திரியின் ஏழாம் நாளன்று அன்னை பராசக்தி, பிராம்மியாக வழிபாடு செய்யப்படுகிறாள். பிரம்ம தேவரின் அம்சமாகவும், சரஸ்வதி தேவியின் உருவமும் கொண்டவள் பிராம்மி. நான்கு கரங்களை கொண்டு அன்னப்பறவையில் வீற்றிருப்பவள். வெண்ணிற ஆடை தரித்தவள். தர்ப்பை புல்லில் வாசம் செய்பவள்.
பிராம்மியை வழிபட மலர் கொண்டு திட்டாணி கோலம் போட வேண்டும். நல்லெண்ணெய் கொண்டு 19 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். தாழம்பூ, தும்பை மற்றும் மஞ்சள் நிற பூக்கள் கொண்டு பூஜிக்க வேண்டும்.
"பிராம்மி தாயே கலைமகள் நீயே! அருள் நவராத்திரி ஆண்டருள் வாயே ஏழாம் நாள் இன்று உன் திருக்காட்சி இன்னும் இருநாள் உனதருளாட்சியே" என பாடி துதித்தால் வேண்டும் வரம் தருவாள்.
பிராம்மி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் சனி.எனவே பிராம்மியை வழிபடுவதன் மூலம் சனி தோஷம் நிவர்த்தியாகும். கர்ம வினைகள் தீரும், நிலையான தொழில் சிறக்கச் செய்வாள். தீர்க்க ஆயுசு வாழ அருள் புரிவாள்.
- காலராத்திரி என்றால் இருளை அழிப்பவள் என்று பொருள்.
- காலராத்திரி தேவியை வழிபடுவதால் துன்பங்கள், தடைகள் நீங்கி, பக்தர்களுக்கு தைரியமும், நன்மைகளும் கிடைக்கும்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் – பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.
இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
நவராத்திரியின் 7-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'காலராத்திரி தேவி'. காலராத்திரி என்பவள் நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.
காலராத்திரி தேவி
காலராத்திரி என்பது துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் ஒன்றாகவும், துர்கைகளில் ஏழாவது உருவமாகவும் கருதப்படுகிறார். துர்கையில் 9 வடிவங்களிலும் மிகவும் உக்கிரமான வடிவமாக தேவி காலராத்திரி விளங்குகிறார். நவராத்திரி ஏழாம் நாளில் காலராத்திரி தேவியை வழிபட வேண்டும்.
காலராத்திரி தேவியின் சிறப்பு அம்சங்கள்:
காலராத்திரி என்பது "கால" என்றால் காலம் அல்லது இருள், "ராத்திரி" என்றால் இரவு என்று பொருள். எனவே காலராத்திரி என்றால் இருளை அழிப்பவள் என்று பொருள்.
ஷும்பன் – நிஷும்பன் வதம்
மார்கண்டேய புராணத்தின் தேவி மாஹாத்மியம் படி, அசுரர்களின் அரசனான ஷும்பன் - நிஷும்பன் இருவரும் உலகையும் தேவர்களையும் துன்புறுத்தினர்.
அவர்களை அழிக்க அம்பிகை தேவியின் உடலிலிருந்து பல உக்கிர வடிவங்கள் தோன்றின. அதில் ஒன்றுதான் காலராத்திரி.
காலராத்திரி தோன்றியதும், மஹாசுரர்களின் படைகள் அனைத்தும் இருளில் மூழ்கின. தேவியின் மூச்சில் இருந்து தீக்கதிர்கள் பீறிட்டன. யுத்தத்தில் காலராத்திரி தேவி பல அசுரர்களை அழித்து, ஷும்பன்–நிஷும்பன் படைகளை முறியடித்தார்.
ரக்தபீஜன் வதம்
மார்கண்டேய புராணத்தில் ஷும்பனுக்கு உதவியாக ரக்தபீஜன் என்ற அசுரன் இருந்தான். அவன் ரத்தத்தின் ஒரு துளி பூமியில் விழுந்தால், அதிலிருந்து மற்றொரு ரக்தபீஜன் உருவாகும் என்று வரத்தை பெற்று இருந்தான். இதனால் அவன் அசுரர்களின் பெரும் பலம் வாய்ந்தவனாக இருந்தான். அந்த அசுரனை யாராலும் அழிக்க முடியவில்லை.
அப்போது காலராத்திரி தோன்றி, போர்க்களத்தில் அவன் ரத்தத்தை குடித்தார். அதன் மூலம் அவன் ரத்தம் தரையில் சிந்தாமல் தடுத்துவிட்டு, அவனை முழுமையாக அழித்தார்.
இந்த தேவியை வழிபடுவதால் துன்பங்கள், தடைகள் நீங்கி, பக்தர்களுக்கு தைரியமும், நன்மைகளும் கிடைக்கும். தன் பக்தர்களுக்கு எல்லா விதமான மகிழ்ச்சியையும், செல்வத்தையும், இருளை நீக்கும் சக்தியையும் தருபவர்.
ஸ்லோகம்:
'ஓம் தேவி காலராத்ரியாயை நம' என்று ஜபிக்க வேண்டும்.
- பிரசித்தி பெற்ற திருக்கோவில்களிலும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- பார்வதி தேவியின் மிகவும் உக்கிரமான மற்றும் மிகவும் பாதுகாப்பான வடிவமான காலராத்திரி தேவியை வழிபட வேண்டிய நாள்.
நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்பாளுக்கு உகந்த பண்டிகை என்பதால் பெண்கள் பய பக்தியுடன் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளுக்கு உகந்த தேவியை மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.
நவராத்திரி பூஜைக்கான சுலோகங்கள், மந்திரங்கள் எதுவும் தெரியவில்லையா? கவலையே வேண்டாம். 'ஓம் ஸ்ரீலலிதா தேவியே நம' என்பதை 108 தடவை சொன்னாலே போதும். நினைத்த பலன் கிடைக்கும்.
மேலும், வீட்டில் அமைக்கப்பட்டு இருக்கும் கொலுவை காண வருமாறு நண்பர்கள், உறவினர்களை அழைத்து அவர்களை உபசரிக்கின்றனர். பிரசித்தி பெற்ற திருக்கோவில்களிலும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நவராத்திரியின் ஏழாம் நாளான இன்று பக்தர்கள் பார்வதி தேவியின் மிகவும் உக்கிரமான மற்றும் மிகவும் பாதுகாப்பான வடிவமான காலராத்திரி தேவியை வழிபட வேண்டிய நாள். காலராத்திரி பயமின்மை மற்றும் துணிச்சலின் பண்புகளை உள்ளடக்கியதால், வலிமை மற்றும் பாதுகாப்பை நாடுபவர்களுக்கு இந்த நாள் குறிப்பிடத்தக்கது.
காலராத்திரி தேவியை வழிபட இன்று பக்தர்கள் ஆரஞ்சு நிறத்திலான ஆடையே அணிய வேண்டும். ஆரஞ்சு நிறமானது மகிழ்ச்சி, சக்தி மற்றும் அரவணைப்பின் நிறம். இன்றைய நாளில் ஆரஞ்சு நிற ஆடையே அணிந்து பூஜை அறை மற்றும் இல்லத்தை ஆரஞ்சு நிறத்திலான மலர்களை கொண்டு அலங்கரியுங்கள்.
- வஜ்ராயுதத்தை கொண்டு ஐராவதம் யானையில் வீற்றிருப்பவள் இந்திராணி.
- இந்திராணியை வழிபடுவதன் மூலம் குரு தோஷம் நிவர்த்தியாகும்.
நவராத்திரியின் ஆறாம் நாளன்று அன்னை பராசக்தி, இந்திராணியாக வழிபாடு செய்யப்படுகிறாள். இந்திரனின் சக்தி வடிவமாக திகழக்கூடியவள். மகேந்திரி என்றும் அழைக்கப்படுபவள். வஜ்ராயுதத்தை கொண்டு ஐராவதம் யானையில் வீற்றிருப்பவள். சத்ரு பயம் மற்றும் மரண பயத்தை அழிக்கக்கூடியவள். உயர் பதவிகளில் உள்ள இடையூறுகளை தகர்க்கக்கூடியவள்.
இந்திராணியை வழிபட பருப்பு மாவால் தேவி நாமத்தை கோலம் போட வேண்டும். 16 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். வாழை நார் திரி போட்டு கிராம்பு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தீபங்கள் ஏற்றலாம். தேங்காய் சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். செம்பருத்தி மற்றும் சிவப்பு நிற பூக்கள் மற்றும் சந்தன இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
"பொன்னான அன்னை இந்திராணியே புகழ்பாடி வந்தேன் இந்திராணியே கல்லார்கள் என்ன கற்றோர் என்ன நல்லோர்கள் என்ன தீயோர் என்ன உள்ளாரைக் மேன்மையெல்லாம் உண்டாகுமே"
என பாடி துதித்தால் வேண்டும் வரம் தருவாள்.
இந்திராணி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் குரு. எனவே இந்திராணியை வழிபடுவதன் மூலம் குரு தோஷம் நிவர்த்தியாகும். கட்டுமஸ்தான உடல்வாகு, நிரந்தரமான வெற்றி, மற்றும் மரியாதை பெறும் நிலையை அருள்வாள். நல்ல உறவுகள் விசுவாசமான மனைவியையும் குழந்தைகளையும், உயிருக்கும் மேலான நண்பர்களையும் பெற்று வாழலாம். ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு மேன்மையைத் தருவாள்.
- இன்று அநீதியை அழித்தல் கடவுளான காத்யாயனி தேவி வழிபடப்படுகிறார்.
- அரச மரத்தின் அடியில் வைத்து விட வேண்டும்.
நவராத்திரி அம்பாளுக்கு மிகவும் விருப்பமான பண்டிகை. அப்படியான நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று அநீதியை அழித்தல் கடவுளான காத்யாயனி தேவி வழிபடப்படுகிறார்.
புனித விழாவாக கருதப்படும் நவராத்திரி முழுவதும், மக்கள் ஏதாவது ஒரு பரிகாரத்தை கடைப்பிடிக்கின்றனர். இன்று, வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்க உதவும் ஒரு எளிய பரிகாரத்தைப் பற்றி பார்ப்போம்.
தேங்காய் பரிகாரத்தின் முக்கிய அம்சங்கள்...
இந்த எளிய பரிகாரத்தின் நோக்கமும் செயல்முறையும் பின்வருமாறு:
தேவையான பொருள்: ஒரு முழுமையான தேங்காய்.
செய்யும் முறை:
* பூஜை அறையில் அல்லது சுத்தமான இடத்தில் அமர்ந்து தேங்காயை மடியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
* முழுமையான நம்பிக்கையுடன் 'ஓம் தும் துர்காயை நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
* மந்திரத்துடன் சேர்ந்து, உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் மற்றும் தடைகளை நீக்குமாறு துர்கா தேவியிடம் மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
* பிரார்த்தனை முடிந்ததும், அந்தத் தேங்காயை எடுத்துச் சென்று அருகில் உள்ள அரச மரத்தின் அடியில் வைத்து விட வேண்டும்.
நம்பிக்கை:
* தேங்காய் அனைத்து எதிர்மறை ஆற்றலையும் (Negative Energy) மற்றும் தடைகளையும் தனக்குள் உறிஞ்சிக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது.
இந்த பரிகாரத்தால் கிடைக்கும் பலன்கள்:
* இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பின்வரும் பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
காரியத் தடைகள் நீங்கும்:
நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு செயலிலும் இருக்கும் தடைகள் படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
கடன் பிரச்சனைகள் தீரும்:
பணப்புழக்கம் சீராகி, கடன் சுமை குறைய வழிவகுக்கும்.
உறவுகள் மேம்படும்:
குடும்ப உறவுகள், நண்பர்கள் மற்றும் பிறருடனான உறவுகளில் இருந்த சிக்கல்கள் நீங்கி, நல்லிணக்கம் உண்டாகும்.
திருமணத் தடை விலகும்:
நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தைச் செய்தால், விரைவிலேயே நல்லபடியாகத் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
- காத்யாயன முனிவர் அம்பாளை நோக்கித் தவம் இருந்து, தேவியை தன் மகளாகப் பெற்றார்.
- கடுமையான போரில் மகிஷாசுரனை வதம் செய்து, உலகத்தை அசுரரிடமிருந்து காப்பாற்றினார்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் – பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.
இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
நவராத்திரியின் 6-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'காத்யாயனி தேவி'. காத்யாயனி என்பவள் நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.
காத்யாயன முனிவர் அம்பாளை நோக்கித் தவம் இருந்து, தேவியை தன் மகளாகப் பெற்றார். காத்யாயனரின் தவப் பலனாக தேவி காத்யாயனியின் வடிவம் பெற்றதால், அவளுக்கு 'காத்யாயனி' என்று அழைக்கப்படுகிறார்.
மகிஷாசுரன் என்ற அசுரன் தேவகோட்டங்கள் அனைத்தையும் துன்புறுத்தியபோது, விஷ்ணு, சிவன், பிரம்மன் ஆகியோரின் சக்திகள் இணைந்து உருவானவள் துர்கை. அந்த சக்தியே காத்யாயனி. இவர் கடுமையான போரில் மகிஷாசுரனை வதம் செய்து, உலகத்தை அசுரரிடமிருந்து காப்பாற்றினார். காத்யாயனி தேவி சிங்க வாகனத்தில் அமர்ந்திருப்பார்.
நவராத்திரி வழிபாடு:
துர்கா வழிபாட்டில் நவராத்திரியின் ஆறாவது நாளில் காத்யாயனி வழிபாடு செய்யப்படுகிறாள். மகாசுரனை வதம் செய்ய துர்கா தேவி எடுத்த அவதாரங்களில் இதுவும் ஒன்று.
பாகவத புராணத்தில், யமுனையின் கரையில் கோபிகைகள் 'காத்யாயனி விரதம்' இருந்து, "கிருஷ்ணனை எங்கள் வாழ்க்கைத்துணையாக வேண்டும்" என வேண்டினார்கள். அவர்களின் விருப்பம் நிறைவேறியது. அதனால் இவர் திருமண ஆசீர்வாதம் வழங்குபவள் என்றும் கருதப்படுகிறார்.
திருமண வரம் அருளும் தேவியாக குன்றத்தூரில் காத்யாயனி அம்மன் கோவில் கொண்டுள்ளாள்.
மார்கழி மாதத்தில் வடமாநிலங்களில் இளம்பெண்கள் நல்ல வாழ்க்கைத்துணையை வேண்டி "காத்யாயனி விரதம்" அனுசரிக்கின்றனர்.
காத்யாயனி தேவியை வழிபடுவதால் துணிவு, திருமண சௌபாக்கியம், அசுர சக்திகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். பக்தர்களை பாபங்களிலிருந்து காப்பாற்றி, சௌபாக்கியமும் துணிவும் அருள்பவர்.
ஸ்லோகம்:
'ஓம் தேவி காத்யாயன்யை நமஹ' என்று ஜபிக்க வேண்டும்.






