search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நவராத்திரி விழா-மகேஸ்வரி வடிவம்
    X

    நவராத்திரி விழா-மகேஸ்வரி வடிவம்

    • மகேஸ்வரியை “குமாரி” வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.
    • குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள்.


    வடிவம்: மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)

    பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.

    திதி : பிரதமை

    கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.

    ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.

    பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

    மகேஸ்வரி அலங்காரம்

    நவராத்திரி முதல் நாள் மதுகைடப வதத்துக்கு மூலகாரணமான தேவியை மகேஸ்வரியாக வழிபட வேண்டும்.

    மகேஸ்வரியை அபயவரஹஸ்தத்தோடு, புத்தகம், அட்ச மாலையுடன் "குமாரி" வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.

    இந்த "குமாரி" தேவிக்கு, மல்லிகை விசேஷம்.

    எனவே மல்லிகை அர்ச்சனை உகந்தது.

    அம்பாள், சங்கீதப்பிரியை ஆயிற்றே... எனவே, தினமும் சுவாரஸ்யமான சங்கீதம் வீட்டில் தவழ்ந்தால் சுபிட்சம் பெருகும்.

    முதல் நாளில் தோடி ராகத்தில் அமைந்த கீர்த்தனைகளை பாடினால் விசேஷம்.

    குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள்.

    பிரதமை திதியில் இரண்டு வயதுக் குழந்தையை (தன் வீட்டுக் குழந்தை அல்ல) அழைத்து வந்து அவளை அன்னை குமாரியாகவே பாவித்து, அவளுக்கு ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.

    குழந்தைக்கு அணிவித்த ஆடை, அணிகலன்களைத் திரும்ப வாங்கி விடக்கூடாது.

    தேவி பாகவதத்தின் முதல் அத்தியாயத்தையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாஷரி மந்திரத்தையும் ஓதித் துதித்தால் குமாரி தேவியின் அருள் பரிபூரணமாய்க் கிட்டும்.

    பிரதமை திதியில் நாம் வணங்கும் குமாரி தேவி நமக்கு குறைவற்ற வாழ்வு தருவாள்.

    குழந்தையின் கள்ளம், கபடமற்ற மன நிலை நமக்கு வந்தால் தான் இறைவனை நாம் அடைய முடியும்.

    மகேஸ்வரி சிவனின் சக்தி. வெள்ளை நிறம் கொண்டவள்.

    இவளுக்கு ஐந்து முகம் உண்டு.

    Next Story
    ×