நவராத்திரியின் 4ம் நாள் இன்று..! கூஷ்மாண்டா தேவிக்கு உச்சரிக்க வேண்டிய முக்கிய மந்திரம்

சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம். நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
நவராத்திரியின் 4ம் நாள் இன்று..! கூஷ்மாண்டா தேவிக்கு உச்சரிக்க வேண்டிய முக்கிய மந்திரம்
Published on

நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.

அதன்படி, நவராத்திரியின் நான்காம் நாள், துர்கா தேவியின் கூஷ்மாண்டா வடிவத்தை வழிபடும் நாளாகும்.

கூஷ்மாண்டா தேவிக்கான முக்கிய மந்திரம்:

ஸ்ரீ தேவி கூஷ்மாண்டாயை நமஹ.

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்தால் சக்தி, படைப்பாற்றல் மற்றும் நிறைவான வாழ்வு கிட்டும் என்று நம்பப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com